தொழில்நுட்பவியல் இளையர்
தொழில்நுட்பவியல் இளையர் (ஆங்கிலம்: Bachelor of Technology) என்பது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன ஒரு நான்கு ஆண்டு இளநிலைப் பட்டம் ஆகும். இதனை சுருக்கமாக, பி. டெக். (B.Tech.) என்று குறிப்பிடுவர்.
இந்தியா
தொகுஇந்தியாவில் தொழில்நுட்பவியல் இளங்கலை (B.Tech) பட்டம் என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து நான்கு ஆண்டு முழுநேர பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பிறகு வழங்கப்படும் இளங்கலை கல்விப் பட்டமாகும்.
இப்பட்டம் பொதுவாக இந்திய தொழில்நுட்பக் கழகங்கள்(IITs),தேசிய தொழினுட்பக் கழகங்கள்(NITs), இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள்(IIITs), பிற மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றால் வழங்கப்படுகிறது.
இப்பட்டம் குடிசார் பொறியியல், வேதிப் பொறியியல், இயந்திரப் பொறியியல், மின்பொறியியல், மின்னணுப் பொறியியல், கணினியிய பொறியியல், கணினிப் பொறியியல் மற்றும் பல்வேறு பொறியியல் துறைகளில் வழங்கப்படுகிறது.
இப்பட்டம் பொதுவாக அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படும் நான்கு ஆண்டு இளங்கலை பொறியியல் அல்லது செயல்முறை அறிவியல் பொறியியலில் இளங்கலைப் பட்டத்திற்குச் சமமானதாகும்.
இந்தியாவில் இப்பட்டப்படிப்பு சேர்க்கைக்கான தகுதி தங்கள் உயர்நிலைக் கல்வியை (10+2) கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் அல்லது பிற தொழில்நுட்பப் பாடங்களுடன் கட்டாயமாக முடித்திருக்க வேண்டும். சேர்க்கை தகுதிக்கான உயர்நிலைப் பள்ளி வாரியத் தேர்வில் பொதுவாக 75% என்ற குறைந்தபட்ச மொத்த சதவீதத் தேவையை பல்கலைக்கழகங்கள் அமைக்கின்றன மற்றும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு -முதன்மை(JEE main) தொழில்நுட்பவியல் இளங்கலை சேர்க்கைக்கான ஒரு முக்கிய நுழைவுத் தேர்வாகும்.[1][2][3]
ஆத்திரேலியா
தொகுஆத்திரேலியாவில் இளங்கலைப் பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தகுதி பெறாத, ஆனால் பொறியியல் தொடர்பாக படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஏற்றதாக இப்பட்டம் இருக்கிறது. இப்பட்டத்தினை பொறியியல் படிப்பிற்கான பாதையாகவும் பயன்படுத்தலாம்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "JEE Main 2023: 75% eligibility criteria and preparation tips". The Times of India. 2023-01-09. https://timesofindia.indiatimes.com/education/news/jee-main-2023-75-eligibility-criteria-and-preparation-tips/articleshow/96790768.cms#:~:text=For%20B.,percentile%20of%20their%20respective%20boards..
- ↑ "JEE Main 2024: Tips to improve calculation". The Indian Express (in ஆங்கிலம்). 2023-12-12. பார்க்கப்பட்ட நாள் 2023-12-13.
- ↑ "நுட்பவியல் படிப்பின் காலம்" (PDF). பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா). p. பக். 40. பார்க்கப்பட்ட நாள் 13 ஜூலை 2022.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தொழில்நுட்பவியல் இளையர் (பொறியியல்)". பார்க்கப்பட்ட நாள் 13 ஜூலை 2022.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)