பன்னாட்டு வணிகத்தில், ஏற்றுமதி என்பது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள் அல்லது சேவையை, மற்றொரு நாட்டிற்கு விற்பனை செய்வதாகும். அத்தகைய பொருட்களை விற்பவர் அல்லது சேவைகளை வழங்குபவர் ஒரு ஏற்றுமதியாளர் ஆவார். பொருளை அல்லது சேவையை வாங்குபவர் இறக்குமதியாளர் ஆவார்.[1] பன்னாட்டு வணிகத்தில் இடம்பெறும் சேவைகளில் நிதி, கணக்கியல் மற்றும் பிற தொழில்முறை சேவைகள், சுற்றுலா, கல்வி மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகியவை அடங்கும். பொருட்களின் ஏற்றுமதிக்கு பெரும்பாலும் சுங்க அதிகாரிகளின் பணி தேவைப்படுகிறது.

நிறுவனங்கள் தொகு

பல உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய வணிகத்திற்கு ஏற்றுமதி செய்கிறது.[2]

தடைகள் தொகு

நான்கு முக்கிய வகையான ஏற்றுமதி தடைகள் உள்ளன: ஊக்கம், தகவல், செயல்பாட்டு/வளம் சார்ந்த மற்றும் அறிவு.[3][4]வர்த்தக தடைகள் என்பது சட்டங்கள், ஒழுங்குமுறைகள், கொள்கைகள் அல்லது நடைமுறைகள் ஆகியவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை வெளிநாட்டு போட்டியிலிருந்து பாதுகாக்கின்றன. கட்டுப்படுத்தப்பட்ட வணிக நடைமுறைகள் சில சமயங்களில் இதே போன்ற விளைவைக் கொண்டிருக்கும் போது, அவை பொதுவாக வர்த்தக தடைகளாக கருதப்படுவதில்லை. மிகவும் பொதுவான வெளிநாட்டு வர்த்தக தடைகள் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் சர்வதேச பரிமாற்றத்தை கட்டுப்படுத்தும், தடுக்கும் அல்லது தடுக்கும் கொள்கைகளாகும்.[5]

கட்டணங்கள் தொகு

ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட பொருட்களின் மீது விதிக்க்கப்படும் சுங்க வரி, பன்னாட்டு வர்த்தகத்திற்கு ஒரு பொருளாதார தடையாகும்.[6] இதனால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்க காரணமாகிறது.தேசிய பாதுகாப்பில் அக்கறை கொண்டதாகக் கருதப்படும் ஒரு உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்க சுஙக வரி போன்ற கட்டணங்கள் விதிக்கப்படுகிறது. சில உற்பத்தி பொருட்கள அரசின் மானியங்களால் பாதுகாப்பைப் பெறுகின்றது. சுஙக வரி போன்ற கட்டணங்கள் விரைவாகவும், மலிவாகவும், திறமையாகவும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்துறையின் சலுகைகளை குறைக்கின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. Joshi, Rakesh Mohan, International Marketing, Oxford University Press, New Delhi and New York. ISBN 0-19-567123-6
  2. Washington, Charles W. L. Hill, University of (2015). International business : competing in the global. Most developing economies now focus on exportation.marketplace (Tenth ). பக். 454. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-07-811277-5. 
  3. Seringhaus, F. R (1990). Government export promotion: A global perspective. Routledge. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0415000645. https://archive.org/details/governmentexport0000seri. 
  4. Stouraitis, Vassilios; Boonchoo, Pattana; Mior Harris, Mior Harun; Kyritsis, Markos (2017). "Entrepreneurial perceptions and bias of SME exporting opportunities for manufacturing exporters: A UK study.". Journal of Small Business and Enterprise Development 24 (4): 906–927. doi:10.1108/JSBED-03-2017-0095. https://www.emerald.com/insight/content/doi/10.1108/JSBED-03-2017-0095/full/html. 
  5. "Targeted Trade Barriers". cftech.com. Archived from the original on 29 April 2013. பார்க்கப்பட்ட நாள் 27 July 2015.
  6. Staff, Investopedia (24 November 2003). "Tariff" (in en-US). Investopedia இம் மூலத்தில் இருந்து 6 December 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171206154024/https://www.investopedia.com/terms/t/tariff.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏற்றுமதி&oldid=3679910" இலிருந்து மீள்விக்கப்பட்டது