புது தில்லி மாநகராட்சி மன்றம்

புது தில்லி மாநகராட்சி மன்றம் (New Delhi Municipal Council, NDMC) இந்தியத் தலைநகரமான புது தில்லியின் நகர மன்றமாகும். இதன் ஆட்பகுதியிலுள்ள நிலப்பகுதிகள் பரவலாக என்டிஎம்சி பகுதி எனப்படுகின்றன. என்டிஎம்சி பகுதி 43.7 கிமீ2 பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மாநகராட்சி மன்றத்தின் அவைத்தலைவரை தில்லி முதல்வர் உள்ளடக்கிய நடுவண் அரசு நியமிக்கின்றது. தில்லி மாநிலம் மூன்று நகரியப் பகுதிகளை உள்ளடக்கி உள்ளது: தில்லி மாநகராட்சி (எம்சிடி), புது தில்லி மாநகராட்சி மன்றம் (என்டிஎம்சி), மற்றும் தில்லி பாசறை வாரியம்.[2]

புது தில்லி மாநகராட்சி மன்றம்

नई दिल्ली नगरपालिका परिषद
வகை
வகை
உள்ளாட்சி அமைப்பு
(புது தில்லி)
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
வரலாறு
தோற்றுவிப்பு16 மார்ச் 1927
தலைமை
அவைத்தலைவர்
திரு நரேசு குமார்[1](சூன் 2015 - )
வலைத்தளம்
www.ndmc.gov.in
தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி, கிழக்கு தில்லி மாநகராட்சி, புது தில்லி மாநகராட்சி மன்றம் மற்றும் தில்லி பாசறை மன்றங்களின் வரைபடம்
புது தில்லி மாநகராட்சி மன்றத்தின் தலைமையகம்

வரலாறு தொகு

இந்தியாவின் புதியத் தலைநகரம் கட்டமைக்கப்படுவதை மேற்பார்வையிட 1913, மார்ச் 25இல் நிறுவப்பட்ட இம்பீரியல் தில்லி குழுவிலிருந்து என்டிஎம்சியின் வரலாறு துவங்குகின்றது. பெப்ரவரி 1916இல் தலைமை ஆணையர், தில்லி, இரைய்சினா நகராட்சி குழுவை உருவாக்கினார். இதுவே பின்னர் பஞ்சாப் நகராட்சி சட்டத்தின் கீழ் ஏப்ரல் 7, 1925 இல் இரண்டாம் வகுப்பு நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. பெப்ரவரி 22, 1927இல் இந்தக் குழு தனது பெயரில் "புது தில்லி" என இணைத்துக் கொண்டது; அது முதல், "புது தில்லி நகராட்சிக் குழு" என அறியப்பட்டது. இதற்கு தலைமை ஆணையர் மார்ச் 16, 1927இல் ஒப்புதல் அளித்தார். மே 1994இல் பஞ்சாப் நகராட்சி சட்டம் 1911க்கு மாற்றாக என்டிஎம்சி சட்டம் 1994 நிறைவேற்றப்பட்டு இந்தக் குழு புது தில்லி மாநகராட்சி மன்றம் எனப் பெயரிடப்பட்டது.[3][4]

இதனையும் காண்க தொகு

மேற்சான்றுகள் தொகு

  1. https://www.ndmc.gov.in/AboutNdmc/NOrgChart.aspx
  2. "Who governs our cities? பரணிடப்பட்டது 2012-11-04 at the வந்தவழி இயந்திரம்" The Times of India, 22 November 2010.
  3. "Capital story: Managing a New Delhi". Hindustan Times. 1 September 2011 இம் மூலத்தில் இருந்து 8 டிசம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121208125953/http://www.hindustantimes.com/Capital-story-Managing-a-New-Delhi/Article1-740284.aspx. 
  4. "NDMC History". NDMC website.

வெளி இணைப்புகள் தொகு