நாதியா முராது

நாதியா முராது (Nadia Murad) வடக்கு ஈராக்கில் 1993 ஆம் ஆண்டு பிறந்தார். இசுலாமிய அரசால் யசீதி இன மக்கள் படும் கொடுமைகள் குறித்து வெளியுலகிற்கு தெளிவுபடுத்தி அம்மக்களுக்கான மனித உரிமை ஆர்வலராகத்[1][2] திகழ்கிறார். மேலும் இவர் ஐக்கிய நாடுகள் அவையால் பாலியல் அடிமைகளுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டதுடன், அமைதிக்கான நோபல் பரிசுக்காக [3] 2016 ஆண்டுக்கான முக்கிய நபராகப் பரிந்துரைக்கப்பட்டார். 2018 இல் இவருக்கும் டெனிசு முக்வேகிக்கும் "பாலியல் வன்முறைகளை போர் மற்றும் ஆயுத மோதலின் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான அவர்களின் முயற்சிகளுக்காக" அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4]

நாதியா முராது
Nadia Murad
2018 இல் நாதியா முராது
பிறப்புநாதியா முராது பசீ தாகா
1993 (அகவை 30–31)
கோயோ, ஈராக்கு
பணிமனித உரிமை ஆர்வலர்
செயற்பாட்டுக்
காலம்
2014 முதல்
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு (2018)

சிறைப்பட்ட நிலை

தொகு

2014 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கோச்சோ கிராமத்தில் புகுந்த இசுலாமிய அரசு தீவிரவாதிகள் இவரின் இனத்தவர்கள் 600 பேரைக் கொன்றுவிட்டு இவரோடு பல இளம் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர்.[5] அங்கு இவரோடு சேர்த்து 6,700 யாசிதி இன பெண்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து 2014 ஆம் ஆண்டு தப்பித்து மோசுல் நகருக்கு வந்து சேர்ந்தார்.[6] அங்கிருந்து கத்தாரின் தலைநகர் தோகா வழியாக ஜெர்மனி நாட்டின் இசுடுட்கார்ட் என்ற நகருக்கு சென்று தஞ்சம் அடைந்தார்.

தொழில்

தொகு

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு மாநிலமான டெக்சஸ்சில் அமைந்துள்ள யாதிகளுக்கான உலகளவிலான அமைப்பு அனைத்து உதவிகளையும் செய்கிறது.[5][7]

குறிப்புகள்

தொகு
  1. "نادية مراد حكاية ضحية ام خطة مخفية". وكالة سكاي برس. December 29, 2015. http://www.skypressiq.net/10925-نادية%20مراد%20حكاية%20ضحية%20ام%20خطة%20مخفية.html. 
  2. Khudida, Ahmed (18 August 2016). "A Statement by Nadia Murad and Yazda`s Communication Team on Nadia and Yazda Visit to Australia". Yazda: A Global Yazidi Organization. Archived from the original on 18 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Editorial Staff in Yazidis (6 January 2016). "Iraq nominates Islamic State Yazidi victim Nadia Murad for Nobel prize". Ekurd Daily (Baghdad) இம் மூலத்தில் இருந்து 26 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226090950/https://ekurd.net/yazidi-nadia-murad-nobel-prize-2016-01-06. பார்த்த நாள்: 22 September 2016. 
  4. "Announcement" (PDF). அமைதிக்கான நோபல் பரிசு. Archived from the original (PDF) on 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2018-10-05.
  5. 5.0 5.1 Murad Basee Taha, Nadia (16 December 2015). "Nadia Murad Basee Taha (ISIL victim) on Trafficking of persons in situations of conflict – Security Council, 7585th meeting" (Video). United Nations Television (UNTV). http://webtv.un.org/meetings-events/watch/nadia-murad-basee-taha-isil-victim-on-trafficking-of-persons-in-situations-of-conflict-security-council-7585th-meeting/4665835954001. பார்த்த நாள்: 21 September 2016. 
  6. "Appointment Ceremony of Ms. Nadia Murad Basee Taha As UNODC Goodwill Ambassador for the Dignity of Survivors of Human Trafficking on the Occasion of the International Day of Peace" (Video). United Nations Television (UNTV). 16 September 2016. http://webtv.un.org/meetings-events/watch/appointment-ceremony-of-ms.-nadia-murad-basee-taha-as-unodc-goodwill-ambassador-for-the-dignity-of-survivors-of-human-trafficking-on-the-occasion-of-the-international-day-of-peace/5128825128001#full-text. பார்த்த நாள்: 21 September 2016. 
  7. "ظهورجريء للفتاة الازيديية نادية مراد ابكى اعضاءً في مجلس الامن وصفق لها الحاضرون". عراق برس. December 18, 2015 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 4, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170804012507/https://www.iraqpressagency.com/?p=175408&lang=ar. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதியா_முராது&oldid=3816088" இலிருந்து மீள்விக்கப்பட்டது