பன்னாட்டு அணுசக்தி முகமையகம்

பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency) என்பது அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், அணுக்கருவிகளின் இராணுவப் பயன்பாடுகளை தடுக்கவும் ஜூலை 29, 1957 அன்று சர்வதேச அணுசக்தி அமைப்பு மசோதா மூலம் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மறைந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் ஐசனோவர் அவர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 1953-ஆம் ஆண்டு ஆற்றிய அமைதிக்கான அணுக்கள் எனும் உரையில் அணு சக்தியின் பயன்பாட்டினை கட்டுப்பாட்டுடன் வளர்க்க இப்பன்னாட்டு அமைப்பை உருவாக்கும் ஆலோசனையை முன்வைத்தார்.இது ஐக்கிய நாடுகளின் பொது சபை மற்றும் பாதுகாப்பு சபை ஆகியவற்றுக்கு மட்டும் பதிலளிக்க கடமைப்பட்டது. 2005-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கும் இதன் தலைவர் மொகம்மது எல்பரதேய் என்பவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக அக்டோபர் 7, 2005 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு அணுசக்தி முகமையகம்
International Atomic Energy Agency
சுருக்கப்பெயர்IAEA
உருவாக்கம்29 சூலை 1957
வகைசர்வதேச அமைப்பு
சட்டப்படி நிலைநடப்பில் உள்ளது
தலைமையகம்வியன்னா, ஆஸ்திரியா
உறுப்பினர்கள்hip
175 உறுப்பு நாடுகள்[1]
தலைமை
பொது இயக்குநர்
ரஃபேல் க்ரோஸி
பணியாளர்கள் (2021)
2560[2]
இணையதளம்iaea.org

இதன் தலைமையகம் வியன்னா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ளது.மேலும் இது ஜப்பானின் டோக்கியோ மற்றும் கனடாவின் டொராண்டோ நகரங்களில் இரண்டு பிராந்திய பாதுகாப்பு அலுவலகங்களையும் கொண்டுள்ளது.இதன் இரண்டு தகவல் தொடர்பு அலுவலகல் நியூயார்க் மற்றும் ஜெனீவா நகரங்களில் அமைந்துள்ளது.மேலும் இதற்கு வியன்னா, செய்பர்ஸ்டோர்ப், ஆஸ்திரியா மற்றும் மொனாகோ நகரில் ஆய்வகங்களை கொண்டுள்ளது.

வரலாறு

தொகு

பன்நாட்டு அணு ஆற்றல் முகைமை (International atomic energy agency-IAEA ) ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் 1957 சூலை மாதம் 29 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இரண்டாவது உலகப் போரில் ஏற்பட்ட அழிவினைக் கண்ட மக்கள் அணு ஆற்றலைப் பற்றி பெரிதும் அச்சம் கொண்டனர். இந்நிலையில் தான் ஆக்கத்திற்கே அணு (ATOM FOR PEACE ) எனும் கோட்பாட்டுடன் IAEA தொடங்கப் பெற்றது.இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் அணு ஆற்றறலை அமைதி, மருத்துவம், வளமை முதலியவைகளை உலகம் முழுவதும் பரவலாக்கவும் அதனை விரைவுபடுத்தவும் விரிவு படுத்துவதுமாகும். இவ்வமைபின் உறுப்பு நாடுகள் அணு ஆற்றலை இராணுவத்திற்காக பயன் படுத்துவதை கட்டுப்படுத்துவதுமாகும்.

UNO, WHO போன்று இது ஒரு பன்நாட்டு நிறுவனம்.தன்னாடச்சிப் பெற்ற அமைப்பாக இருந்தாலும் இது தனது வருட வரவு செரவு மற்றும் நடவடிக்கைப் பற்றி UNO விற்கும் பொதுசபைக்கும் அனுப்புகிறது. 35 நாடுகள் கொண்ட குழுவால் தேர்ந்து எடுக்கப்பட்ட இயக்குநர்,அனைத்து உறுப்பு நாடுகளின் பொதுசபையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.செலவுகளை உறுப்பு நாடுகள் ஏற்கின்றன.

உள்ளமைப்பு

தொகு

பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (ப.அ.மு) செயலகமானது ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள வியன்னா பன்னாட்டு மையத்தில் தலைமை கொண்டுள்ளது. இத்துடன் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா, அமெரிக்க ஒன்றியத்தின் நியு யார்க், கனடா நாட்டின் டொரொன்டோ மற்றும் ஜப்பான் நாட்டின் டோக்கியோ ஆகிய நகர்களில் இவ்வமைப்பின் துணை அலுவலகங்கள் குடிகொண்டுள்ளன. மேலும் இவ்வமைப்பின் பல்வேறு ஆய்வு மையங்கள் மற்றும் அறிவியல் கூடங்கள் மொனாகோ அரசகத்திலும், ஆஸ்திரியா நாட்டின் வியன்னா மற்றும் சைபெர்ஸ்டோர்ஃப் நகரங்களிலும், இத்தாலி நாட்டின் திரெஸ்தே நகரிலும் உள்ளன.

ப.அ.மு செயலகத்தில் 2200 பல்தொழில் வல்லுனர்களைக் கொண்ட குழு இயங்கி வருகிறது. இவ்வமைப்பின் தலைமை இயக்குனரான மொகம்மது எல்பரதேய்-இன் கீழ் ஆறு துணை இயக்குநர்கள் பல்வேறு துறைகளை தலைமை தாங்கி வருகின்றனர்.

பணிகள்

தொகு

பன்னாட்டு அணுசக்தி முகமையகமானது அணுத்தொழில்நுட்பத்தை அமைதிவழியில் பயன்படுத்தும் பொருட்டு அரசுகளுக்கிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்தும் மன்றமாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் முப்பெரும் தூண்கள் என்று போற்றப்படும் முதன்மை கடமைகள் இவைகளே:

1. வரைமுறைகளை பேணுதல் மற்றும் சோதித்தல்: ப.அ.மு. கிட்டத்தட்ட 140 நாடுகளுடன் கொண்டுள்ள வரைமுறை உடன்பாடுகளின்படி அந்நாடுகளின் அணு மற்றும் அணு சார்ந்த நிலையங்களில் சோதனை மேற்கொள்கிறது. ஏறத்தாழ அனைத்து உடன்பாடுகளும் அணு ஆயுதங்களைப் பெறோம் என்று உறுதி பூண்ட நாடுகளுடனேயே உள்ளன.

2. காவல் மற்றும் பாதுகாப்பு பேணுதல்: உலக நாடுகளின் அணு கட்டுமானம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் காவலை மேம்படுத்தவும், இடர் வருங்கால் சரியான முறையில் எதிர்கொள்ளவும் ப.அ.மு. உதவுகிறது. கேடு விளைவிக்கும் அணுக்கதிர் வீச்சிலிருந்து மக்களையும் சுற்றுச்சூழலையும் காப்பது முதன்மைக் குறிக்கோளாகும்.

3. அறிவியல் மற்றும் தொழினுட்பம் பேணுதல்: வளரும் நாடுகளின் இன்றியமையா தேவைகளுக்கு அமைதிவழியில் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு உலகின் முன்னோடியாக ப.அ.மு. திகழ்கிறது. இப்பணியானது வறுமை, நோய்நொடிகள், சுற்றுச்சூழற்கேடு போன்றவற்றை எதிர்த்து போரிடவும் நிலையான வளர்ச்சியை பெருக்கவும் பங்களிக்கிறது.

உறுப்பு நாடுகள்

தொகு

பன்னாட்டு அணுசக்தி முகமையகத்துடன் இணைந்துகொள்வது ஓரளவு இலகுவாகும். இதில் உறுப்பினராக சேர்வதற்கு முதலில் அதன் பொது செயலாளரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.அவரின் பரிசீலனைக்கு பின்னர் அது பாதுகாப்பு சபையின் வாக்களிப்பிற்கு அனுப்பப்படும் அதில் ஏற்ற்று கொள்ளப்பட்டால் அந்நாடு அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் (NPT) கையோப்பமிடல் வேண்டும் அதன் பின்னர் எவ்வித நிபந்தனைகளும் இன்றி அந்நாடு உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படும். இதில் மொத்தம் 159 உறுப்பு நாடுகள் உள்ளன.பெரும்பாலான ஐ.நா. உறுப்பினர்கள் இதிலும் உறுப்பினராக உள்ளனர். இதுவரை 2 நாடுகள் விலக்கப்பட்டுள்ளன அவை வட கொரியா மற்றும் கம்போடியா ஆகும். இதில் வட கொரியா 1974 இருந்து 1994 வரை உறுப்பினராக இருந்தது ஆனால் அது பாதுகாப்பு ஒப்பந்ததின் படி நடக்காததால் விலக்கப்பட்டது. கம்போடியா 1958 இல் ஒரு உறுப்பினராக இணைந்த அது 2003 இல் விலக்கிகொண்டது எனினும் 2009 இல் மீண்டும் உறுப்பினராக இணைந்தது.

இயக்குநர்களின் பட்டியல்

தொகு
பெயர் தேசியம் பதவிக்காலம் கால அளவு (ஆண்டுகள்)
டபிள்யூ. ஸ்டெர்லிங் கோல்   ஐக்கிய அமேரிக்கா 1 டிசம்பர் 1957 முதல் 30 நவம்பர் 1961 வரை 4
சிக்வர்ட் எக்லூன்ட்   சுவீடன் 1 டிசம்பர் 1961 முதல் 30 நவம்பர் 1981 வரை 20
ஹான்ஸ் பிலிக்ஸ்   சுவீடன் 1 டிசம்பர் 1981 முதல் 30 நவம்பர்r 1997 வரை 16
முகமது எல்பராடே   எகிப்து 1 டிசம்பர் 1997 முதல் 30 நவம்பர் 2009 வரை 12
யுகியா அம்னோ   ஜப்பான் 1 டிசம்பர் 2009 முதல் 18 ஜூலை 2019 வரை 9
கார்னல் ஃபெருடா (செயல்)   உருமேனியா 25 ஜூலை 2019 முதல் 2 டிசம்பர் 2019[3] வரை 0.33
ரஃபேல் க்ரோஸி   அர்கெந்தீனா 3 டிசம்பர் 2019 முதல் தற்போது வரை 5

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "List of Member States". www.iaea.org. 8 June 2016.
  2. "Employees & Staff: Strength Through Diversity". www.iaea.org. 16 May 2014.
  3. Rumänischer Diplomat wird vorübergehend Chef der Wiener UN-Atomenergiebehörde

மேற்கோள் நூல்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
விருதுகளும் சாதனைகளும்
முன்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
முகம்மது அல்-பராதிய் உடன்

2005
பின்னர்