இளங்கலைப் பொறியியல்

இளங்கலைப் பொறியியல் (Bachelor of Engineering, பொதுவழக்கில் பி.ஈ அல்லது பொறியியல் இளங்கலை) ஆர்மீனியா, ஆத்திரேலியா, வங்காளதேசம், பல்கேரியா, கனடா, சீனா, டென்மார்க், எகிப்து, பின்லாந்து, செருமனி, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, அயர்லாந்து, ஜோர்டான், கொரியா, லெபனான், மாகடோனியா, மலேசியா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜீரியா, நோர்வே, பாகிஸ்தான், சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, இலங்கை, சுவீடன், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, வியட்நாம், சாம்பியா மற்றும் சிம்பாப்வே போன்ற பல நாடுகளில் பல்கலைக்கழகமொன்றில் மூன்றிலிருந்து ஐந்தாண்டுகள் வரை பொறியியல் துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டு ஒரு மாணவர் பெறும் பட்டமாகும்.

இப்பட்டத்திற்கான தகுதி உலகெங்கிலும் வேறுபடுவதால் இந்தப் படிப்பு ஓர் தொழில்சார் படிப்பாக இல்லாமலிருக்கவும் பொறியியல் துய்ப்பறிவு இல்லாமலிருக்கவும் வாய்ப்புள்ளது. சில நாடுகளில் இக்கல்வி தேசிய தொழில்சார் சமூகத்தின் ஒப்புதலை பெறாமலிருக்கவும் கூடும்.

சில நிறுவனங்கள் இளங்கலை அறிவியல் (பொறியியல்) (BSc Eng) அல்லது இளங்கலை பொறியல் (அறிவியல்) (BESc) அல்லது பொறியியலில் இளங்கலை அறிவியல்(BSE) அல்லது இளங்கலை செயல்முறை அறிவியல் (BASc) பட்டங்கள் வழங்குகின்றன. காட்டாக இளங்கலை செயல்முறை அறிவியல் (BASc) பட்டத்தை கனடா வழங்குகிறது.

அயர்லாந்து|அயர்லாந்தின் டப்ளின் பல்கலைக்கழகத்தில் , இளங்கலை பொறியியல் கலை Baccalaureus in Arte Ingeniaria (BAI) என்ற பட்டம் வழங்கப்படுகிறது.[1]. சில தென்னாபிரிக்க பல்கலைக்கழகங்களில் இந்தப் பட்டம் B.Ing. (Baccalaureus Ingeniaria) என்று அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கலைப்_பொறியியல்&oldid=3840012" இலிருந்து மீள்விக்கப்பட்டது