பந்திப்பூர் தேசியப் பூங்கா
பந்திப்பூர் தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Bandipur National Park) 1974 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த தேசியப் பூங்காவில் புலிகள் பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேசியப் பூங்காவானது இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இப்பகுதி மைசூர் அரசரின் தனிப்பட்ட வேட்டைக் களமாக இருந்தது.[1] 1941 ஆம் ஆண்டிலேயே இப்பகுதி வேணுகோபால் வனவிலங்குப் பூங்கா என்ற பெயரால் அறியப்பட்டது. தமிழ்நாட்டின் முதுமலையும் கேரளாவின் வயநாடும் இதற்கு எல்லைகளாக உள்ளன.
பந்திப்பூர் தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
பந்திப்பூர் தேசியப் பூங்காவிலுள்ள புலிகளுள் ஒன்று. | |
அமைவிடம் | மைசூர், கர்நாடகம், இந்தியா |
அருகாமை நகரம் | மைசூர் 80 கிலோமீட்டர்கள் (50 mi) |
ஆள்கூறுகள் | 11°39′42″N 76°37′38″E / 11.66167°N 76.62722°E |
நிறுவப்பட்டது | 1974 |
நிருவாக அமைப்பு | வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சு மற்றும் கர்நாடக வனத் துறை |
www |
இந்தத் தேசியப் பூங்காவானது பல்வேறு வகையான வன விலங்குகள் வாழும் இடமாக உள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்களின் வாகனங்களில் அடிபட்டு விலங்குகள் மரணமடைகின்றன.[2] எனவே இங்கு வாகனங்கள் செல்வதற்குக் கட்டுப்பாடு உள்ளது.[3]
இந்தப் பூங்கா 874 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. மைசூரிலிருந்து 80 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ளது. தக்காண பீடபூமியும் மேற்குத் தொடர்ச்சி மலை இணையும் இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 680 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாய் இப்பூங்காவானது பல்லுயிரிகளின் முக்கிய வாழ்விடமாய் உள்ளது.
காட்டுத்தீ
தொகு2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக 15,450 ஹெக்டேர் காட்டுப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின.[4]
புகைப்படங்கள்
தொகு-
A
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bandipur National park". Mysore.nic.in. Archived from the original on 2012-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-10-08.
- ↑ "Taming traffic in Bandipur National Park". Wildlifetrustofindia.org. பார்க்கப்பட்ட நாள் 2012-10-08.
- ↑ "Night traffic ban at Bandipur extended from 9 to 12 hours". Deccanherlad.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-08.
- ↑ எரிந்த காடு இந்தி தமிழ் திசை 02.மார்ச் 2019