டெனிசு முக்வேகி

டெனிசு முக்வேகி (Denis Mukengere Mukwege, /mʊkˈwɡi/;[1] பிறப்பு: மார்ச் 1, 1955)[2][3] என்பவர் காங்கோவைச் சேர்ந்த பெண்நோயியலாளரும், மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். இவர் புக்காவு நகரில் பான்சி மருத்துவமனையை ஆரம்பித்து, அங்கு ஆயுதக்குழுக்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட காங்கோ பெண்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ளார்.[4] இரண்டாவது காங்கோ போர்க் காலத்தில் (1998 - 2003) இருந்து பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஒரு நாளைக்குக் குறைந்தது 10 சத்திர சிகிச்சைகள் வரை இவர் இங்கு மேற்கொண்டுள்ளார்.[4] வன்கலவியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களில் இவர் உலகில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.[5]

டெனிசு முக்வேகி
Denis Mukwege
2014 இல் முக்வேகி
பிறப்பு1 மார்ச்சு 1955 (1955-03-01) (அகவை 69)
புக்காவு, பெல்ஜிய காங்கோ
தேசியம்காங்கோ மக்களாட்சிக் குடியரசு
படித்த கல்வி நிறுவனங்கள்புருண்டி பல்கலைக்கழகம்
ஆங்கர்சு பல்கலைக்க்ழகம்
பணிபெண்நோயியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
1983-இன்று
விருதுகள்ரைட் லவ்லிவுட் விருது
டைம் 100
சாகரவ் பரிசு
செவாலியே விருது
அமைதிக்கான நோபல் பரிசு (2018)

2018 ஆம் ஆண்டில், இவருக்கும், ஈராக்கைச் சேர்ந்த நாதியா முராத் என்பவருக்கும் "போர் மற்றும் ஆயுத மோதல்களில் பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான அவர்களின் முயற்சிகளுக்காக" அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. English pronunciation of Denis Mukwege. Retrieved 29 October 2014
  2. "Denis Mukwege: winner of Sakharov Prize 2014". European Parliament/News. 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 22 October 2014.
  3. "Denis Mukwege, Laureate of the 2013 Prize for conflict prevention". Fondation Chirac. 2013-10-10. பார்க்கப்பட்ட நாள் 22 October 2014.
  4. 4.0 4.1 "Doctor and Advocate: One Surgeon's Global Fight for the Rights of Rape Survivors" (in en). Pacific Standard. https://psmag.com/social-justice/one-doctors-fight-for-the-rights-of-rape-victims. 
  5. Nolen, Stephanie. "Where repairing rape damage is an expertise," The Globe and Mail, October 22, 2008.
  6. "Announcement" (PDF). அமைதிக்கான நோபல் பரிசு. Archived from the original (PDF) on 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2018-10-06.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெனிசு_முக்வேகி&oldid=3859827" இலிருந்து மீள்விக்கப்பட்டது