மாந்தக் கடத்துகை
மாந்தக் கடத்துகை என்பது மனிதர்களை வணிக நோக்கத்திற்காக, குறிப்பாக கடத்துபவர் அல்லது மற்றவர்களின் பாலியல் அடிமைகள், கொத்தடிமைகள் ஆக வைக்க அல்லது பாலியல் தொழிலில் உட்படுத்துவதற்காகக் கடத்துவதாகும்.[1][2] கட்டாயத் திருமணம் புரியும் நோக்கத்துடன் மனிதர்களைக் கடத்துவதும் இதன் பாற்படும்.[3][4][5] இது தவிர, உறுப்புகள் மற்றும் திசுக்களை களவாடும் பொருட்டு கடத்துவதும்,[6][7] மற்றும் வாடகைத் தாயாக பயன்படுத்துவதற்காக மற்றும் கருப்பையைத் திருடுவதற்காக பெண்களைக் கடத்துவதும் மாந்தக் கடத்துகை ஆகும்.[8] மாந்தக் கடத்துகையானது குறிப்பட்ட நாட்டினுள்ளும் அல்லது நாடுகளுக்கிடையேயும் நடைபெறலாம். இது கடத்தப்படும் மனிதருக்கெதிரான குற்றமாகப் பார்க்கப்படுகிறது, ஏனெனில் கடத்தப்படுபவரின் இருப்பிட விருப்புரிமையானது, அவர்களைக் கட்டாயப்படுத்தி ஒரு வணிகப் பொருளாகப் பாவிப்பதின் மூலம் மீறப்படுகிறது. மாந்தக் கடத்துகை என்பது மனிதர்களை வைத்துச் செய்யும் வணிகமாகும். எனவே, ஒருவரை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்திக் கொண்டு செல்லாமல், வணிகப் பொருளாகப் பாவிக்கப்பட்டாலும் அதுவும் மாந்தக் கடத்துகை என்றே கருதப்படுகிறது. மாந்தக் கடத்துகையானது உலக அளவில் தோராயமாக ஆண்டுக்கு 31.6 பில்லியன் டாலர் அளவு பெருமானமுள்ள ஒரு வணிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[9] நாடுகளுக்கிடையேயான குற்றவாளிகளிடையே வளர்ந்து வரும் முக்கிய குற்றங்களில் ஒன்றாக மாந்தக் கடத்துகை கருதப்படுகிறது.[10] இது உலக அளவில் ஒரு மனித உரிமை மீறலாகப் பார்க்கப்படுகிறது.[11]
உசாத்துணைகள்தொகு
- ↑ "UNODC மாந்தக் கடத்துகை மற்றும் அகதிகளைக் கடத்தல் பற்றி குறிப்பிட்டவை". Unodc.org. 2011. 2011-03-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ஆம்னெசுடி இண்டர்நேசனல் - மனித கடத்தல்". Amnesty.org.au. 2009-03-23. 2011-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-03-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2013-07-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-03-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ BBC செய்திகள் - சோல்வாக்கியன் அடிமை திருமணத்திற்காக பர்னெலிக்கு கடத்தப்பட்டார்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2014-04-15 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-03-07 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "உறுப்புகள், திசுக்கள், செல்களை கடத்தல் மற்றும் உறுப்பை நீக்கும் பொருட்டு மனிதரைக் கடத்தல் =PDF" (PDF). ஐநா. 2009. 2014-01-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "உறுப்பு/திசு நீக்கத்திற்காக மாந்தக் கடத்துகை". Fightslaverynow.org. 2012-12-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "கருப்பை நீக்கம் மற்றும் வாடகைத் தாய்க்காக மாந்தக் கடத்துகை". Councilforresponsiblegenetics.org. 2004-03-31. 2018-12-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Haken, Jeremy. "வளர்ந்து வரும் உலகில் குற்றங்கள்" (PDF). Global Financial Integrity. 18 ஏப்ரல் 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 25 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ லூயிசு செல்லி (2010). மாந்தக் கடத்துகை: ஒரு உலகளாவிய பார்வை. Cambridge University Press. பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-139-48977-5. http://books.google.com/books?id=XY8uJoYkNBsC.
- ↑ "DIRECTIVE 2011/36/EU OF THE EUROPEAN PARLIAMENT AND OF THE COUNCIL of 5 April 2011 on preventing and combating trafficking in human beings and protecting its victims, and replacing Council Framework Decision 2002/629/JH". Eur-lex.europa.eu. 26 நவம்பர் 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 7 மார்ச் 2015 அன்று பார்க்கப்பட்டது.