கயாமத் சே கயாமத் தக்

கயாமத் சே கயாமத் தக் (Qayamat Se Qayamat Tak), QSQT என்ற ஆரம்ப எழுத்து என்றும் அழைக்கப்படுகிறது, இது 1988 ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழி காதல் இசைத் திரைப்படமாகும், இது மன்சூர் கான் இயக்கியது, நசீர் உசைன் எழுதி தயாரித்து, அமீர் கான் முக்கிய வேடங்களில் ஜூஹி சாவ்லாவுடன் நடித்தார். இந்தத் திரைப்படம் 29 ஏப்ரல் 1988 அன்று வெளிவந்து வசூல்ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது, அமீர்கான் மற்றும் ஜூஹி சாவ்லாவை முன்னணி நட்சத்திரங்களாக மாற்றியது.[2]

கயாமத் சே கயாமத் தக்
இயக்கம்மன்சூர் கான்
தயாரிப்புநசீர் உசைன்
கதைநசீர் உசைன்
ஆமிர் கான்
இசைஆனந்த் மிலிந்த்
நடிப்புஆமிர் கான்
ஜூஹி சாவ்லா
ஒளிப்பதிவுகிரண் டியாகன்சு
படத்தொகுப்புசாபர் சுல்தான்
கலையகம்நசீர் உசைன் பிலிம்சு
வெளியீடுஏப்ரல் 29, 1988 (1988-04-29)
ஓட்டம்163 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொத்த வருவாய்₹50 மில்லியன் (net)[1]

படத்தின் கதைக்களம் லைலா மற்றும் மஜ்னு, ஈர் ராஞ்சா, மற்றும் ரோமியோ ஜூலியட் போன்ற உன்னதமான சோகமான காதல் கதைகளில் நவீன கால வடிவத்தை எடுத்துக் கொண்டது. பாலிவுட்டில் "காதல் இசை வகை திரைபடத்தைப் புதுப்பித்த" இத்திரைப்படம் பாலிவுட் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருந்ததோடு 1990 களில் பாலிவுட்டில் இசைக்கு முக்கியத்துவமளித்த காதல் படங்களுக்கான ஒரு மாதிரியை அமைத்தது எனலாம். மஜ்ரூஹ் சுல்தான்புரி எழுதிய பாடல்களுடன், ஆனந்த்-மிலிந்த் இசையமைத்த படத்தின் ஒலிப்பதிவு சம அளவில் வெற்றி பெற்றது, 1980களில் 8 மில்லியனிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அதிகம் விற்பனையான பாலிவுட் இசைத்தொகுப்புகளுள் ஒன்றாக ஆனது. மேலும் "பாப்பா கெஹ்தே ஹைன்" இந்த இசைத் தொகுப்பின் மிகவும் பிரபலமான பாடலாகும். இந்த இசையொலிப்பதிவு ஆனந்த்-மிலிந்த்,[3] மற்றும் இந்தியாவின் முன்னணி இசைத்தட்டு நிறுவனங்களில் ஒன்றான டி-சீரிஸின் தொழில் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

36 வது தேசிய திரைப்பட விருதுகளில், கயாமத் சே கயாமத் தக், முழுமையான பொழுதுபோக்கினை வழங்கும் சிறந்த பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. 34 வது ஃபிலிம்பேர் விருதுகளில், திரைப்படம் 11 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் (மன்சூர்), சிறந்த ஆண் அறிமுகம் (அமீர்) மற்றும் சிறந்த பெண் அறிமுகம் (சாவ்லா) உட்பட முன்னணி 8 விருதுகளை வென்றது. இண்டியாடைம்ஸ் மூவீஸ், "பார்க்க வேண்டிய முதல் 25 பாலிவுட் படங்களில்" இத்திரைப்படத்தை தரவரிசைப்படுத்துகிறது.[4]

தயாரிப்பு

தொகு

இத்திரைப்படம் நசீர் உசைனின் மகனான மன்சூர் கான் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமும் மன்சூரின் மைத்துனரான அமீர் கான் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படமுமாகும். இத்திரைப்படமானது பெற்றோரின் எதிர்ப்பினால் திருப்பிச்செலுத்தப்படாத காதலை விளக்கும் ஒரு நவீன காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அமீர் கான் ஒரு வசீகரத் தோற்றம் கொண்ட பக்கத்து வீட்டுப் பையனைப் போல் காட்சியளிக்கும் நாயகனாக பாத்திரமாக்கப்பட்டுள்ளார்.[5] இத்திரைப்படத்தின் கதையானது ஒரு நவீன லைலா-மஜ்னு, ஈர் ராஞ்சா மற்றும் ரோமியோ ஜூலியட் கதையைப் போன்றது எனலாம்.[5][6]

அமீரை முன்னணி நடிகராக அறிமுகம் செய்ய தனது தந்தை நசீர் விரும்பியதை நினைவு கூர்ந்த மன்சூர், அவரது தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பார்த்த பிறகு மன்சூர் படத்தை இயக்குவார் என்று உறுதியாக நம்பினார்.[7][8] இத்திரைப்படத்திற்கு நஃப்ரத் கே வாரிஸ் என்ற பெயரே முதலில் சூட்டப்பட்டிருந்தது. பின்னர் கயாமத் சே கயாமத் தக் என்று மறு பெயரிடப்பட்டது.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. Chopra, Anupama (22 February 2015). "Fifty shades of K". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/home/sunday-times/Fifty-shades-of-K/articleshow/46328902.cms. 
  2. "Domestic Box Office". 2013. பார்க்கப்பட்ட நாள் 4 November 2014.
  3. "India Today". இந்தியா டுடே (Living Media) 18: 52. 1993. https://books.google.com/books?id=crIYAQAAMAAJ. "Anand–Milind did six films before hitting the jackpot with Qayamat se Qayamat Tak in 1988.". 
  4. Kanwar, Rachna (3 October 2005). "25 Must See Bollywood Movies". Indiatimes movies இம் மூலத்தில் இருந்து 15 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080915022131/http://movies.indiatimes.com/Special_Features/25_Must_See_Bollywood_Movies/articleshow/msid-1250837,curpg-5.cms. 
  5. 5.0 5.1 Tejaswini Ganti (2004). Bollywood: A Guidebook to Popular Hindi Cinema. Psychology Press. pp. 122–123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-28854-5.
  6. Panjwani, Narendra (2006). Emotion pictures: cinematic journeys into the Indian self (in ஆங்கிலம்). Rainbow Publishers. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186962725.
  7. "The man who made Aamir Khan a star". www.rediff.com.
  8. Srinivasan, Pankaja (5 May 2013). "Silver lining...". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/silver-lining/article4684859.ece. 
  9. Manwani, Akshay (6 November 2016). "The Majrooh Sultanpuri of writers". The Hindu. https://www.thehindu.com/news/cities/mumbai/The-Majrooh-Sultanpuri-of-writers/article16437901.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயாமத்_சே_கயாமத்_தக்&oldid=4118460" இலிருந்து மீள்விக்கப்பட்டது