பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு
சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு சுருக்கமாக ஐகேன் (International Campaign to Abolish Nuclear Weapons (சுருக்கமாக ICAN, என உச்சரிக்கப்படுகிறது /ˈaɪkæn/ EYE-kan) என்பது உலகளாவிய அமைப்பாகும். இது அணு ஆயுதங்கள்மீதான தடை ஒப்பந்தத்தை முழுமையாக கடைப்பிடிக்கவும், முழுமையான செயல்படுத்தவும் செயல்பட்டு வருகிறது. ஐகேன் அமைப்பு 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது. நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்களின் கூட்டணியான இவ்வமைப்பு, 2017 ஆண்டுவாக்கில் 101 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
சுருக்கம் | ICAN |
---|---|
உருவாக்கம் | 2007 |
நிறுவப்பட்ட இடம் | ஆத்திரேலியா, மெல்பேர்ண் |
வகை | இலாப நோக்கற்ற சர்வதேச பிரச்சாரக் குழு |
தலைமையகம் | சுவிட்சர்லாந்து, ஜெனீவா |
துறைகள் | அணு ஆயுதப் பரவல் |
உறுப்பினர்கள் (2017) | 101 நாடுகளில் உள்ள 468 தொண்டு நிறுவனங்களின் கூட்டணி |
நிர்வாக இயக்குநர் | பீட்ரிஸ் ஃபின் |
வலைத்தளம் | www |
கருத்துகள் | அமைதிக்கான நோபல் பரிசு 2017 |
அணுஆயுத ஒழிப்புக்காக போராடி வரும் இந்த அமைப்புக்கு 2017 ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. "அணு ஆயுதங்கள் மீதான, `ஒப்பந்த தடையை உருவாக்க சிறப்பான களப்பணி ஆற்றியமைக்காக இந்த விருது"[1] எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகள்
தொகுஇந்த அமைப்பு துவக்கப்பட்டதில் இருந்து அணுஆயுத போரினால் ஏற்படும் விளைவுகளையும், துயரங்களையும் தொடர் பரப்புரை வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஆணுஆயுத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், அணு ஆயுத சோதனை நடத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் அமெரிக்கா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் அணு ஆயுத உற்பத்தியை குறைத்ததில் இந்த அமைப்பின் பங்கு குறிப்பிடத்தக்கது.[2] 2017 சூலை மாதம், ஐகேன் அளித்த அழுத்தத்தின் காரணமாக, 122 நாடுகள், படிப்படியாக அணு ஆயுதங்களை குறைத்து, தடை செய்யும் ஐ.நாவின் ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டன. ஆனால், அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக அறியப்படும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Nobel Peace Prize 2017". www.nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
- ↑ "அணுஆயுத ஒழிப்பு அமைப்பான ஐகேன்னுக்கு அமைதிக்கான நோபல் பரிசு". செய்தி. தி இந்து தமிழ். 6 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2017.
- ↑ "அணு ஆயுத எதிர்ப்பிற்காக பணியாற்றிய அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு". செய்தி. பிபிசி. 6 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2017.