இந்தியப் பிரிப்பு

இந்திய விடுதலைப் போராட்டம்

இந்தியப் பிரிவினை (Partition of India) என்பது 1947இல் ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரித்தானிய இந்தியப் பேரரசை[1] ஆங்கிலேயர்கள் மத ரீதியாகப் பிரித்தமையைக் குறிக்கும். இந்த நிகழ்வு காரணமாக இந்திய மேலாட்சி அரசு (பின்னர் இந்தியக் குடியரசு), பாக்கித்தான் மேலாட்சி(பின்னர் பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு மற்றும் வங்காளதேச மக்கள் குடியரசு) மற்றும் பூடான் ஆகிய தனிநாடுகள் உருவாக்கப்பட்டன[2].

இந்தியப் பிரிப்பு
பிரித்தானிய இந்தியாவில் நடைமுறையில் உள்ள மதங்கள் (1901), பிரிவினைக்கான அடிப்படை
தேதி14–15 ஆகத்து 1947
நிகழ்விடம்தெற்கு ஆசியா
காரணம்இந்திய விடுதலைச் சட்டம், 1947
விளைவுபிரித்தானிய இந்தியாவை இரண்டு சுதந்திர மேலாட்சிகளாகப் பிரித்தல், இந்திய மேலாட்சி அரசு மற்றும் பாக்கித்தான் மேலாட்சி அரசு, மதவெறி வன்முறை, மத சுத்திகரிப்பு,மற்றும் ஏதிலி நெருக்கடி
இறப்புகள்200,000–2 மில்லியன்
இடம்பெயர்வு10–20 மில்லியன்

இப்பிரிவினை இந்திய விடுதலைச் சட்டம் 1947 இல் அறிவிக்கப்பட்டு, பிரித்தானிய இந்தியா கலைக்கப்படக் காரணமாய் அமைந்தது[3] இப்பிரிவினையால் சில நூறாயிரம் பொருட் சேதம் மட்டுமின்றி 12 .5 மில்லியன் மக்கள் இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.[4][5][6]. இம்மூர்க்கப் பிரிவினை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர சந்தேகத்தை விதைத்தது. இந்தச் சந்தேகம் இந்நாள் வரை இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவிற்கு இடைஞ்சலாய் இருந்து வருகின்றது.[7]

முன்னாள் பஞ்சாப் மாநிலம் இந்தியப் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாபாக பிரிந்தது[8]. வங்காள மாகாணமும் மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு பாகிஸ்தானாக பிரிந்தது. மேலும் தொடர்வண்டி துறை, இராணுவம், மைய கருவூலம் போன்ற சொத்துகளும் பிரிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வரலாற்றில் மிக வேகமான மக்கள் இடமாற்றம் நடந்தது. மொத்தத்தில் 17.9 மில்லியன் மக்கள் இடம் மாற்றியுள்ளனர், ஆனால் இதில் 14.5 மில்லியன் மக்கள் மட்டும் தமது செல்லிடத்தைச் சேர்ந்தனர்.

தெற்காசியாவில் இந்தியா மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளை மட்டும் இந்த நிகழ்வு பாதிப்படைய வைத்தது. பிரித்தானிய இந்திய பேரரசில் பர்மா, மாலைதீவுகள், இலங்கை போன்ற வேறு நாடுகள் தனியாக விடுதலை பெற்றன.1930-களுக்கு முன்பு வரை இந்தியப்பிரிவினைக் குறித்து யாரும் கருதவில்லை. இந்திய துணைகண்டத்தின் மொத்த விடுதலையையே அனைவரும் எதிர் நோக்கியிருந்தனர். முஸ்லீம் இன மக்களுக்கு தனி தேசம் வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தவர் இக்பால் ஆவார். அதன் பின் அத்தேசம் வேண்டுமென ஆதரித்தவர் சவுத்ரி ரகமத் அலி என்பவராவார். அப்படி பிரிக்கப்படும் பகுதிக்கு பாகிஸ்தான் எனும் பெயர் இட்டவரும் சவுத்ரி ரகமத் அலி ஆவார்[9].

பிரிவினைக்கு முன் இந்தியாவின் நிலை

தொகு

பிப்ரவரி 28,1947 ஆம் ஆண்டே அட்லி, இந்தியா 1948 க்கு முன்னரே விடுதலைப் பெற்றுவிடும் என அறிக்கையினை வெளியிட்டார்[10] . ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குச் சுதந்திரம் தருவதற்குச் சுதந்திரப் போராட்டம் தவிர மேலும் சில காரணங்கள் இருந்தன. அவை, வகுப்புக் கலவரங்கள் , மத ரீதியான பிரச்சனைகள் ஆகியவையாகும். இது போன்ற பெருகி வரும் பிரச்சனைகளால் மார்ச் மாதம் 1947 ஆம் ஆண்டு புது தில்லியில் இருந்த ஆர்க்சிபால்ட் பதவி விலகினார்[11] அதன் பின் தில்லிக்கு வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பதவியேற்றார். கல்கத்தா , பஞ்சாப் ஆகிய பகுதிகளில் மதக் கலவரங்கள் பெருகிக் கொண்டிருந்தன.

பிரிவினையில் காந்தியின் நிலைப்பாடு

தொகு

பிரிவினைக் குறித்து காந்தியடிகள் ‘‘ என் சடலத்தின் மீது தான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” எனக் கூறினார். பின்னர் காந்தி மவுண்ட் பேட்டனிடம் இந்தியாவைப் பிரிக்காமல் , மொத்தமாக முஸ்லீம்லீகிடம் ஒப்படைத்துவிடுமாறு தனது நிலைப்பாட்டினை எடுத்துரைத்தார்[12]. பின் காந்தியின் நிலைப்பாட்டிற்கு காங்கிரஸும் , முஸ்லீக் கட்சியினரும் மறுக்க மவுண்ட் பேட்டன் அம்முடிவினைக் கைவிட்டார். 1944 ஆம் ஆண்டு காந்தியும் , முகமது ஜின்னா அவர்களும் பதினான்கு முறை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் எந்தப் பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை.

மதக்கட்சிகள்

தொகு

பெருகி வந்த வகுப்புவாதங்கள், புரட்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் , 1857 நடந்த கலவரத்தைப்போல் மற்றொன்று நடைபெறாமல் இருக்கவும் பிரிட்டன் சிவில் அதிகாரி ஆலன் ஆக்டேவியன் ஹியூம் ஒரு தற்காப்புத் திட்டம் வரைந்தார். அவரின் அறிவுரையினை டஃப்ரின் செயல் படுத்தினார். பிரித்தானிய ஆட்சியினால் அதிருப்தி அடைந்தவர்கள், கலகக்காரர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து இந்தியாவைப் பிரதிநிதித்துவம் படுத்த ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு வருடத்தில் ஒரு முறைப் பொதுக் கூட்டங்கள் நடத்தவும், ஆட்சியில் ஏற்படும் குறைகளை மனுக்களின் மூலம் தீர்த்துக் கொள்ளவும் அவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டது[[11]

இந்துக்கட்சி

தொகு

இந்த அமைப்பே பின்னர் காங்கிரஸ் என்று அறியப்பட்ட அமைப்பாகும். காங்கிரஸ் கட்சி வளர்ந்து தேசியக் கட்சியாக மாறியபோது அக்கட்சி ஒரு இந்துக் கட்சியாக அறியப்பட்டது. அதில் உறுப்பினர்களாக இருந்த முஸ்லீம் தலைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகத்தொடங்கினர். பின்னர் காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்தது. மிதவாதிகள் ஒரு பிரிவாகவும், தீவிரவாதிகள் ஒரு பிரிவாகவும் பிரிந்தனர்.

முஸ்லீம் கட்சிகள்

தொகு

முஸ்லீம் மக்களுக்காக செயல் பட்ட மிக முக்கியமான முஸ்லீம் இயக்கம் அலிகார் இயக்கம் (1858–1898) ஆகும். பின்னர் அனைத்திந்திய முஸ்லீம் லீக் மிகப் பெரிய இயக்கமாக வளர்ந்தது. முஸ்ஸீம் லீக் 1906 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தியப் பிரிவினையின் காரணங்கள்

தொகு
  • பெரும்பான்மையினர் மத்தியில் சிறுபான்மையினர் வாழ முடியாது எனும் எண்ணம்.
சுதந்திரத்திற்கு முன்னர் இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை நாற்பது சதவிகிதமாகும். அதனால் பெரும்பான்மையினரான இந்துக்களின் மத்தியில் சிறுபான்மையினர்கள் வாழ முடியாது என அவர்கள் நினைத்தனர்.
  • முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம்
பலுகிஸ்தான், பஞ்சாப், சிந்து, பம்பாய், கிழக்கு வங்காளம் போன்ற பகுதிகளில் மூஸ்லீம்கள் அதிகமாக வசித்து வந்தாலும் அவர்களுக்கு அரசாங்கந்தின் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
  • அதிகார மொழி
1900 ஆம் ஆண்டு இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. அப்போது உருதுவையும் இணைக்குமாறு முஸ்லீம்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

இதுபோன்ற காரியங்களால் நம்பிக்கை இழந்த முஸ்லீம் மக்கள் மதக்கட்சிகளைத் நம்பத்தொடங்கினர். இவை பின் பிரிவினைக்கு வித்திட்டன.

வங்கப் பிரிவினை

தொகு

அக்டோபர் 16, 1905 ஆங்கிலேய கவர்னர் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்தப் பிரிவினை நிர்வாக ரீதியான பிரிவினை எனக் கூறப்பட்டது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்சா, ஆகிய அனைத்தும் வங்காளத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. கிழக்கு வங்களாத்தில் அதிகமாக முஸ்லீம் மக்கள் வசித்து வந்தனர். மேற்குபகுதியின் இந்துக்கள் வாழ்ந்து வந்தனர். இவை இரண்டும் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதை எதிர்த்த இந்திய மக்கள் தேசம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் ஆங்கில அரசு 1911 ஆம் ஆண்டு பிரிவினையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

குழுப்படுத்துதல்(குரூப்பிங்)

தொகு

1946 தேர்தலில் முஸ்லீம் லீக் கட்சி பெற்ற வெற்றியுடன் தனி தேசம் குறித்த கோரிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கின. முஸ்லீம் லீக் கட்சியின் கோரிக்கை மட்டுமல்லாது, முஸ்லீம் மக்களின் கோரிக்கை என அத்தேர்தல் முடிவுகள் எடுத்துரைத்தன. இதை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள மறுத்த்து. ஆனால் ஆங்கிலேய அரசு நிலைமை தீவிரம் அடைவதைக் கருத்தில் கொண்டு குரூப்பிங் எனும் அமைப்பை அமைச்சரவையின் மூலம் உருவாக்கியது. இதன் படி மூன்று அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஒன்று முஸ்லீம் மாகாணங்களுக்கு, அடுத்து இந்து மாகாணங்களுக்கு, மற்றொன்று மத்திய அமைப்பாக செயல்பட்ட்து. இத்திட்டத்திற்கு முஸ்லீம் லீக், மற்றும் காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளும் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இவ்வொப்பந்த்த்தின்படி வெளியுறவுத்துறை, நிதி, தேசிய பாதுகாப்பு ஆகிய அனைத்தும் மட்டும் மத்திய அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும். பின் இந்த அமைப்பும் வழுவிழுந்த்து. இதனை காங்கிரஸ் எதிர்த்ததால் ஜின்னாவின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெறத்தொடங்கியது. பின் மீண்டும் காங்கிரஸ் அரசு ஒப்புக்கொண்டது.

சொத்துப்பிரிப்பு

தொகு

இந்தியப்பிரிவினையின் போது சொத்துக்கள் மற்றும் வளங்களைப் பிரித்தவர்கள் சவுத்ரி முகமது அலி மற்றும் எச்.எம்.பட்டேல் ஆகியோர் ஆவார். இவர்கள் இருவரும் அரசு வழக்கறிஞர்கள் ஆவார்கள்.

இராணுவ வீரர்கள் , அரசு அலுவலர்கள் ஆகியோரைப் பிரிக்கும் பொழுது விருப்பம் உள்ளவர்கள் பாகிஸ்தான் சென்று பணிபுரிய அனுமதிக்கப்பட்டார்கள். அசையும், அசையா ஆகிய சொத்துக்களை பிரிக்க தனியொரு முறை கையாளப்பட்டது. அதன் படி அனைத்து இந்திய சொத்துக்களும் கணக்கிடப்பட்டு எண்பது சதவிகித சொத்துக்கள் இந்தியாவிற்கும், இருபது சதவிகித சொத்துக்கள் பாகிஸ்தானிற்கும் பிரித்து வழங்கப்பட்டது. இது மக்கள் தொகையை கணக்கிட்டும், நாட்டின் பரப்பளவைக் கருத்தில் கொண்டும் பிரிக்கப்பட்டது ஆகும்.[13]

நாட்டின் பரப்பளவு

தொகு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் எல்லைகள் பிரிக்க சர் சிரில் ராட்கிளிப் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு அவர்கள் எல்லைகளைப் பிரித்தனர். இரண்டு மாதங்களுக்குள்ளாகவே நாட்டின் எல்லைக் கோடுகளை இவர்கள் பிரித்தனர்.

இந்தியப்பிரிவினை

தொகு

1930-களுக்கு முன்பு வரை இந்தியப்பிரிவினை குறித்து யாரும் நினைக்கவில்லை. ஜூன் 3,1947 ஆம் ஆண்டு இந்தியப்பிரிவினை குறித்து வானொலியில் முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தியப்பிரிவினை பற்றி மவுண்ட் பேட்டன், ஜின்னா மற்றும் நேரு ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்தியப்பிரிவினையில் முக்கியப் பங்காளர்கள்

தொகு
  • ஜின்னா- இந்தியப்பிரிவினைக்கு வித்திட்டவர். முதலில் இந்திய விடுதலைக்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து போராடியவர். பின் அனைத்திந்திய முஸ்லீம் லீகுடன் இனைந்து முஸ்லீம்களுக்கான தனி தேசம் வேண்டி இந்தியப்பிரிவினைக்கு வித்திட்டார்.
  • மவுண்ட் பேட்டன் – இந்தியப்பிரிவினையின் போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தவர்.
  • நேரு – இந்தியப்பிரிவினையில் சில முக்கிய முடிவுகளை எடுத்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்.
  • மவுலானா அபுல்கலாம் ஆசாத் - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர், பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புதல் தரக் கூடாது என்று கூறி அதற்காக அரும்பாடுபட்டவர்.

பாகிஸ்தான் பெயர்காரணம்

தொகு

பிரிக்கப்படும் பகுதிக்கு பாகிஸ்தான் எனும் பெயர் இட்டவர் சவுத்ரி ரகமத் அலி ஆவார். பஞ்சாப், ஆப்கானிஸ்தான், காஷ்மீர், சிந்து, பலுகிஸ்தான், வங்காளம் ஆகியவையே உள்ளடக்கியே தேசமே பிரிக்கப்படுவதாக இருந்தது. எனவே அத்தேசங்களின் பெயர்களில் உள்ள ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்தும் பலுகிஸ்தானில் உள்ள ‘தான்’ எனும் சொல்லையும் எடுத்து புது நாட்டின் பெயரை அலி சூட்டினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Khan 2007, p. 1.
  2. Sword For Pen, Time, 12 April 1937
  3. " Encyclopædia Britannica. 2008. Encyclopædia Britannica. 2008. "Bhutan.".
  4. Metcalf & Metcalf 2006
  5. (Spear 1990, p. 176)
  6. (Bandyopadhyay 2005, p. 260)
  7. (Ludden 2002, p. 200)
  8. (Ludden 2002, p. 193)
  9. http://www.bbc.co.uk/history/british/modern/partition1947_01.shtml
  10. மருதன் எழுதி கிழக்குப்பதிப்பகம் வெளியிட்ட இந்தியப் பிரிவினை புத்தகம். பக்கம் - 19
  11. 11.0 11.1 மருதன் எழுதி கிழக்குப்பதிப்பகம் வெளியிட்ட இந்தியப் பிரிவினை புத்தகம். பக்கம் - 20
  12. மருதன் எழுதி கிழக்குப்பதிப்பகம் வெளியிட்ட இந்தியப் பிரிவினை புத்தகம். பக்கம் - 24
  13. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: பொன் ஆரம் முதல் யானை வரை தப்பவில்லை!

வெளியிணைப்புகள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியப்_பிரிப்பு&oldid=4057619" இலிருந்து மீள்விக்கப்பட்டது