தில்லி மாநகராட்சி

தில்லி மாநகராட்சி, தற்போது தில்லி உள்ளாட்சியை நிர்வகிக்கும் தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி, புது தில்லி மாநகராட்சி மன்றம் மற்றும் தில்லி பாசறை மன்றம் ஆகிய ஐந்து உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைக்க,, தில்லி மாநகராட்சியை நிறுவ, தில்லி மாநகராட்சி (திருத்தம்) சட்டம், 2022, முன்மொழிவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய, இந்திய அமைச்சரவை 22 மார்ச் 2022 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.[1] நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்மொழிவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.[2] [3][4] ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சி 22 மே 2022 அன்று நிறுவப்பட்டது.[5]2022 தில்லி மாநகராட்சி தேர்தல் 4 டிசம்பர் 2022 அன்று நடைபெறுகிறது.

தில்லி மாநகராட்சி
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
வரலாறு
உருவாக்கம்1958–2012;
மே 2022
முன்புதெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி, கிழக்கு தில்லி மாநகராட்சி, புது தில்லி மாநகராட்சி மன்றம் மற்றும் தில்லி பாசறை மன்றம் (2012–2022)
தலைமை
மேயர்
காலிப்பணியிடம்
துணை மேயர்
காலிப்பணியிடம்
மாநகராட்சி ஆணையர்
கியானேஷ் பாரதி, இந்திய ஆட்சிப் பணி
22 மே 2022 முதல்
தனி அலுவலர்
அஷ்வனி குமார், இந்திய ஆட்சிப் பணி
22 மே 2022 முதல்
கூடும் இடம்
தில்லி மாநகராட்சியின் தலைமையகம், மிண்டோ சாலை, புது தில்லி
வலைத்தளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்
2023க்கு முன்னர் தில்லியில் இருந்த தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி, கிழக்கு தில்லி மாநகராட்சி, புது தில்லி மாநகராட்சி மன்றம் மற்றும் தில்லி பாசறை மன்றம் என 5 உள்ளாட்சி அமைப்புகளின் வரைபடம்

இதற்கான தில்லி மாநகராட்சி (திருத்தம்) சட்டம் 2022 (Delhi Municipal Corporation (Amendment) Bill, 2022) முன்மொழிவை உள்துறை அமைச்சர் அமித் சா நாடாளுமன்றத்தின் மக்களவையில் 30 மார்ச் 2022 அன்று அறிமுகப்படுத்தினார். குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் இச்சட்ட முன்மொழிவு பெரும்பான்மையான உறுப்பினர்களால் ஏற்கப்பட்டது. [6]5 ஏப்ரல் 2022 அன்று உள்துறை அமைச்சர் அமித் சா இச்சட்ட மொழிவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.[7]

மீண்டும் தில்லி நகராட்சியை மீண்டும் நிறுவ இருப்பதால், ஏற்கனவே உள்ள வடக்கு தில்லி மாநகராட்சி 104 வார்டுகளையும், தெற்கு தில்லி மாநகராட்சி 104 வார்டுகளையும் மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி 64 வார்டுகளையும் கொண்டிருப்பதை, தில்லி மாநகராட்சியாக நிறுவிய பிறகு 250 வார்டுகளாகக் குறைக்கப்படுகிறது. [8]

துவக்கம்

தொகு

22 மே 2022 அன்று தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு தில்லி மாநகராட்சி செயல்படத்துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[9][10]

வரலாறு

தொகு

உள்ளாட்சி நிர்வாக வசதிக்காக 13 சனவரி 2012 அன்று முந்தைய தில்லி மாநகராட்சியை தெற்கு தில்லி மாநகராட்சி, வடக்கு தில்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு தில்லி மாநகராட்சி என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. [11]

முதல் தேர்தல்

தொகு

தில்லி மாநகராட்சியின் 250 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான 2022 தில்லி மாநகராட்சி தேர்தல் 4 டிசம்பர் 2022 அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2022 அன்று நடைபெறுகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Cabinet approves merger of Delhi’s three civic bodies
  2. Union Cabinet clears bill to merge three Delhi corporations
  3. Cabinet nod to bill to merge 3 Delhi municipal corporations
  4. தில்லி மாநகராட்சி மசோதா
  5. "Delhi's unified municipal corporation formally comes into existence". Firstpost (in ஆங்கிலம்). 2022-05-22. பார்க்கப்பட்ட நாள் 2022-05-28.
  6. Lok Sabha passes Delhi Municipal Corporation (Amendment) Bill, 2022
  7. டெல்லியின் 3 மாநகராட்சிகளையும் இணைக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
  8. Lok Sabha passes Delhi Municipal Corporation (Amendment) Bill, 2022
  9. டில்லியில் மூன்று மாநகராட்சிகள் 22ல் இணைப்பு
  10. Home Ministry issues notification on merger of 3 Delhi Municipal Corporations from May 22, 2022
  11. Why Delhi Municipal Corpoation was trifurcated
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_மாநகராட்சி&oldid=3819249" இலிருந்து மீள்விக்கப்பட்டது