நிக்கொலாய் பரபாசொவ்
நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் (Nikolay Pavlovich Barabashov, மார்ச்சு 30, 1894, கார்க்கோவ், கார்க்கொவ் அரசு, உருசியப் பேரரசு - ஏப்பிரல் 29, 1971) ஒரு சோவியத் ஒன்றிய வானியலாளரும் உருசிய வானியலாளரும் ஆவார்.
இவர் உக்கிரைனில் உள்ள கார்க்கிவ் பல்கலைக்கழகத்தில் 1919 இல் பட்டம் பெற்றார்; கார்க்கிவ் வான்காணக இயக்குநராக 1930 இல் பணியாற்றினார்; இவர் 1934 இல் கார்க்கிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார், 1934; இவர் 1943 முதல் 1946 வரை கார்க்கிவ் பல்கலைக்கழக் காப்பாளர் (Rector) ஆக இருந்தார். இவர் 1948 இல் உக்கிரைனிய சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தில் உறுப்பினர் ஆனார்.
இவரும் 1961 இல் எடுக்கப்பட்ட நிலாவின் சேய்மைப்புற ஒளிப்படங்களின் ஆசிரியர் ஆவார். இது நிலாவின் மறுபக்க நிலப்படம் எனப்பட்டது. செவ்வாயில் உள்ள பரபாசொவ் குழிப்பள்ளம் 1973 இல் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. சோவியத் வானியலாளர் நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்கால் கண்டுபிடிக்கப்பட்ட 2883பரபாசொவ் எனும் சிறுகோளுக்கு 1978 இல் இவரது பெயர் இடப்பட்டுள்ளது.[1]
தகைமைகளும் விருதுகளும்
தொகு- சமவுடைமை உழைப்பு வீர்ர்
- நான்கு இலெனின் ஆணைகள்
- உழைப்புக்கான செம்பதாகை ஆணை
மேற்கோள்கள்
தொகு- ↑ Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names (5th ed.). New York: Springer Verlag. p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-00238-3.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)