திலீப் (தமிழ் நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்
(திலீப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திலீப் (இறப்பு: மே 25, 2012) இந்திய நடிகர், தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். 1980-களில் உச்சத்தில் இருந்த இவர், கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த வறுமையின் நிறம் சிகப்பு மற்றும் தூங்காதே தம்பி தூங்காதே முதலியவை மிகவும் பிரபலமானவையாகும். 1990-களில் ரஜினிகாந்தின் இயக்கத்தில் வெளிவந்த வள்ளி திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் நடித்த ஞான் ஏகனன்னு மிகப்பெரிய வெற்றி பெற்றது, அத்திரைப்படத்தின் பாடல்கள் இன்று வரையிலும் கேரளாவில் பிரபலமாக உள்ளது. பெரும்பலான திரைப்படங்களில் இவர் கதையின் நாயகனுக்கு நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமலிருந்தார்.

திலீப்
பிறப்புஇந்தியா சென்னை, தமிழ் நாடு, இந்தியா
இறப்பு25 மே, 2012
இந்தியா மைசூர், கர்நாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்திலீப்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1980 - 2012
வாழ்க்கைத்
துணை
ஹேமா[1]
பிள்ளைகள்பவ்யா, மவுரியா [1]

குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1980 வறுமையின் நிறம் சிகப்பு
1982 ஞான் ஏகனன்னு மலையாளம்
1983 தூங்காதே தம்பி தூங்காதே
1988 சொல்ல துடிக்குது மனசு
சம்சாரம் அது மின்சாரம்
பெண்மணி அவள் கண்மணி
மாப்பிள்ளை

மரணம்

தொகு

2012-ம் ஆண்டு மே மாதம், 25-ம் திகதி மாரடைப்பு காரணமாக மைசூரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_(தமிழ்_நடிகர்)&oldid=3732575" இலிருந்து மீள்விக்கப்பட்டது