சர்வதேச அமைப்பு

சர்வதேச அமைப்பு அல்லது பன்னாட்டு அமைப்பு (International organization) என்பது பன்னாட்டு உறுப்பினர்களைக் கொண்டு ஒரு நல்ல நோக்கத்திற்காகவும், எந்த ஒரு செயலிலும் தன்னை முன்னிலைப்படுத்தியும் உலக மக்களுக்காக செயல்படும் ஒரு அமைப்பாகும்.[2]

சர்வதேச செஞ்சிலுவை சங்க கட்டிடம் உலகிலேயே சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் தான் அதிகமான அளவில் சர்வதேச அமைப்புக்கள் உள்ளன.[1]

இந்த அமைப்புகளில் இரண்டு வகைகள் உள்ளன

தொகு

பன்னாட்டு அரசுசாரா அமைப்புகள்]] (INGOs)

தொகு

இவை பன்னாட்டளவில் செயற்படும் அரசு சார்பற்ற அமைப்புகள் (NGOs). இலாப நோக்கற்ற அமைப்புக்களான (NPO), சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள உலக சாரணர் இயக்கம் அமைப்பு (WOSM), சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC), மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF) போன்றவை இவ்வகையில் அடங்கும்.

பன்னாட்டு அரசுசார் அமைப்புக்கள்(IGO)

தொகு

இவ்வகையான அமைப்புகள் ஏதோ ஒரு அரசு (sovereign state) சார்ந்தே இயங்குகின்றன. இவற்றில் முக்கியமான அமைப்புகள் ஐநா (UN), பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் இயங்கும் மாநிலபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD), வியன்னாவின் ஆசுதிரியா நகரில் இயங்கும் ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு (OSCE), பிரான்சு நாட்டின் ஸ்திராஸ்பூர்க் நகரில் இயங்கும் ஐரோப்பிய மன்றம் (CoE), ஐரோப்பிய ஒன்றியம் (EU), சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் இயங்கும் உலக வணிக அமைப்பு (WTO ) போன்றவை ஆகும்.[3]

பிரான்ஸ் நாட்டின் ஸ்திராஸ்பூர்க் என்ற நகரில் அமைந்துள்ள ஊடுருவல் மத்தியகுழு (Central Commission for Navigation on the Rhine) உலகின் பழமையான பன்னாட்டு அமைப்பாகும். இந்த அமைப்பு வியன்னா மாநாட்டின் மூலம் 1815ம் ஆண்டு நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. (பிரெஞ்சு) François Modoux, "La Suisse engagera 300 millions pour rénover le Palais des Nations", Le Temps, Friday 28 June 2013, page 9.
  2. (பிரெஞ்சு) François Modoux, "La Suisse engagera 300 millions pour rénover le Palais des Nations", Le Temps, Friday 28 June 2013, page 9.
  3. "Intergovernmental organizations having received a standing invitation to participate as observers in the sessions and the work of the General Assembly and maintaining permanent offices at Headquarters." United Nations Department of Public Information, United Nations Secretariat.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வதேச_அமைப்பு&oldid=3658851" இலிருந்து மீள்விக்கப்பட்டது