முதன்மை பட்டியைத் திறக்கவும்

நாதியா முராது

(நாதியா முராத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாதியா முராது (Nadia Murad) வடக்கு ஈராக்கில் 1995 ஆம் ஆண்டு பிறந்தார். இசுலாமிய அரசால் யசீதி இன மக்கள் படும் கொடுமைகள் குறித்து வெளியுலகிற்கு தெளிவுபடுத்தி அம்மக்களுக்கான மனித உரிமை ஆர்வலராகத்[1][2] திகழ்கிறார். மேலும் இவர் ஐக்கிய நாடுகள் அவையால் பாலியல் அடிமைகளுக்கான நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டதுடன், அமைதிக்கான நோபல் பரிசுக்காக [3] 2016 ஆண்டுக்கான முக்கிய நபராகப் பரிந்துரைக்கப்பட்டார். 2018 இல் இவருக்கும் டெனிசு முக்வேகிக்கும் "பாலியல் வன்முறைகளை போர் மற்றும் ஆயுத மோதலின் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான அவர்களின் முயற்சிகளுக்காக" அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4]

நாதியா முராது
Nadia Murad
Nadia Murad in Washington - 2018 (42733243785) (cropped).jpg
2018 இல் நாதியா முராது
பிறப்பு நாதியா முராது பசீ தாகா
1993 (அகவை 24–25)
கோயோ, ஈராக்கு
பணி மனித உரிமை ஆர்வலர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2014 முதல்
விருதுகள் அமைதிக்கான நோபல் பரிசு (2018)

பொருளடக்கம்

சிறைப்பட்ட நிலைதொகு

2014 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கோச்சோ கிராமத்தில் புகுந்த இசுலாமிய அரசு தீவிரவாதிகள் இவரின் இனத்தவர்கள் 600 பேரைக் கொன்றுவிட்டு இவரோடு பல இளம் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர்.[5] அங்கு இவரோடு சேர்த்து 6,700 யாசிதி இன பெண்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டனர். இவர்களிடமிருந்து 2014 ஆம் ஆண்டு தப்பித்து மோசுல் நகருக்கு வந்து சேர்ந்தார்.[6] அங்கிருந்து கத்தாரின் தலைநகர் தோகா வழியாக ஜெர்மனி நாட்டின் இசுடுட்கார்ட் என்ற நகருக்கு சென்று தஞ்சம் அடைந்தார்.

தொழில்தொகு

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு மாநிலமான டெக்சஸ்சில் அமைந்துள்ள யாதிகளுக்கான உலகளவிலான அமைப்பு அனைத்து உதவிகளையும் செய்கிறது.[5][7]

குறிப்புகள்தொகு

  1. "نادية مراد حكاية ضحية ام خطة مخفية". وكالة سكاي برس. December 29, 2015. http://www.skypressiq.net/10925-نادية%20مراد%20حكاية%20ضحية%20ام%20خطة%20مخفية.html. 
  2. "A Statement by Nadia Murad and Yazda`s Communication Team on Nadia and Yazda Visit to Australia". Yazda: A Global Yazidi Organization (18 August 2016).
  3. Editorial Staff in Yazidis (6 January 2016). "Iraq nominates Islamic State Yazidi victim Nadia Murad for Nobel prize". Ekurd Daily (Baghdad). http://ekurd.net/yazidi-nadia-murad-nobel-prize-2016-01-06. பார்த்த நாள்: 22 September 2016. 
  4. "Announcement". அமைதிக்கான நோபல் பரிசு.
  5. 5.0 5.1 Murad Basee Taha, Nadia (16 December 2015). "Nadia Murad Basee Taha (ISIL victim) on Trafficking of persons in situations of conflict – Security Council, 7585th meeting" (Video). United Nations Television (UNTV). http://webtv.un.org/meetings-events/watch/nadia-murad-basee-taha-isil-victim-on-trafficking-of-persons-in-situations-of-conflict-security-council-7585th-meeting/4665835954001. பார்த்த நாள்: 21 September 2016. 
  6. "Appointment Ceremony of Ms. Nadia Murad Basee Taha As UNODC Goodwill Ambassador for the Dignity of Survivors of Human Trafficking on the Occasion of the International Day of Peace" (Video). United Nations Television (UNTV). 16 September 2016. http://webtv.un.org/meetings-events/watch/appointment-ceremony-of-ms.-nadia-murad-basee-taha-as-unodc-goodwill-ambassador-for-the-dignity-of-survivors-of-human-trafficking-on-the-occasion-of-the-international-day-of-peace/5128825128001#full-text. பார்த்த நாள்: 21 September 2016. 
  7. "ظهورجريء للفتاة الازيديية نادية مراد ابكى اعضاءً في مجلس الامن وصفق لها الحاضرون". عراق برس. December 18, 2015. http://www.iraqpressagency.com/?p=175408&lang=ar. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதியா_முராது&oldid=2587839" இருந்து மீள்விக்கப்பட்டது