மார்ச்சு 30
நாள்
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 30 (March 30) கிரிகோரியன் ஆண்டின் 89 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 90 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 276 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 598 – பால்க்கன் நடவடிக்கை: ஆவார் நாடோடிக் குழு பைசாந்தியப் பேரரசின் முக்கிய நகரமான தோமிசு மீதான முற்றுகையை நிறுத்தினர். அவார்-சிலாவிக் நாடோடிக் குழுக்கள் கொள்ளை நோயினால் பெருமளவில் அழிந்ததைத் தொடர்ந்து அவர்களது தலைவர் முதலாம் பயான் தன்யூப் ஆற்றின் வடக்கே பின்வாங்கினார்.
- 1296 – இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான சண்டையில், இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்டு பெரிக் நகரை சூறையாடினார்.
- 1699 – குரு கோவிந்த் சிங் பஞ்சாபின், அனந்த்பூர் சாகிப் நகரில் கால்சா அமைப்பைத் தோற்றுவித்தார்.[1]
- 1818 – இயற்பியலாளர் அகசுடீன் பிரெனெல் ஒளியியல் சுழற்சி பற்றிய தனது குறிப்புகளை பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் படித்தார்.[2]
- 1822 – ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா பிராந்தியம் உருவாக்கப்பட்டது.
- 1831 – யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிசன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.[3]
- 1842 – அறுவைச் சிகிச்சைகளில் முதன்முதலாக ஈதர் மயக்க மருந்து குரோபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
- 1851 – ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- 1856 – கிரிமியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பாரிசு உடன்பாடு எட்டப்பட்டது.
- 1858 – அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஐமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.
- 1861 – சேர் வில்லியம் குரூக்சு தாலியம் தனிமத்தைக் கண்டுபிடித்தார்.
- 1863 – டென்மார்க்கு இளவரசர் வில்லெம் கியோர்க் கிரேக்கத்தின் ஜார்ஜ் மன்னராக முடிசூடினார்.
- 1867 – அலாஸ்கா மாநிலத்தை 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²) என்ற கணக்கில் 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, உருசியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா கொள்வனவு செய்தது.
- 1912 – மொரோக்கோ பிரான்சின் பாதுகாப்பில் உள்ள ஒரு நாடாக அறிவிக்கப்பட்டது.
- 1940 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: புதிய சீன பொம்மை அரசின் தலைநகராக நான்கிங் நகரை சப்பான் அறிவித்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: நேசப் படைகள் பல்காரியா தலைநகர் சோபியா மீது பெரும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டன.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: நியூரம்பெர்க் நகரைத் தாக்க அனுப்பப்பட்ட பிரித்தானியாவின் 795 போர் வானூர்திகளில் 95 வானூர்திகள் திரும்பவில்லை.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனைப் படை ஆஸ்திரியாவின் வியன்னா நகரைக் கைப்பற்றியது; போலந்து, செஞ்சேனைப் படைகள் இணைந்து தான்சிக்கைக் கைப்பற்றின.
- 1949 – பனிப்போர்: ஐசுலாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தது. இதற்கு எதிரான கலவரம் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்றது.
- 1965 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கத் தூதராலயத்திற்கு முன்னால் தானுந்துக் குண்டொன்று வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
- 1972 – வியட்நாம் போர்: வடக்கு வியட்நாம் படைகள் தெற்கு வியட்நாமின் பாதுகாப்பு வலயத்தினுள் சென்றதை அடுத்து அங்கு போர் மூண்டது.
- 1979 – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எய்ரி நீவ் என்பவர் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இருந்து வெளியேறும் போது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். ஐரிய தேசிய விடுதலை இராணுவம் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
- 1981 – அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் வாசிங்டனில் உணவு விடுதி ஒன்றில் வைத்து ஜோன் இங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார். மேலும் மூவர் காயமடைந்தனர்.
- 1982 – கொலம்பியா விண்ணோடம் நியூ மெக்சிகோவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
பிறப்புகள்
- 1432 – இரண்டாம் முகமது, உதுமானிய சுல்தான் (இ. 1481)
- 1566 – கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1613)
- 1709 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761)
- 1746 – பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய-பிரான்சிய ஓவியர் (இ. 1828)
- 1853 – வின்சென்ட் வான் கோ, டச்சு-பிரான்சிய ஓவியர் (இ. 1890)
- 1861 – சுவாமி யோகானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1899)
- 1889 – க. சொர்ணலிங்கம், ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 1982)
- 1894 – நிக்கொலாய் பரபாசொவ், சோவியத், உருசிய வானியலாளர் (இ. 1971)
- 1908 – தேவிகா ராணி, இந்தியத் திரைப்பட நடிகை (இ. 1994)
- 1925 – தி. க. சிவசங்கரன், தமிழக மார்க்சியத் திறனாய்வாளர் (இ. 2014)
- 1926 – இங்வர் காம்பரத், சுவீடன் தொழிலதிபர் (இ. 2018)
- 1930 – கே. ஆர். சோமசுந்தரம், மலேசிய-இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்
- 1936 – சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (இ. 2015)
- 1940 – கே. எஸ். ஆனந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2021)
- 1945 – எரிக் கிளாப்டன், ஆங்கிலேய இசைக்கலைஞர், பாடகர்
- 1966 – விக்ரமன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்
- 1979 – நோரா ஜோன்ஸ், இந்திய-அமெரிக்க இசைக்கலைஞர், பாடகி
- 1984 – சமந்தா ஸ்டோசர், ஆத்திரேலிய டென்னிசு வீராங்கனை
- 1992 – பாலக் முச்சால், இந்தியப் பின்னணிப் பாடகி
இறப்புகள்
- 1664 – குரு அர் கிருசன், சீக்கிய நம்பிக்கையின் எட்டாம் குரு (பி. 1656)
- 1840 – பியூ பிரம்மல், ஆங்கிலேய-பிரான்சிய ஆடை வடிவமைப்பாளர் (பி. 1778)
- 1951 – நா. பொன்னையா, ஈழத்துப் பத்திரிகையாளர், பதிப்பாளர், சமூக சேவையாளர் (பி. 1892)
- 1986 – ஜேம்ஸ் காக்னி, அமெரிக்க நடிகர் (பி. 1899)
- 2002 – ஆனந்த் பக்சி, இந்தியக் கவிஞர் (பி. 1930)
- 2005 – பிரெட் கோரெமாட்சு, அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1919)
- 2005 – ஒ. வே. விஜயன், மலையாள எழுத்தாளர், ஓவியர் (பி. 1930)
- 2015 – இங்கிரிடு கிரோயெனவெல்டு, இடச்சு வானியலாளர் (பி. 1921)
- 2017 – என். எம். நம்பூதிரி, கேரள வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர் (பி. 1943)
சிறப்பு நாள்
- நில நாள் (பாலத்தீனம்)
- தேசிய மருத்துவர்கள் நாள் (ஐக்கிய அமெரிக்கா)
மேற்கோள்கள்
- ↑ Mahmood, Cynthia Keppley (1996). Fighting for faith and nation dialogues with Sikh militants. Philadelphia: University of Pennsylvania Press. pp. 43–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0812215922. இணையக் கணினி நூலக மைய எண் 44966032.
- ↑ A. Fresnel, "Mémoire sur les couleurs développées dans les fluides homogènes par la lumière polarisée" ("Memoir on colors developed in homogeneous fluids by polarized light"), read 30 March 1818; printed in A. Fresnel (ed. H. de Senarmont, E. Verdet, and L. Fresnel), Oeuvres complètes d'Augustin Fresnel, Paris: Imprimerie Impériale, vol. 1, 1866, pp. 655–83, at pp. 659–60.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 15