ஆரியா (திரைப்படம்)

ஆரியா (Aarya) 2007 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் பாவனா நடிப்பில், மனோஜ் குமார் தயாரிப்பில், பாலசேகரன் இயக்கத்தில், மணிசர்மா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.

ஆரியா
இயக்கம்பாலசேகரன்
தயாரிப்புமனோஜ்குமார்
விஜய் ஆனந்தன்
கதைபாலசேகரன்
இசைமணிசர்மா
நடிப்புமாதவன்
பாவனா
பிரகாஷ் ராஜ்
வடிவேலு
ஒளிப்பதிவுகே. வி. குகன்
படத்தொகுப்புவி. ஜெய்சங்கர்
கலையகம்குரு பிலிம்ஸ்
வி.ஜே. மூவிஸ்
விநியோகம்ரேகா கம்பைன்ஸ்
வெளியீடுஆகத்து 10, 2007 (2007-08-10)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

தாதாவான காசியின் (பிரகாஷ் ராஜ்) தங்கை தீபிகா (பாவனா) பிடிவாத குணமுள்ள, பணக்காரப் பெண். தன் தங்கை மீது மிகுந்த அன்பு வைத்துள்ள காசி அவள் கேட்பதையெல்லாம் செய்து தருகிறான். அதுவே அவளை மிகுந்த பிடிவாதமுள்ளவளாக மாற்றிவிடுகிறது. சென்னையிலுள்ள மருத்துவக் கல்லூரியில் மாணவியான அவளின் கட்டளைப்படியே அந்தக் கல்லூரியில் அனைத்தும் நடக்கிறது. சக மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அந்தக் கல்லூரியின் முதல்வர் உட்பட அனைவரும் காசிக்குப் பயந்து தீபிகாவின் உத்தரவுப்படி நடக்கின்றனர்.

கோயமுத்தூரிலிருந்து தீபிகா படிக்கும் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மாறுதலாகி வரும் இறுதியாண்டு மாணவன் ஆரியா (மாதவன்). மற்றவர்களைப் போல தீபிகாவிற்கு அடிபணிய மறுக்கும் ஆரியா அவளிடம் மோதல் போக்கைக் கடைபிடிக்கிறான். இதனால் அவனது தங்கையைக் கடத்தி அவனை மிரட்டும் தீபிகாவை தைரியமாக எதிர்கொண்டு தன் தங்கையை மீட்கிறான். ஆரியாவின் துணிச்சலான குணத்தை ரசிக்கும் தீபிகா அவனை காதலிக்கத் தொடங்குகிறாள். ஆனால் தீபிகாவின் காதலை ஏற்க ஆரியா மறுக்கிறான். காசியும் தன் தங்கையைத் திருமணம் செய்துகொள்ள ஆரியாவை மிரட்டுகிறான். இறுதியில் வென்றது யார்? என்பதே மீதிக்கதை.

பிச்சைக்காரனாக இருந்து திடீரென கிடைத்த வாய்ப்பில் மாநகராட்சி உறுப்பினராகும் ஸ்நேக் பாபு (வடிவேலு) வரும் காட்சிகள் நகைச்சுவைக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன.

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் மணிசர்மா. பாடலாசிரியர் பா. விஜய்.[1]

வெளியீடு தொகு

இப்படம் தெலுங்கில் ஆரியா எம். பி. பி. எஸ். என்றும், இந்தியில் மை டியர் பிக் பி என்றும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.

இப்படத்தில் வடிவேலு பேசும் பிரபல நகைச்சுவை வசனமான "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்"[2] என்பதைத் தலைப்பாகக் கொண்டு 2015 இல் தமிழ் திரைப்படம் ஒன்று வெளியானது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "பாடல்கள்". 2016-12-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-02-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் - திரைப்படம்".
  3. "படங்களின் தலைப்பான வடிவேலுவின் பிரபல வசனங்கள்".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியா_(திரைப்படம்)&oldid=3659403" இருந்து மீள்விக்கப்பட்டது