கமல் (இயக்குனர்)

மலையாளத் திரைப்பட இயக்குநர்

கமல் ஒரு மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது இயற்பெயர் கமாலுதீன் மொகம்மது மஜீத் (Kamaluddin Mohammed Majeed, பிறப்பு: நவம்பர் 28, 1957) ஆகும். இவர் கமல் எனும் பெயராலேயே பரவலாக அறியப்படுகிறார். இவர் கேரளாவின் திருச்சூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் முதலில் த்ராசம் எனும் திரைப்படத்தில் இணை இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றினார்.[1][2] 1986 ஆம் ஆண்டு தனது முதல் திரைப்படமான மிழிநீர்ப் பூக்கள் (Mizhineer Pookkal) என்பதை இயக்கினார். இவரது திரைப்படங்களில் பெரும்பாலும் இந்துஸ்தானி மற்றும் கஜஸ் இசை பயன்படுத்தப்பட்டிருக்கும்.[3] இவர் கருத்த பஷிகள், பெருமழக்காலம் மற்றும் செல்லுலாய்ட் ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். தமிழில் பிரியாத வரம் வேண்டும் எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

கமல்
பிறப்புகமாலுதீன் மொகம்மது மஜீத்
28 நவம்பர் 1957 (1957-11-28) (அகவை 66)
திருச்சூர், கேரளா
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1981 முதல்
வாழ்க்கைத்
துணை
சபுராபி
பிள்ளைகள்ஜனுஸ், ஹன்னா

மேற்கோள்கள் தொகு

  1. "Thraasam (1981)". malayalachalachithram.com. 2007-05-12. பார்க்கப்பட்ட நாள் 2013-02-18.
  2. http://www.imdb.com/name/nm0436382/bio
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-20. பார்க்கப்பட்ட நாள் 2014-05-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_(இயக்குனர்)&oldid=3761710" இலிருந்து மீள்விக்கப்பட்டது