சினுவா அச்சிபே

(சின்னுவ அச்செபே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சினுவா அச்சிபே (Chinua Achebe, நவம்பர் 16, 1930 - மார்ச்சு 22, 2013)[1] நைஜீரியாவைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர், இலக்கிய விமர்சகர் ஆவார். இவர் ஆங்கிலத்திலேயே புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் கதைகள் எனப் பரவலாக எழுதினார். இவற்றில், இவரது புதினங்களே மிகவும் குறிப்பிடத்தக்கவையாக கணிக்கப்படுகின்றன.

சினுவா அச்சிபே
சின்னுவ அச்சிப்பே (2008)
சின்னுவ அச்சிப்பே (2008)
பிறப்புஆல்பர்ட் சினுயலுமோகு அச்சிப்பே
(1930-11-16)16 நவம்பர் 1930
ஓகிடி, நைஜீரியா
இறப்பு22 மார்ச்சு 2013(2013-03-22) (அகவை 82)
பாஸ்டன், மாசச்சூசெட்ஸ்
தொழில்டேவிட் மற்றும் மாரியானா பிஷர் பல்கலைக்கழகம் பேராசிரியரும் பிரௌன் பல்கலைக்கழக ஆபிரிக்க கல்விக்கான பேராசிரியரும்
தேசியம்நைஜீரியர்
காலம்1958–2013
குறிப்பிடத்தக்க படைப்புகள்"தி ஆப்ரிகன் டிரைலாஜி":
திங்ஸ் ஃபால் அபார்ட்,
நோ லாங்கர் அட் ஈஸ்,
ஏர்ரோ ஆஃப் காட்;
எ மான் ஆஃப் தி பீபிள்;
அன்ட்ஹில்ஸ் ஆஃப் தி சவன்னா

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட கௌரவப் பட்டங்களை இவருக்கு வழங்கியுள்ளன.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

சினுவா அச்செபே 1930 ஆம் ஆண்டில் நைஜீரியாவின் ஓகிடியில் இக்போ இனத்தைச் சேர்ந்த ஏசாயா ஒகாஃபோ அச்செபே மற்றும் ஜேனட் அனெனெச்சி இலோக்புனம் அச்செபே ஆகிய இணையருக்கு பிறந்தார்.[2] இவர்கள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ சமயத்தை தழுவினார்கள். இக்போ பாரம்பரியத்தில் கதை சொல்லல் முக்கிய இடம் வகித்தது. சினுவா அச்செபே தனது தாய் மற்றும் சகோதரியிடம் இருந்து பல கதைகளைக் கேட்டு வளர்ந்தார்.

கல்வி

தொகு

1936 ஆம் ஆண்டில் சையிண்ட பிலிப்ஸ் மத்திய பள்ளியில் சேர்ந்தார். அவரது திறமையினால் உயர் வகுப்பிற்கு மாற்றப்பட்டார். வாசிப்பிலும் கையெழுத்திலும் சிறந்து விளங்கினார்.[3] அவர் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு பள்ளியிலும், மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு சுவிசேஷ சேவைகளிலும் கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பின் நைஜீரியாவில் முதல் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.[4] அச்சிபே மருத்துவ படிப்பிற்காக சலுகை வழங்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் முதல் உட்கொள்ளலில் பல்கலைக்கழக கல்லூரியில் (தற்போது இபாடன் பல்கலைக்கழகம்) சேர்ந்தார். இபாடனில் கற்கும் போது ஆய்வுகளில் ஆப்பிரிக்காவைப் பற்றிய ஐரோப்பிய இலக்கியங்களை விமர்சிக்கத் தொடங்கினார். மருத்துவ படிப்பை இடை நிறுத்திவிட்டு ஆங்கிலம், வரலாறு மற்றும் இறையியல் துறைகளுக்கு மாறினார். அவர் தனது துறையை மாற்றியதால் உதவித்தொகையை இழந்தார். அரசாங்க உதவித் தொகை மற்றும் அவரது குடும்பத்தினரின் உதவியினால் கல்விக் கட்டணத்தை செலுத்தினார். பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, அச்செபே தனது முதல் சிறுகதையான "இன் எ வில்லேஜ் சர்ச்சில்" எழுதினார். 1953 இல் இபாடனில் நடந்த இறுதித் தேர்வுகளுக்குப் பிறகு, அச்செபேக்கு இரண்டாம் வகுப்பு பட்டம் வழங்கப்பட்டது.[5]

அச்சிபே பட்டம் பெற்ற பின்னர் நைஜீரிய ஒலிபரப்பு சேவையில்  (என்.பி.எஸ்) இல் பணிபுரிந்தார்.[6] 1950 ஆம் ஆண்டில் திங் ஃபால் அப் என்ற புதினத்தை எழுதி உலகளவில் கவனத்தைப் பெற்றார். 1960 ஆம் ஆண்டில் நோ லாங்கர் அட் ஈசி என்ற புதினத்தையும், 1964 ஆம் ஆண்டில் அரோ ஆப் கோட் , 1966 ஆம் ஆண்டில் எ மேன் ஆப் த பீப்பிள், 1987 ஆம் ஆண்டில் ஆன்டில்ஸ் ஆப் தி சவன்னா ஆகிய புதினங்கள் வெளியிடப்பட்டன. அச்சிபே தனது புதினங்களை ஆங்கிலத்தில் எழுதினார். ஆப்பிரிக்க இலக்கியங்களில் காலனித்துவவாதிகளின் மொழியான என்ற ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்தார். அச்சிபே 1967 ஆம் ஆண்டில் நைஜீரியாவிலிருந்து பியாபரா பகுதி பிரிந்த போது பியாஃப்ரான் சுதந்திரத்தின் ஆதரவாளராக புதிய தேசத்தின் மக்களுக்கான தூதராக செயல்பட்டார். நைஜீரிய உள்நாட்டு போரினால் பட்டினியும் வன்முறையும் அதிகரித்ததால், ஐரோப்பா மற்றும் அமெரிக்க மக்களிடம் உதவி கோரினார். 1970 ல் நைஜீரிய அரசாங்கம் இப்பகுதியை மீண்டும் கைப்பற்றியபோது அரசியல் கட்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.[7] அரசியல் ஊழலினால் விரக்தியடைந்து பதவியை இராஜினாமா செய்தார். அச்சிபே 1990 ஆம் ஆண்டிலிருந்து பதினெட்டு வருடங்கள பார்ட் கல்லூரியிலும், 2009 ஆம் ஆண்டில் இறக்கும் வரையில் பிரவுன் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[8]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

1961 ஆம் ஆண்டில் கிறிஸ்டியானா சின்வே (கிறிஸ்டி) ஒகோலி என்பவரை திருமணம் முடித்தார். இத்தம்பதியினருக்கு சினெலோ, இகெச்சுக்வ், நவாண்டோ ஆகியோர் பிறந்தார்கள்.[9][10][11]

மேற்சான்றுகள்

தொகு
  1. March 22,2013 (1930-11-16). "BREAKING: Prof Chinua Achebe is dead - Premium Times Nigeria". Premiumtimesng.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-22.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. Ezenwa-Ohaeto, p. 7.
  3. Ezenwa-Ohaeto, p. 14.
  4. Ezenwa-Ohaeto, pp. 34–36.
  5. "Chinua Achebe". faculty.atu.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.
  6. Ezenwa-Ohaeto, p. 56.
  7. Quoted in Ezenwa-Ohaeto, p. 137.
  8. September 15; Nickel 401-863-2476, 2009 Media contact: Mark. "Famed African Writer Chinua Achebe Joins the Brown Faculty". news.brown.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  9. Ezenwa-Ohaeto, pp. 67–68.
  10. "history.msu.edu » Nwando Achebe". web.archive.org. 2010-05-03. Archived from the original on 2010-05-03. பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  11. Ezenwa-Ohaeto, p. 155.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினுவா_அச்சிபே&oldid=3486179" இலிருந்து மீள்விக்கப்பட்டது