ஆல்ட்டன் ஆர்ப்

ஆல்ட்டன் கிறித்தியன் "சிப்" ஆர்ப் (Halton Christian "Chip" Arp, மார்ச் 21, 1927 – திசம்பர் 28, 2013) ஓர் அமெரிக்க வானியலார். பல ஊடாட்ட இணைவுப் பால்வெளிகள் காட்டும் விந்தைப் பால்வெளிகளின் வான்வரை அட்டவணைகளுக்காக 1966 இல் பாராட்டப்பட்டதோடு, அவரது பெரு வெடிப்புக் கோட்பாட்டின் விமர்சனத்துக்காகப் பெயர்பெற்றவர். மேலும் அவர் இயல்பார்ந்த செம்பெயர்ச்சி அமைந்த செந்தரமற்ற அண்டவியலை முன்மொழிந்தவர்.

ஆல்ட்டன் ஆர்ப்
Halton Arp
இலண்டனில் ஆல்டன் ஆர்ப் அக்டோபர் 2000
பிறப்பு(1927-03-21)மார்ச்சு 21, 1927
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
இறப்புதிசம்பர் 28, 2013(2013-12-28) (அகவை 86)
மியூனிக், செருமனி
வாழிடம்செருமனி
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்பலோமார் வான்காணகம்
மேக்சு பிளாங்க் வானியற்பியல் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
ஆய்வு நெறியாளர்வால்ட்டர் பாடே
அறியப்படுவதுஇயல்பார்ந்த செம்பெயர்ச்சி
விந்தைப் பால்வெளிகளின் வான்வரை
விருதுகள்நியூகோம்ப் கிளீவ்லாந்துப் பரிசு (1960)
எலன் பி. வார்னர் வானியல் பரிசு (1960)

வாழ்க்கை

தொகு
 
ஆல்ட்டனும் (வலது) அவரது இரண்டு பேரர்களும், 2008

ஆர்ப் 1927 மார்ச் 21 இல் நியூயார்க் நகரில் பிறந்தார். அவர் மும்முறை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு நான்கு பெண்களும் ஐந்து பேரர்களும் உண்டு.[1] அவருக்கு ஆர்வார்டு கல்லூரி இளநிலைப் பட்டத்தை 1949 இல் வழங்கியது. அவருக்கு முனைவர் பட்டத்தை 1953இல் கால்டெக் வழங்கியது. பிறகு அவர் வாசிங்டன் கார்நிகி நிறுவனத்தில் 1953இல் ஆய்வாளராகச் சேர்ந்தார். அப்போது அவர் தனது ஆய்வை மவுண்ட் வில்சன் வான்காணகத்திலும், பலோமார் வான்காணகத்திலும் மேற்கொண்டார். ஆர்ப் 1955இல் இந்தியானா பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளரானார். பிறகு 1957இல் பலோமார் வான்காணகத்தில் ஆசிரியராகி அங்கு 29 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1983இல் செருமனி மேக்சு பிளாங்க் வானியற்பியல் கழகத்தில்ஆசிரியரானார். இவர் செருமனி, மியூனிக்கில் 2013 திசம்பர் 28 இல் காலமானார்.[1][2]

விந்தைப் பால்வெளிகளின் வான்வரை

தொகு

ஆர்ப் விந்தைப் பால்வெளிகளின் வான்வரை என்ற இயல்பிகந்த பால்வெளிகளின் அட்டவணையைத் தொகுத்தார். அது 1966இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது.[3] காலத்தைப் பொறுத்து பால்வெளிகள் எப்படி மாறுகின்றன என்பதை வானியலார் எவருமே புரிந்து கொள்ளவில்லை எனவுணர்ந்த ஆர்ப் அந்தத் திட்டத்தில் பணிபுரியலானார். பால்வெளி வான்வரை பால்வெளிகளின் படிமலர்ச்சியை ஆய்வு செய்வதற்கான படங்களைத் தரவல்லது. ஆர்ப் பிறகு இவ்வான்வரையைத் தனது பகுதி உடுக்கணப் பொருட்களின் (QSOs) விவாதத்துக்கானச் சான்றாகப் பயன்படுத்தினார்.

விமர்சனங்கள்

தொகு

ஆர்ப் அவரது கோட்பாடுகளை 1960களில் முன்மொழிந்தார். அதற்குப் பின்னர் தொலைநோக்கிகளும் வானியல் கருவிகளும் வேகமாக மேம்பாடுற்றன. பிறகு ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட்டது. கெக் வான்காணகத்தில் 8-10 மீ தொலைநோக்கிகள் நிறுவப்பட்டன. மேலும் மீப்பெரும் தொலைநோக்கிகளும் செயல்படத் தொடங்கின. CCD என்ற மின்னூட்டப் பிணிப்பு ஒற்றிகளும் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தன. இந்த கருவிகள் பகுதி உடுக்கணப் பொருள்களை (QSO) மேலும் நுட்பமாக ஆய்வு செய்யப் பயன்படுத்தப்பட்டன. உயர் செம்பெயர்ச்சி உள்ள நெடுந்தொலைவுப் பால்வெளிகளே பகுதி உடுக்கணப் பொருள்கள் (QSO) என இன்று பொதுவாக ஏற்கப்பட்டுவிட்டது. பல வான் அளக்கைப் படிமங்கள் வழியாக, குறிப்பாக அபிள் ஆழ்புல ஆய்வுகள் வழியாக உயர் செம்பெயர்ச்சிப் பொருள்கள் பகுதி உடுக்கணப் பொருள்கள் (QSO) அல்லவெனவும் அவை மிக அருகில் உள்ள இயல்பான பால்வெளிகளை ஒத்த பால்வெளிகளே எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[4] எக்சு-கதிரில் இருந்து கதிர்வீச்சு அலைநீளங்கள் வரையிலான கதிர்நிரல் ஆய்வில் கண்டுள்ளபடி, உயர் செம்பெயர்ச்சி பால்வெளிகளின் கதிர்நிரல்கள் அருகில் உள்ள பால்வெளிகளின் கதிர்நிரல்களுடன் பொருந்திவிடுகின்றன. குறிப்பாக உயர்மட்ட விண்மீன்கள் உருவாக்கம் உள்ளவற்றுடன் மட்டுமன்றி விண்மீன் உருவாக்கம் முடிந்தவற்றுடனும் செம்பெயர்ச்சி விளைவுகளுக்குத் திருத்தம் செய்த பிறகு ஒன்றிப் போகின்றன.[5][6][7] அண்மைச் செய்முறைகள் திரட்டிய தரவுகளின் அளவைப் பன்மடங்கு விரிவாக்கியதால் ஆர்ப்பின் எடுகோள்களை நேரடியாகச் சோதிப்பது எளிதாகியது. மேலும் அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது:

"... அண்டவியற்சாராத அலைவுநேரச் செம்பெயர்ச்சி உள்ள செலூக்கப் பால்வெளிகளில் இருந்தே குவாசர்களும் பொருள்களும் வீசியெறியப்படுகின்றன என்ற கருதுகோளை நிறுவ [[சுலோன் கணினி வான் அளக்கையிலிருந்தும் 2dF QSO செம்பெயர்ச்சியில் இருந்தும் அனைவருக்கும் கிடைக்கும் தரவுகளே போதுமானவை, இருவேறுபட்ட இயல்பார்ந்த செம்பெயர்ச்சிப் படிமங்களை ஆய்வு செய்ததில் […] முற்கணித்த அலைவெண் log(1+z) இலோ வேறெந்த அலைவெண்ணிலுமோ அலைவுநேரத் தன்மை நிலவுவதற்கானச் சான்றேதும் கிடைக்கவில்லை."[8]

ஆர்ப் தனது வெரு வெடிப்புக் கோட்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேயில்லை. 2010ஆம் ஆண்டு இறப்புவரை, அதற்கெதிராக ஜியோஃபிரிபுர்பிட்ஜ், மார்கரெட் பர்பிட்ஜ் இருவருடனும் ஒருங்கிணைந்து மக்களுக்கானதும் அறிவியல் வெளியீட்டுக்கானதுமான கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தார்.[9][10] .[11]

பரிசுகளும் விருதுகளும்

தொகு
  • அமெரிக்க வானியல் கழகத்தால், ஒவ்வோராண்டும் கடந்த ஐந்தாண்டுகளில் நோக்கீட்டு அல்லது கோட்பாட்டு வானியலில் நிகழ்த்திய சாதனைக்காகத் தரப்படும் வானியலுக்கான எலன் பி. வார்னரின் பரிசு 1960இல் ஆர்ப்புக்கு வழங்கப்பட்டது.[12]
  • இதே ஆண்டில், ஆர்ப், "பால்வெளிகளின் விண்மீன் உள்ளடக்கம்" உரைக்காக, நியூகோம்ப் கிளீவ்லாந்து விருதைப் பெற்றார். இது அமெரிக்க வானியல் கழகமும் AAAAS பிரிவு-D யும் இருந்த கூட்டமர்வில் படிக்கப்பட்டது.[13]
  • இவர் 1984இல் அம்போல்ட் பரிசைப் பெற்றார்.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Halton C. Arp, Astronomer Who Challenged Big Bang Theory, Dies at 86
  2. Big-bang-defying giant of astronomy passes away
  3. H. Arp (1966). "Atlas of Peculiar Galaxies". Astrophysical Journal Supplement 14: 1–20. doi:10.1086/190147. Bibcode: 1966ApJS...14....1A. 
  4. S. P. Driver, A. Fernandez-Soto, W. J. Couch, S. C. Odewahn, R. A. Windhorst, S. Phillips, K. Lanzetta, A. Yahil (1998). "Morphological Number Counts and Redshift Distributions to I<26 from the Hubble Deep Field: Implications for the Evolution of Ellipticals, Spirals, and Irregulars". Astrophysical Journal 496 (2): L93–L96. doi:10.1086/311257. Bibcode: 1998ApJ...496L..93D. 
  5. W. J. Couch, R. S. Ellis, J. Godwin, D. Carter; Ellis; Godwin; Carter (1983). "Spectral energy distributions for galaxies in high redshift clusters. I - Methods and application to three clusters with Z = 0.22-0.31". Monthly Notices of the Royal Astronomical Society 205: 1287–1312. doi:10.1093/mnras/205.4.1287. Bibcode: 1983MNRAS.205.1287C. https://archive.org/details/sim_monthly-notices-of-the-royal-astronomical-society_1983-12_205_3/page/1287. 
  6. Postman, L. M. Lubin, J. B. Oke (1998). "A Study of Nine High-Redshift Clusters of Galaxies. II. Photometry, Spectra, and Ages of Clusters 0023+0423 and 1604+4304". Astronomical Journal 116 (2): 560–583. doi:10.1086/300463. Bibcode: 1998AJ....116..560P. https://archive.org/details/sim_astronomical-journal_1998-08_116_2/page/560. 
  7. R. S. Priddey, R. G. McMahon (2001). "The far-infrared-submillimetre spectral energy distribution of high-redshift quasars". Monthly Notices of the Royal Astronomical Society 324 (1): L17–L22. doi:10.1046/j.1365-8711.2001.04548.x. Bibcode: 2001MNRAS.324L..17P. 
  8. Tang, Su Min; Zhang, Shuang Nan, "Critical Examinations of QSO Redshift Periodicities and Associations with Galaxies in Sloan Digital Sky Survey Data", in The Astrophysical Journal, Volume 633, Issue 1, pp. 41-51 (2005) arXiv e-print
  9. H.C. Arp official website:articles
  10. Fulton, C.C.; H.C. Arp (July 18, 2012). "The 2dF Redshift Survey. I. Physical Association and Periodicity in Quasar Families". ApJ 754 (2): 134. doi:10.1088/0004-637X/754/2/134. Bibcode: 2012ApJ...754..134F. http://iopscience.iop.org/0004-637X/754/2/134/. 
  11. "Smithsonian/NASA ADS Custom Query Form". Results for "Arp, H". பார்க்கப்பட்ட நாள் September 3, 2006.
  12. "Helen B. Warner Prize for Astronomy". Archived from the original on 2007-04-04. பார்க்கப்பட்ட நாள் 2015-05-26.
  13. About the AAAS: History & Archives பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்
  14. Juan Miguel Campanario and Brian Martin, "Challenging dominant physics paradigms பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்" (2004) Journal of Scientific Exploration, vol. 18, no. 3, Fall 2004, pp. 421-438.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்ட்டன்_ஆர்ப்&oldid=4021092" இலிருந்து மீள்விக்கப்பட்டது