சங்கம் லக்ஷ்மி பாய்
சங்கம் லக்ஷ்மி பாய் (27 ஜூலை 1911 - 1979) இந்திய சமூக ஆர்வலர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]
சங்கம் லக்ஷ்மி பாய் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1957 - 1972 | |
தொகுதி | மெதக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 ஜூலை 1911 கட்கேசர், தெலுங்கானா, இந்தியா |
இறப்பு | 1979 (68வது வயது) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | துர்கா பிரசாத் யாதவ் |
ஆரம்ப வாழ்க்கை
தொகுலக்ஷ்மி பாய் அவர்கள் 1911 ஆம் ஆண்டு தற்போதய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கட்கேசர் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் தந்தை ராமய்யா ஆவார். லக்ஷ்மி பாய் அவர்கள் கார்வி பல்கலைக்கழகத்தில் பயின்றார். சென்னையில் சாரதா நிகேதன் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
செயல்பாடுகள்
தொகுலக்ஷ்மி பாய் அவர்கள் முழு நேர சமூக பணி மற்றும் பொது பணிகளை மேற்கொண்டார். இவர் தம் மாணவ பருவத்தில் சைமன் குழுவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இவர் உப்புச் சத்தியாகிரகம் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1930 முதல் 1931 ஆம் ஆண்டு வரை ஒர் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் இந்திரா சேவா சதன் என்ற ஆதரவற்றோர் இல்லம், ராதிகா இல்லம், வாசு சிசு விகார் என்ற குழந்தைகள் இல்லம் மற்றும் மசேதி ஹனுமந்து மேல்நிலை பள்ளி ஆகியவற்றை நிருவி கவுரவ செயலாளராக பணியாற்றி வந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biography of Laxmi Bai, Sangam at Parliament of India". Archived from the original on 2013-06-08. பார்க்கப்பட்ட நாள் 2019-04-20.
- ↑ "Archived copy". Archived from the original on 11 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)