பெருமழக்காலம்

பெருமழக்காலம் (பெரு மழைக்காலம் - Perumazhakkalam) ஒரு மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை இயக்கியவர் கமல் ஆவார். இதன் நடிகர் நடிகையர், மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவன், திலீப் மற்றும் வினீத் போன்றோர் ஆவர்.

பெருமழக்காலம்
இயக்கம்கமல்
தயாரிப்புசலீம் படியத்
இசைஜெயச்சந்திரன்
நடிப்புதிலீப், மீரா ஜாஸ்மின், காவ்யா மாதவன் மற்றும் வினீத்
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புகே. ராஜகோபால்
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

விருதுகள்தொகு

இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக நடிகை காவ்யா மாதவனுக்கு 2004 ஆம் ஆண்டின் கேரள மாநில அரசின் விருது வழங்கப்பட்டது.[1] இத்திரைப்படம் 2005 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றது. சிறந்த கதைக்காக இத்திரைப்படத்தின் கதாசிரியர் ரசாக்குக்கு கேரள மாநில அரசின் விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமழக்காலம்&oldid=3252212" இருந்து மீள்விக்கப்பட்டது