முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஜாம்சேத்பூர் (இந்தி: जमशेदपुर, உருது: جمشیدپو) சார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு முக்கிய நகரமாகும். இங்கு தான் இந்தியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இந்நகரம், டாடா நிறுவனத்தை தொடங்கிய ஜாம்ஷெட்ஜி டாடாவால் நிறுவப்பட்டபோது சாக்சி என்று அழைக்கப்பட்டது. 1919ஆம் ஆண்டு செல்ம்ஸ்போர்டு துரை இந்நகரின் நிறுவுனரின் நினைவாக ஜம்சேத்பூர் என பெயர் சூட்டினார்.

சம்சேத்பூர் சார்க்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தின் தலைநகராகும். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,337,131 மக்கள் இங்கு வாழ்கின்றனர்[1]. சம்செத்பூரின் அண்டை நகரங்களை உள்ளடக்கிய சம்சேத்பூர் மாநகரம் கிழக்கு இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய நகராகும். கொல்கத்தா, பட்னா மற்ற இரண்டு நகரங்கள். இது இந்தியாவில் 36வது பெரிய நகராகும். சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் அமைந்துள்ள இந்நகரைச்சுற்றி தால்மா மலை அமைந்துள்ளது. சவர்ணரேகா, கர்கை என்ற ஆறுகள் இதன் வடக்கிலும் மேற்கிலும் பாய்கின்றன.

சம்சேத்பூர் கிழக்கு இந்தியாவிலுள்ள பெரும் தொழில் நகராகும். டாடாவின் டாடா மோட்டார், டிசிஎசு, டாடா பவர், டாடா இரும்பு போன்ற பல நிறுவனங்களும் மற்ற நிறைய நிறுவனங்களும் இங்கு உள்ளன. இந்தியாவின் பெரிய தொழில் பகுதியான அதியபூரில் 1,200க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அதியபூர் சம்சேத்பூர் மாநகரை சேர்ந்த நகர்.

சம்சேத்பூர் 2010இல் இந்தியாவின் 7வது தூய்மையாக நகர் என்று இந்திய அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது.[2] இது 2006-2020 காலபகுதியில் உலகின் 84வது வேகமாக வளரும் நகர் என கணிக்கப்பட்டுள்ளது [3] இந்நகரின் பெரும் பகுதி டாடா இரும்பாலை நிருவாகத்தால் நிருவகிக்கப்படுகிறது. சம்சேத்பூர் ஐநாவின் உலக நெருக்கலான நகரங்கள் என்ற முன்னோடி திட்டத்தின் பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இந்நகரம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


வெளி இணைப்புகள்தொகு

  1. http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/india2/Million_Plus_UAs_Cities_2011.pdf
  2. http://pib.nic.in/archieve/others/2010/may/d2010051103.pdf
  3. "World's fastest growing urban areas (1)". City Mayors (2012-05-17). பார்த்த நாள் 2012-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்சேத்பூர்&oldid=1780724" இருந்து மீள்விக்கப்பட்டது