கன்னாட்டு பிளேசு, புது தில்லி

கன்னாட்டு பிளேசு (Connaught Place, இந்தி: कनॉट प्लेस, Punjabi: ਕਨਾਟ ਪਲੇਸ, உருது: کناٹ پلیس, Sindhi:ڪناٽ پليس, அலுவல்முறையாக ராஜீவ் சௌக்) இந்தியாவின் புது தில்லியிலுள்ள மிகப் பெரும் நிதிய, வணிக, அங்காடி வளாகமாகும். இது பரவலாக சுருக்கப்பட்டு சீப்பீ என அழைக்கப்படுகின்றது. இங்கு பல பெரிய இந்திய நிறுவனங்களின் தலைமையகங்கள் இயங்குகின்றன. பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் தலைமையிடமாக விளங்கிய இவ்விடம் நகரின் மிகப் பெருமையான இடமாக விளங்குகின்றது; புது தில்லியிலுள்ள பாரம்பரியக் கட்டிடங்களில் பல இங்கு அமைந்துள்ளன. லுட்யெனின் தில்லியில் இது முக்கியமான மைய வணிக மாவட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கன்னாட்டு பிளேசு
இராசீவ் சௌக்கு
அண்டையயல்
இராசீவ் சோக்கின் வான்காட்சி
இராசீவ் சோக்கின் வான்காட்சி
அடைபெயர்(கள்): சீப்பீ
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்புதுதில்லி
பெயர்ச்சூட்டுகன்னாட்டு & இசுட்ராதெரன் பிரபு
அரசு
 • நிர்வாகம்புது தில்லி மாநகராட்சி மன்றம்
மொழிகள்
 • அலுவல்பஞ்சாபி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
பின்
110001
மக்களவை (இந்தியா) தொகுதிபுது தில்லி
உள்ளாட்சி அமைப்புபுது தில்லி மாநகராட்சி மன்றம்

படைத்துறை உயர்தர தளபதி, கன்னாட்டு மற்றும் இசுட்ராதெரனின் முதலாம் பிரபு, இளவரசர் ஆர்த்தரின் நினைவில் இது பெயரிடப்பட்டுள்ளது. 1929இல் கட்டத் தொடங்கப்பட்டு 1933இல் முடிக்கப்பட்டது. கன்னாட்டு பிளேசின் உள்வட்டம் இராசீவ் சௌக்கு என ராஜீவ் காந்தி நினைவாக பெயரிடப்பட்டது. [1] வெளிவட்டம் இந்திரா சௌக்கு எனப்படுகின்றது.

மேற்சான்றுகள்

தொகு