பாரதி முகர்ஜி
பாரதி முகர்ஜி (Bharati Mukherjee) (சூலை 27, 1940 - சனவரி 28, 2017) ஒரு அமெரிக்க எழுத்தாளர் மற்றும் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையின் பேராசிரியராக இருந்தவர் ஆவார். இவர் பல நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.[1]
பாரதி முகர்ஜி | |
---|---|
ஜூன் 11 200, இசுரேல் அமெரிக்க தூதரக இல்லத்தில் பேசுகையில் | |
பிறப்பு | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | சூலை 27, 1940
இறப்பு | சனவரி 28, 2017 மன்ஹாட்டன், நியூயார்க். ஐக்கிய அமெரிக்கா. | (அகவை 76)
தொழில் | பேராசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர், எழுத்தாளர், புனைகதை எழுத்தாளர், கற்பனை எழுத்தாளர். |
தேசியம் | இந்தியா , ஐக்கிய அமெரிக்கா, கனடா |
வகை | புதினம், சிறுகதைகள், கட்டுரைகள், பயண இலக்கியம், பத்திரிகை. |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஜாஸ்மின் (புதினம்)" |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஇவர் மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் பெங்காலி பிராமண குடும்பத்தில் பிறந்தார். பின்னர் இவர் தனது பெற்றோருடன் ஐரோப்பாவிற்கு சென்று சுதந்திரத்திற்கு பின்னர் 1950 களின் ஆரம்பத்தில் கல்கத்தாவிற்குத் திரும்பினார். அங்கு இவர் கொல்கத்தா லொரேட்டோ பள்ளியில் கல்வி கற்றார். இவர் இளங்கலை பட்டத்தை 1959 ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் பின்னர் 1961 ஆம் ஆண்டில் வடோதரா ,மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.[2] அடுத்து இவர் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு ஐக்கிய அமெரிக்கா சென்றார். இவர் 1969 ஆம் ஆண்டில் ஒப்பீட்டு இலக்கியத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
தொழில்
தொகுகனடாவின் மொண்ட்ரியால் மற்றும் தொராண்டோ நகரங்களில் பத்தாண்டுகள் இருந்தனர். பிறகு, முகர்ஜி மற்றும் அவரது கணவர் கிளார்க் பிளேஸ் அமெரிக்காவிற்கு திரும்பினர். 1981 இன் சனிக்கிழமை இரவு வெளியான "சனிக்கிழமை இரவு" மற்றும் "ஒரு கண்ணுக்கு தெரியாத பெண்" என்ற புதினத்தை அவர் எழுதினார். முகர்ஜி மற்றும் ப்ளேஸ் இணைந்து டேஸ் அண்ட் நைட்ஸ் இன் கல்கத்தா (1977). 1987 ம் ஆண்டு, "தி சாரோ அண்ட் த டெரர்: த ஹன்டிங் லெகஸி ஆஃப் தி ஏர் இந்தியா டிராஜிடி' (ஏர் இந்தியா விமானம் 182) போன்ற புத்தகங்களை எழுதினார்கள்.
பல அறிவியல் புனைகதைகளையும் எழுதியுள்ளார். தவிரவும், முகர்ஜி மக்கில் பல்கலைக்கழகம், ஸ்கிட்மோர் கல்லூரி, குயின்ஸ் கல்லூரி மற்றும் நியூயார்க்கின் சிட்டி யுனிவர்சிட்டி போன்றவற்றில் பேராசிரியராக பணியாற்றினார். இவரது "தி மிடில்மேன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்" என்ற புத்தகத்திற்காக 1988 ஆம் ஆண்டின் தேசிய புத்தக விமர்சகர்கள் வட்ட விருதினை வென்றார்.[3] 989 ஆம் ஆண்டில் அமீனா மீருடனான நேர்காணலில் முகர்ஜி, தன்னை ஒரு அமெரிக்க எழுத்தாளர் என்றும், இந்திய வெளிநாட்டு வாழ் எழுத்தாளர் அல்ல என்றும் கூறினார்.[4] முகர்ஜி தனது 76வது வயதில் முடக்கு வாதம் மற்றும் இதயக் கோளாறினால் ஜனவரி 28, 2017 மன்ஹாட்டனில் இறந்தார்[5][6]
விருதுகள்
தொகு- 1988: தேசிய புத்தக விமர்சகர்கள் வட்ட விருது ("தி மிடில்மேன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்").
மேற்கோள்கள்
தொகு- ↑ "Holders of the Word: An Interview with Bharati Mukherjee". Tina Chen and S.X. Goudie, University of California, Berkeley]
- ↑ "Arts and Culture: Bharati Mukherjee: Her Life and Works". PBS, Interview with Bill Moyers, 05.02.2003
- ↑ "Bharati Mukherjee Runs the West Coast Offense". Dave Weich, Powells Interview (April 2002)
- ↑ Meer, Amanda http://bombsite.com/issues/29/articles/1264 பரணிடப்பட்டது 2013-05-14 at the வந்தவழி இயந்திரம் Fall 1989, Retrieved May 20, 2013
- ↑ "Novelist Bharati Mukherjee passes away". India Live Today. February 1, 2017. Archived from the original on பிப்ரவரி 4, 2017. பார்க்கப்பட்ட நாள் February 1, 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Grimes, William (February 1, 2017). "Bharati Mukherjee, Writer of Immigrant Life, Dies at 76". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் February 4, 2017.
வெளி இணைப்புகள்
தொகு- இந்தியா:இன் வேர்டு இன் இமேஜ்
- பாரதி முகர்ஜி என்ட்ரி தெ கனடியன் என்சைகுளோபீடியா