நம்பி நாராயணன்

நம்பி நாராயணன், இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரி ஆவார். கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் முதன்மையாகச் செயல்பட்டவராவார். மத்தியப் புலனாய்வுத் துறையால் தவறுதலாக 1994ல் உளவு பார்த்தல் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, பின்னர் 1998ல், இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து விடுவிக்கப்பட்டார்.[2]

எஸ். நம்பி நாராயணன்
Nambi Narayanan.jpg
2017-இல் நம்பி நாராயணன்
பிறப்பு12 திசம்பர் 1941 (1941-12-12) (அகவை 78)
நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்,
கல்விபிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்,
தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை, இளங்கலை பொறிவியியல்
பணிஇந்திய விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநர்
விருதுகள்பத்ம பூசண்[1]

பணிதொகு

1970களின் ஆரம்ப காலத்தில் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் குழுவில் பணியாற்றிய போது, ஏவுவாகனத் திரவ எரிபொருள் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். திரவ எரிபொருள் இயந்திரங்களின் எதிர்காலத் தேவையை முன்கூட்டியே கணித்தார். இஸ்ரோவின் தலைவர் சதீஷ் தவான், யு. ஆர். ராவ் ஆகியோரின் ஆதரவுடன், 600 கிலோ அழுத்தம் கொண்ட முதல் திரவ உந்து வாகனத்தை 1970களில் வெற்றிகரமாக உருவாக்கினார்.

சர்ச்சையும், இழப்பீடும்தொகு

1994ல் மாலைத்தீவுகள் உளவு அதிகாரிகளுக்கு முக்கிய பாதுகாப்பு இரகசியங்களை வழங்கியதாகப் புகார் பதியப்பட்டது.[3] பல சட்டரீதியான சிக்கல்களுக்குப் பிறகு 1996 மே மாதம் மத்திய புலனாய்வுத் துறையாலும், 1998 ஏப்ரலில் இந்திய உச்ச நீதிமன்றத்தாலும் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டன.[4].

பின்னர் மீண்டும் விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்து சிறிய பணிகளைச் செய்துவந்தார். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நம்பி நாராயணன் பாதிக்கப்பட்டுள்ளதாக 1999 செப்டம்பரில் மனித உரிமைகள் ஆணையம் மூலம் கேரளம் அரசிடம் கோரப்பட்டு. 2001ல் ஐம்பது இலட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது.[5][6]. 2001ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

நம்பி நாராயணனுக்கு கூடுதலாக ரூபாய் 1.30 கோடி இழப்பீடு வழங்க 27 டிசம்பர் 2019 அன்று கேரள அரசு முடிவு செய்துள்ளது.[7]

விருதுகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பி_நாராயணன்&oldid=2888814" இருந்து மீள்விக்கப்பட்டது