மார்ச்சு 21
நாள்
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 21 (March 21) கிரிகோரியன் ஆண்டின் 80 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 81 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 285 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 630 – உரோமைப் பேரரசர் எராக்கிளியசு கிறித்தவப் புனிதச் சின்னமான உண்மையான சிலுவையை எருசலேமிற்கு மீளக் கையளித்தார்.
- 1152 – பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது.
- 1188 – அண்டோக்கு யப்பான் பேரரசராகப் பதவியேற்றார்.
- 1556 – கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
- 1788 – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது.
- 1800 – உரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் நகரை விட்டு விரட்டப்பட்டதை அடுத்து, வெனிசு நகரில் ஏழாம் பயசு திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- 1801 – பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது.
- 1844 – பகாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு முதலாம் நாள் ஆகும். ஆண்டுதோறும் இந்நாள் பகாய் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
- 1871 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் செருமானியப் பேரரசின் முதலாவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1913 – அமெரிக்காவின் ஒகைய்யோவில் டேட்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 360 பேர் உயிரிழந்தனர், 20,000 வீடுகள் அழிந்தன.
- 1917 – டானிசு மேற்கிந்தியத் தீவுகள் கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1919 – அங்கேரிய சோவியத் குடியரசு நிறுவப்பட்டது. உருசியாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஐரோப்பாவில் உருவான முதலாவது பொதுவுடைமை அரசு இதுவாகும்.
- 1921 – கம்யூனிசப் போரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்ய புதிய பொருளாதாரக் கொள்கையை போல்செவிக் கட்சி நடைமுறைப்படுத்தியது.
- 1925 – அமெரிக்காவின் டென்னிசி மாநிலத்தில் மனிதக் கூர்ப்பு பற்றிய கல்வி தடை செய்யப்பட்டது.
- 1935 – பாரசீக நாட்டை ஈரான் (ஆரியரின் நாடு) என அழைக்கும்படி அதன் தலைவர் ரெசா ஷா வெளிநாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
- 1937 – புவேர்ட்டோ ரிக்கோவில் பொன்சு நகரில் அமெரிக்க ஆளுநரின் உத்தரவின் கீழ் காவல்துறையினர் சுட்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலை நகரை பிரித்தானியப் படையினர் விடுவித்தனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானங்கள் தென்மார்க்கின் கோபனாவன் நகரில் பாடசாலை ஒன்றின் மீது குண்டுகளை வீசியதில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
- 1948 – முகமது அலி ஜின்னா உருது மட்டுமே பாக்கித்தானின் அரசு மொழியாக இருக்கும் என டாக்காவில் வைத்து அறிவித்தார்.
- 1960 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாபிரிக்காவில் சார்ப்வில் என்ற இடத்தில் கறுப்பின தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி காவற்படையினர் சுட்டதில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
- 1965 – நாசா ரேஞ்சர் 9 என்ற சந்திரனுக்கான தனது ஆளில்லா விண்ணுளவியை ஏவியது.
- 1970 – முதலாவது பூமி நாளுக்கான அழைப்பை சான் பிரான்சிஸ்கோ நகர முதல்வர் யோசப் அலியோட்டோ விடுத்தார்.
- 1980 – ஆப்கானித்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து மாஸ்கோவில் 1980 ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
- 1984 – மணலாறு பிரதேசத்தைத் தடைவலயமாக்கி இலங்கை அரசு அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களை அடித்து விரட்டினர்.
- 1990 – 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது.
- 1999 – பெர்ட்ராண்ட் பிக்கார்டு பிறையன் யோன்சு ஆகியோர் வெப்ப வாயுக் கூண்டில் உலகை வலம் வந்து சாதனை படைத்தனர்.
- 2000 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இசுரேலுக்கான தனது முதலாவது இறைப்பயணத்தை மேற்கொண்டார்.
- 2006 – டுவிட்டர் சமூக ஊடகம் உருவாக்கப்பட்டது.
பிறப்புகள்
- 1685 – யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750)
- 1768 – ஜோசப் ஃபூரியே, பிரான்சிய கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1830)
- 1807 – சைமன் காசிச்செட்டி, தமிழ் புளூட்டாக் நூலை எழுதிய ஈழத்தவர் (இ. 1860)
- 1866 – அந்தோனியா மவுரி, அமெரிக்க வானியலாளர் (இ. 1952)
- 1867 – பாண்டித்துரைத் தேவர், தமிழகத் தமிழறிஞர் (இ. 1911)
- 1887 – எம். என். ராய், இந்திய அரசியல்வாதி (இ. 1954)
- 1915 – ஜேம்ஸ் ராம்ஸ்போதம், இரண்டாம் சோல்பரிப் பிரபு, யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (இ. 2004)
- 1916 – பிசுமில்லா கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (இ. 2006)
- 1923 – பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (இ. 2014)
- 1923 – நிர்மலா ஸ்ரீவஸ்தவா, இந்திய சமயத் தலைவர் (இ. 2011)
- 1927 – ஆல்ட்டன் ஆர்ப், அமெரிக்க-செருமானிய வானியலாளர் (இ. 2013)
- 1928 – சூரிய பகதூர் தாபா, நேபாளத்தின் 23வது பிரதமர் (இ. 2015)
- 1930 – கா. செ. நடராசா இலங்கை எழுத்தாளர், கவிஞர், தமிழறிஞர் (இ. 2006)
- 1936 – காமினி பொன்சேகா, சிங்களத் திரைப்பட நடிகர் (இ. 2004)
- 1939 – அலி அகமது உசேன் கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (இ. 2016)
- 1946 – திமோதி டால்டன், உவெல்சு-ஆங்கிலேய நடிகர்
- 1958 – கேரி ஓல்ட்மன், ஆங்கிலேய நடிகர்
- 1966 – ஷோபனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1978 – ராணி முகர்ஜி, இந்திய திரைப்பட நடிகை
- 1980 – ரொனால்டினோ, பிரேசில் காற்பந்து வீரர்
- 1991 – அந்துவான் கிரீசுமன், பிரான்சியக் காற்பந்து வீரர்
இறப்புகள்
- 543 – நூர்சியாவின் பெனடிக்ட், இத்தாலியப் புனிதர் (பி. 480)
- 1556 – தாமஸ் கிரான்மர், ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. 1489)
- 1762 – நிகோலசு லூயிசு தெ லா கைல்லே, பிரெஞ்சு வானியலாளர், மதகுரு (பி. 1713)
- 1847 – மேரி அன்னிங், பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர் (பி. 1799)
- 1922 – ச. வே. இராமன் பிள்ளை, மலையாள எழுத்தாளர் (பி. 1858)
- 1998 – இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி, தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1914)
- 2008 – க. சச்சிதானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், கவிஞர் (பி. 1921)
- 2012 – யாழூர் துரை, ஈழத்து எழுத்தாளர், நாடக இயக்குனர் (பி. 1946)
- 2013 – சின்னுவ அச்செபே, நைஜீரிய எழுத்தாளர் (பி. 1930)
- 2016 – பிலிம் நியூஸ் ஆனந்தன், தமிழகப் பத்திரிகையாளர் (பி. 1928)
சிறப்பு நாள்
- மர நாள் (போர்த்துகல், லெசோத்தோ)
- இணக்க நாள் (ஆத்திரேலியா)
- மனித உரிமைகள் நாள் (தென்னாப்பிரிக்கா)
- விடுதலை நாள் (நமீபியா, தென்னாப்பிரிக்காவிடம் இருந்து 1990)
- பன்னாட்டு வன நாள்
- பன்னாட்டு வண்ண நாள்
- அன்னையர் நாள் (அரபு நாடுகள்)
- உலகக் கவிதை நாள்
- சர்வதேச இனப்பாகுபாடு நிராகரிப்பு நாள்
- உலக டவுன் நோய்க்கூட்டறிகுறி நாள்
- ஈரானியப் புத்தாண்டு நாள்
- சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்
- உலக பொம்மலாட்ட நாள்