சங்ககாலத்து முதிரமலை இக்காலத்தில் முதுமலை என்னும் பெயருடன் விளங்குகிறது. [1] [2]

குமணன் என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதன் அரசன். இவனது தம்பி இளங்குமணன் அண்ணனிடமிருந்து நாட்டைப் பறித்துக்கொண்டான். குமணன் இந்த முதிரமலைக் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்தபோதுதான் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் குமணனைக் கண்டு தன் வறுமைநிலையை விளக்கிப் பாடிப் பரிசில் வேண்டினார். புலவர்க்குத் தரத் தன்னிடம் ஒன்றும் இல்லாமையால் குமணன் தன் தலையை வெட்டிக்கொண்டுபோய்த் தம்பியிடம் கொடுத்துப் பரிசில் பெற்றுக்கொள்ளுமாறு புலவர் கையில் தன் வாளைக் கொடுத்தான். புலவர் வாளை உடனே வாங்கிக்கொண்டார். அவ்வாறு வாங்காவிட்டால் குமணன் தன் வாளால் தானே தன் தலையை வெட்டிக்கொண்டிருப்பான்.

குமணன் வாள் தந்த செய்தியைப் புலவர் இளங்குமணனிடம் கூறி அவனை நாணுமாறு செய்தார். இளங்குமணன் மனந் திருந்திப் பெருஞ்சித்திரனாரின் வறுமையைப் போக்கினான்.[3] [4]

முதுமை > முது = முதிர்ச்சி > முதிர் < முதிரம்.

அடிக்குறிப்பு

தொகு
  1. குதிரைமலை என்பது வேறு.
  2. நவிர மலை என்பது வேறு. நவிரமலை மலைபடுபடாம் நூலின் பாட்டுடைத்தலைவன் நாட்டு மலை. இந்த மலையில் காரி உண்டிக் கடவுள் கோயில் இருந்தது.
  3. பெருஞ்சித்திரனார் குமணனைப் பாடியது “அதிரா யாணர் முதிரத்துக் கிழவ” – புறம் 158,
  4. “பந்தூங்கு முதிரத்துக் கிழவோன் திருந்து வேல் குமணன் நல்கிய வளனே” – புறம் 163
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதிரம்&oldid=1602026" இலிருந்து மீள்விக்கப்பட்டது