ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்

ஒட்டோ எடுவார்ட் லியோபோல்ட் ஃபொன் பிஸ்மார்க் (Otto Eduard Leopold von Bismarck) [வாழ்நாள்:1, ஏப்ரல், 1815 முதல் 30, ஜூலை 1898 வரை]. இவர், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் புருசிய இராச்சியம் மற்றும் நாட்டினதும், பின்னர் ஜேர்மனி இராஜ்ஜியம் ஆகியவற்றில் பங்களித்த அரசியலாளர் ஆவார். 1862 - 1890 வரை பிரசியாவின் பிரதம அமைச்சராக இருந்த இவர் ஜேர்மனியை ஒன்றிணைப்பதில் முன்னின்றார். 1867 தொடக்கம், வடக்கு ஜெர்மன் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். இரண்டாம் ஜேர்மன் பேரரசு நிறுவப்பட்டபோது, பிஸ்மார்க் அதன் வேந்தரானார் (Chancellor). நடைமுறை அரசியல் (Realpolitik) நடத்தினார். இதனால் இவரை இரும்புத் தலைவர் (Iron Chancellor) என அழைத்தனர். நாட்டின் தலைவராக பிஸ்மார்க், ஜேர்மன் அரசில் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்ததுடன், தனது பதவிக் காலத்திலும் அதற்குப் பின்னரும்கூட ஜேர்மனியின் அரசியலிலும், அனைத்துலக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார்.

ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்
ஜெர்மனியின் (Germany) முதல் வேந்தர் அல்லது ஜெர்மன் பேரரசின் முதல் தலைவர்
பதவியில்
21, மார்ச், 1871 – 20, மார்ச், 1890
ஆட்சியாளர்கள்ஜெர்மனியின் முதலாம் வில்ஹெல்ம் (Wilhelm) (1871-1888)
ஜெர்மானியப் பேரரசின் மூன்றாம் பிரெட்ரிக் (Frederick III),
ஜெர்மனியின் இரண்டாம் வில்ஹெல்ம் (Wilhelm II) (1888-1890)
Deputyஸ்டோல்பெர்க்(Stolberg)-வெர்னிகெரொடு(Wernigerode) பகுதியின் ஒட்டொ
கார்ல் ஹீன்ரிச் வொன் போட்டிசர்(Karl Heinrich von Boetticher)
முன்னையவர்நிலை நிறுவப்பட்டது
பின்னவர்லியோ வோன் காப்ரிவி(Leo von Caprivi)
பிரசியாவின் ஜனாதிபதித் தலைவர்
பதவியில்
9, நவம்பர், 1873 – 20, மார்ச்சு, 1890
ஆட்சியாளர்கள்முதலாம் வில்ஹெல்ம்
மூன்றாம் பிரெட்ரிக்
இரண்டாம் வில்ஹெல்ம்
முன்னையவர்ஆல்ப்ரெச்ட் வொன் ரூன்(Albrecht von Roon)
பின்னவர்லியோ வோன் காப்ரிவி
பதவியில்
23, செப்டம்பர், 1862 – 1, சனவரி, 1873
ஆட்சியாளர்வடக்கு ஜேர்மன் கூட்டமைப்பின் அதிபர்
முன்னையவர்ஹோஹென்லோஹெ(Hohenlohe) மற்றும் இங்கெல்ஃபின்கென்(Ingelfingen) பகுதியின் இளவரசர் மற்றும் அடால்ஃப்(Adolf)
பின்னவர்ஆல்ப்ரெச்ட் வொன் ரூன்
வடக்கு ஜெர்மன் கூட்டமைப்பின் அதிபர்
பதவியில்
1, ஜூலை, 1867 – 21, மார்ச்சு, 1871
குடியரசுத் தலைவர்முதலாம் வில்ஹெல்ம்
முன்னையவர்நிலை நிறுவப்பட்டது
பின்னவர்நிலை நீக்கப்பட்டது
பிரஷியாவின் வெளியுறவு அமைச்சர்
பதவியில்
23, நவம்பர், 1862 – 20, மார்ச்சு, 1890
பிரதமர்அவரே
ஆல்ப்ரெச்ட் வொன் ரூன்
முன்னையவர்ஆல்ப்ரெச்ட் வொன் பெர்ன்ஸ்டோர்ஃப் (Albrecht von Bernstorff)
பின்னவர்லியோ வோன் காப்ரிவி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1, ஏப்ரல், 1815
ஷ்சோன்ஹாஸன்(Schönhausen), இரண்டாம் க்ரெயிஸ் ஜெரிச்சோவ் (Kreis Jerichow),

சாக்சோனியின் (Saxony) மாகாணம்,

பிரஷியா இராச்சியம்
ஜெர்மனியில் உள்ள சாக்சோனியின் நவீன அன்ஹல்ட் (Anhalt),
இறப்பு30, ஜூலை, 1898 (வயது 83)
ஃப்ரிட்ரிச்ஸ்ருஹ் (Friedrichsruh), ஸ்ஷ்லெஸ்விக் (Schleswig)- ஹோல்ஸ்டீன் (Holstein), ஜெர்மானியப் பேரரசு
அரசியல் கட்சிசுயேச்சை அரசியல்வாதி
துணைவர்(கள்)ஜொஹன்னா வொன் புட்காமார் (Johanna von Puttkamer)
(1847–94; அவரது இறப்பு)
பிள்ளைகள்மேரி (Marie)
ஹெர்பர்ட் வொன் பிஸ்மார்க் (Herbert von Bismarck)
வில்ஹெம் வொன் பிஸ்மார்க் (Wilhelm von Bismarck)
பெற்றோர்கார்ல் வில்ஹெம் ஃபெர்டினான்டு வொன் பிஸ்மார்க் - karl Wilhelm Ferdinand von Bismarck (1771–1845)
வில்ஹெமினெ லூயிஸெ மென்கென் - Wilhelmine Luise Mencken (1789–1839)
முன்னாள் கல்லூரிகாட்டிங்கென் (Göttingen) பல்கலைக்கழகம்
பெர்லினின் (Berlin) ஹம்போல்ட் (Humboldt) பல்கலைக்கழகம்
கிரீஃப்ஸ்வால்ட் (Greifswald) பல்கலைக்கழகம்[1]
தொழில்வழக்கறிஞர்
கையெழுத்து

இளமைக்காலம்

தொகு

பிஸ்மார்க் பிரசிய மாகாணமான சக்சனியில், பெர்லின் நகருக்கு மேற்கில் அமைந்திருந்த செல்வந்தக் குடும்பமொன்றின் எஸ்டேட்டான சோன்ஹோசென் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை கார்ல் வில்ஹெல்ம் பேர்டினண்ட் ஃபொன் பிஸ்மார்க் ஒரு நில உரிமையாளரும், முன்னாள் படைத்துறை அலுவலரும் ஆவார். தாயார், வில்ஹெமின் லூயி மென்கென், அரசியல்வாதியான ஏ. ஜே. பி டெயிலரின் மகளாவார். இவர் கல்வியறிவு உடையவர். பிஸ்மார்க் தனது தந்தையாரைப் போலப் பிரபுத்துவத் தோற்றத்தையே வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டார். இவர் ஒரு முறையான படைத்துறை அலுவலர் இல்லை. இருந்தபோதும், படைத்துறைச் சீருடை போல உடையணிந்தார். இவர் பொது நோக்காளர். இவரது பின்னணியைச் சேர்ந்த ஆண்கள் பலர் அந்நாளில் கல்வியறிவு பெற்றிருக்கவில்லை. அவர்களுக்கு மாறாக இவர் நல்ல கல்வியறிவு பெற்றவராக இருந்தார். மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய திறன் இவருக்கு இருந்தது. இளைஞராக இருந்தபோது, தனது மனைவிக்கு எழுதிய கடிதங்களில் ஷேக்ஸ்பியரையும், பைரனையும் மேற்கோள் காட்டுவதுண்டு. பிரஷ்ய நாட்டின் ஜங்குர் என்ற நிலையில் பிஸ்மார்க்கை உலகம் ஒரு புதிய கோணத்தில் பார்த்தது. அவர் இராணுவச் சீருடை அணிவதன் மூலம் மக்களை உற்சாகப்படுத்திய விதம் அதற்கு உறுதுணையாயிருந்தது. அவர் பேச்சாற்றலில் சிறந்தவர். சிறந்த பேச்சாளர். அவர் தன் தாய்மொழி ஜெர்மனுடன் கூடுதலாக, ஆங்கிலம், பிரஞ்சு, இத்தாலிய, போலிஷ் மற்றும் ரஷிய மொழிகளிலும் சரளமான பேச்சாற்றல் கொண்டிருந்தார்.[2]

கல்வி

தொகு

பிஸ்மார்க் தன்னுடைய தொடக்கக்கல்வியை, ஜோஹான் எர்ன்ஸ்ட் ப்ளாமானின்(Johann Ernst Plamann) ஆரம்பப்பள்ளியிலும்,[3] இடைநிலைக்கல்வியை, ப்ரெட்ரிச்-வில்ஹெல்ம் (Friedrich-Wilhelm) மற்றும் கிரேஸ் க்ளோஸ்டர் (Graues Kloster) இடைநிலைப் பள்ளிகளிலும் பயின்றார். 1832 முதல் 1833 வரை அவர் கோட்டிங்கென் (Göttingen) பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார், அங்கு அவர் கார்ப்ஸ் ஹனோவராவின் (Hannovera) ஒழுங்கமைக்கப்பட்ட தனிப் பணிக் குழு உறுப்பினராக இருந்தார். பின்னர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்தார் (1833-35). 1838 ஆம் ஆண்டில், கிரேஸிஸ்வால்ட் இராணுவப் போர்க்காலப் படைவீரராக இருந்தார். அப்போது அவர், கிரேஸிஸ்வால்ட் (Greifswald) பல்கலைக்கழகத்தில்[1] விவசாயம் பயின்றார். கோட்டிங்கனில், பிஸ்மார்க் அமெரிக்க மாணவர் ஜான் லோத்ரோப் மோட்லியுடன் (John Lothrop Motley) நட்புடன் இருந்தார். மோட்லி புகழ்பெற்ற வரலாற்றாசிரியராகவும், இராஜதந்திரியாகவும் இருந்தார். 1839 ஆம் ஆண்டில், மோட்லி எழுதிய மோர்ட்டனின் (Morton) நம்பிக்கை அல்லது ஒரு மாகாணத்தின் நினைவுகள், என்ற புதினத்தில், தன் ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் பிஸ்மார்க்குடனான தன் வாழ்க்கை நினைவுகள் பற்றி எழுதியுள்ளார். அதில், தன் நண்பர் பிஸ்மார்க்கைப் பற்றிக் கூறுகையில், அவர் கவனக்குறைவு உள்ளவர், விசித்திரமான கிறுக்குத்தனம் உடையவர், அளவிட முடியாத அளவிற்கு உயர்திறன் வாய்ந்தவர், வனப்புடைய இளைஞர் என்று குறிப்பிடுகிறார்.[4]

 
21 வயதில் பிஸ்மார்க், 1836

அவர் பெர்லின் , கோட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

ஆரம்ப அரசியல் ஈடுபாடு

தொகு

பிஸ்மார்க் 1847 ஆம் ஆண்டில், தன் முப்பத்தி இரண்டாவது வயதில் புதிதாக உருவாக்கப்பட்ட ப்ரஷியன் சட்டமன்றமான வெரீனிக்டர் லாண்டுடாகு (Vereinigter Landtag) பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு, அவர் ராஜதந்திரி, பிற்போக்கு அரசியல்வாதி, பேச்சுச் சாதுரியம் உள்ளவர் என்ற பெருமைகளைப் பெற்றார். தான் அரசாட்சி செய்வதற்கு ஒரு தெய்வீக உரிமை பெற்றிருப்பதாக வெளிப்படையாக வாதிட்டார். இவர் ஜெர்லாக் (Gerlach) சகோதரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் கடவுள் பற்றுள்ள லூதரன்கள். தங்களின் நியூ ப்ரெஸ்ஸிஸ்கே ஸீடங் (Neue Preussische Zeitung) என்ற செய்தித்தாளில் கவர்ச்சிகரமான இரும்புச் சிலுவை சித்திரத்தை உள்ளடக்கி இருந்தனர். இதனால், இப்பத்திரிக்கையை நடத்திய இக்குழுவினர் "க்ருஸ்ஸீசிதுங்-Kreuzzeitung" என்றழைக்கப்பட்டனர்.[5][6]

பிஸ்மார்க், புரட்சியாளர்களை, "தங்கள் சண்டைகளுக்கெதிராகக் கலகம் விளைவிக்கிறவர்கள்" என்று பதிவு செய்தார். அரசு புரட்சியைக் கட்டுப்படுத்தாது என்று ஆட்சியாளர்கள் அறிந்திருந்தனர். பிஸ்மார்க் தாராளவாதிகளுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கினார். அவர் ஒரு அரசியலமைப்பை பிரகடனப்படுத்த வாக்குறுதியளித்தார். கருப்பு-சிவப்பு-தங்கம் என்னும் புரட்சிகர நிறங்களை அணிந்திருந்தார். அவை இன்றைய ஜெர்மானியக் கொடியில் காணப்படுகின்றன. பிரஷியா மற்றும் பிற ஜெர்மானிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு தேசிய அரசுக்கு ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன் முதன்மை ஜனாதிபதியாக தாராளவாத, காட்ஃப்ரைடு லுடால்ஃப் காம்ப்ஹாஸன் (Gottfried Ludolf Camphausen) நியமிக்கப்பட்டார்.[7]

முதலாவதாக, பிஸ்மார்க் தனது தோட்ட விவசாயிகளை ஒரு இராணுவப் படையாகக்கிளர்ந்தெழச் செய்தார். பெர்லின் அரசரின் பெயரில் அணிவகுத்துச் செல்ல முயன்றார்.[8] அவர் தனது சேவைகளை வழங்குவதற்காக பெர்லினுக்குப் பயணம் செய்தார். ஆனால் தேவைப்பட்டால், தனது தோட்டங்களில் இருந்து இராணுவத்திற்கு உணவு வழங்குவதன் மூலம் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கூறினார். அரசரின் சகோதரர் இளவரசர் வில்ஹெல்ம் (Wilhelm) இங்கிலாந்திற்கு ஓடிவிட்டார். பிஸ்மார்க், வில்ஹெம்மின் மனைவி ஆகஸ்டாவுடன் உட்சூழ்ச்சி செய்து அவரது பதினான்கு வயது மகனான ஃப்ரெடெரிக் வில்லியமை (Frederick William) பிரஷ்ய சாம்ராஜ்யத்தில், பிரெட்ரிக் வில்லியம் IV இடத்தில் பதவி அமர்த்தினார். ஆகஸ்டாவிற்கு இதில் எந்த பயனும் இல்லை. அதன்பின்னர் அவர் பிஸ்மார்க்கை வெறுத்தார்.[9]

ஜெர்லாக் சகோதரர்கள் உட்பட, பழமைவாதிகள் மீண்டும் திரண்டனர். ஆலோசகர்களின் உள் குழு ஒன்றை அமைத்தனர், இது "கேமரில்லா" என அழைக்கப்பட்டது. இது மன்னரை மையமாகக் கொண்டிருந்தது. பேர்லினை தன் கட்டுப்பாட்டுக்குள் மீட்டுக்கொண்டது. ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கபட்டிருந்தாலும், அதன் விதிகள் புரட்சியாளர்களின் கோரிக்கைகளுக்கு மிகக் குறைவான அளவே திருப்தியளித்தன.[10]

ஜெர்மானிய நாடுகளின் ஐக்கியம்

தொகு

1849 ஆம் ஆண்டில், பிஸ்மார்க், லாண்ட்டாகிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஜெர்மானிய நாடுகளின் ஐக்கியத்தை எதிர்த்தார். இந்த ஐக்கியத்தால், பிரசியா தன் சுதந்திரத்தை இழந்துவிடும் என்று வாதிட்டார். அவர் எர்ஃபர்ட் (Erfurt) பாராளுமன்றத்தில் பிரஷியாவின் பிரதிநிதிகளில் ஒருவரானார். ஜெர்மன் மாநிலங்களின் கூட்டமைப்பானது ஜெர்மானிய நாடுகளின் ஐக்கியத்தை முன்னிறுத்தி திட்டமிடும் தளமாகும். அவர் கூட்டமைப்பின் திட்டங்களை திறம்பட எதிர்ப்பதற்காகவே அதில் சேர்ந்தார். பிரஸ்ஸியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரண்டு முக்கிய ஜெர்மன் மாநிலங்களின் ஆதரவை இழந்ததால் பாராளுமன்றம், சரியாக இயங்கவில்லை.

ப்ருஸ்ஸியா புரட்சி

தொகு

1847ஆம் ஆண்டு அவரது திருமணம் முடிந்த அதே ஆண்டில், பிஸ்மார்க் என்று புதிதாக உருவாக்கப்பட்ட ப்ருச்சியன் சட்டமன்றத்தில், ஒரு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு, அவர் உணர்வை பேச்சுக்களின் மூலம் வெளிபடுத்தினார்.அதனால் வெளிப்படையாக மன்னர் ஆட்சி ஒரு பிற்போக்கு அரசியல் என நிருபித்தார்.

 
Otto Fürst von Bismarck became Chancellor of Germany in 1871.

மார்ச் 1848 ல், ப்ருஸ்ஸியா ஒரு புரட்சியை சந்தித்தது. முதலில் மன்னர் எழுச்சியை அடக்குவதற்கு இராணுவத்தை பயன்படுத்தி எதிர்கொண்டார். எனினும் ஆரம்பத்தில் புரட்சியில் ஈடுபட்டவர்களை அடக்க முடியவிலை. எனவே, இறுதியில் போட்ஸ்டாம் இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்புக்காக மன்னர் தாராளவாதிகளுக்கு ஏராளமான சலுகைகள் வழங்க ஆணையிட்டார். அவர், கறுப்பு, சிவப்பு மற்றும் தங்க புரட்சிகர நிறங்கள் அணிந்த போராளிகளிடம் ஒரு அரசியல் பிரகடனத்தை உறுதியளித்தார். ப்ருஸ்ஸிய மற்றும் பிற மாநிலங்களை நாடுகளை ஒன்றாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒப்புகொண்டார். இதுவே ஒட்டோ ஃபொன் பிஸ்மார்கின் முதல் அரசியல் சார்ந்த போராட்டம் ஆகும்.

ஜெர்மன் பேரரசின் அதிபர்

தொகு

பல போராட்டங்களுக்கு பின்னர் பிஸ்மார்க் ஜெர்மன் பேரரசின் அதிபரானார்.

 
1873 இல் பிஸ்மார்க்.

1871 இல், ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் புர்ஸ்ட் (பிரின்ஸ்) பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவர் ஜெர்மன் பேரரசின் இம்பீரியல் அதிபராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் ப்ருச்சியன் அலுவலகங்களிலும் (அமைச்சர், ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் உட்பட சில பதவிகள்) நீடித்தார். பின்னர் அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பின் பிஸ்மார்க் மீண்டும் எம்.பி. ஆனார்.

செர்மானிய பாங்குகளைப் பின்பற்ற செய்தல்

தொகு

செர்மானியப் பேரரசின் எல்லைகளுக்கு அருகே அமைந்த நாடுகள் மற்றும் மாநிலங்களில் வாழ்ந்த தேசிய சிறுபான்மையினரை செர்மானியக் குடிமக்களாக மாற்ற செர்மானிய பேரரசுக்குரிய உயர் அதிகாரமுள்ள மற்றும் மாகாண அரசாங்க அதிகாரத்துவங்கள் முயற்சி செய்தன. அவர்களால் கவரப்பட்ட எல்லைகள்:

  • வட கிழக்கில், டேன்ஸ் (Danes),
  • மேற்கில், பிரான்கோபோன்கள் (Francophones) மற்றும்
  • கிழக்கில், துருவங்கள், போன்றவை

பிரஸ்ஸியாவின் ஜனாதிபதித் தலைவராகவும், ஏகாதிபத்திய அதிபராகவும் இருந்த பிஸ்மார்க், செர்மானியமயமாக்கலை நிலைப்படுத்தப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்:

  • மொழி அடிப்படையில் பழங்குடியினரை வரிசைப்படுத்துதல்,
  • மத அடிப்படையில் பழங்குடியினரை வரிசைப்படுத்துதல்,[11]
  • துருவப் பிரதேச மக்களிடம் விரோதப் போக்கைக் கடைப்பிடித்தல், போன்றவை.

இவை ப்ரஷியன் வரலாற்றில் பிஸ்மார்க்கால் மேற்கொள்ளப்பட்ட வேரூன்றிய மற்றும் உகந்த உந்துதல் ஆகும். பிஸ்மார்க் தன் தோட்டங்களில் பணிபுரிந்த தனது விவசாயிகளுக்கு "தனது தோட்டங்களில் பணிபுரிந்தனர்" என்ற காரணத்திற்காக மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவில்லை. படித்த போலந்து நாட்டு சொத்துரிமை கொண்டாடும் முதலாளி வர்க்கத்தினர் மற்றும் புரட்சியாளர்கள், தங்களின் தனி அனுபவத்திலிருந்து பிஸ்மார்க்கை வெளிப்படையாய்ப் பழித்துரைத்தனர். இதனால் பிஸ்மார்க் அறிவார்ந்த ஆய்வாளர்களையும், அறிவுத்திறனுடையோரையும் அரசியலில் சேர்க்க விரும்பவில்லை.[12] பிஸ்மார்க்கின் இத்தகைய விரோதம் மற்றும் முரண்பாடு 1861 இல் அவர் தன் சகோதரிக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், "துருவவாசிகள் தங்கள் உயிருக்கு உத்தரவாதமடையச் செய்யாத வகையில் அவர்களை அடித்து இறுக்க வேண்டும் [...]. நான் அவர்களின் சூழ்நிலையைக் கண்டு அனைத்து வகையிலும் அனுதாபப்படுகிறேன். ஆனால், நாம் வாழ வேண்டுமெனில், அவர்களை நீக்குவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. ஓநாய்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவை. ஆனால் அவை நம்மை நெருங்கும்போது அவற்றை சுட்டுவிடுவோம். அது போன்றுதான் இதுவும்."[13][14] என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஆண்டின் பிற்பகுதியில், பிஸ்மார்க் தனது போர்க்குணத்தை மாற்றிக்கொண்டு பிரஷ்யாவின் வெளியுறவு மந்திரிக்கு பின்வருமாறு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், "போலந்து தேசிய இயக்கத்தின் ஒவ்வொரு வெற்றியும், பிரஷியாவின் தோல்வியே. நாங்கள் குடிமுறை உரிமையியல் நீதி மற்றும் விதிகளின் படி இந்த முறைமைக் கூறுக்கு எதிராக, போராட்டத்தைத் தொடர முடியாது. ஆனால் போரின் விதிகளுக்கு ஏற்ப செயல்படுவோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.[15] போலிஷ் தேசியவாதத்துடன், ஜெர்மனிக்கு முடிவிலா அச்சுறுத்தல் இருந்தது. போலந்து நாடு, செர்மானிய பாங்குகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையைவிட, போலந்து நாட்டை வெளியே துரத்துவதையே பிஸ்மார்க் விரும்பினார்.[16]

ஒட்டோவின் காப்பீட்டு திட்டம்

தொகு

1889 இல் வயது முதிர்ந்தோர் மற்றும் இயலாதோர் காப்பீட்டு மசோதாவை ஓட்டோ அறிமுகப்படுத்தினார்.

முதியோர் ஓய்வூதிய திட்டம், முதலாளிகளுக்கு சமமாக தொழிலாளர்களுக்கும் காப்பீடு ஆகியவற்றையும் ஒட்டோ அறிமுகப்படுத்தினார். 70 வயதுக்கு அடைந்த தொழிலாளர்களுக்கும் ஒரு ஓய்வூதிய தொகை வழங்கினார். விபத்து காப்பீடு மற்றும் சுகாதார காப்பீடு திட்டங்கள் போலல்லாமல், இந்த திட்டத்தினால் அனைத்து தொழிலாளர்கள், தொழில் வகைகள், விவசாய, கைவினைஞர்கள் மற்றும் தொடக்க ஊழியர்கள் போன்ற அனைவரும் பயன்பெற்றனர். மாநிலம் அல்லது மாகாண அரசு இந்த திட்டங்களை நேரடியாக மேற்பார்வை செய்தன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Steinberg, Jonathan. Bismarck: A Life. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199782529.
  2. Lowe, Charles (2005). Prince Bismarck: An Historical Biography With Two Portraits. Kessinger Publishing. p. 538. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781419180033.
  3. Field 1898, ப. 603–04.
  4. Steinberg, 2011, pp. 39–41.
  5. Steinberg, 2011, p. 93.
  6. Pflanze 1971, ப. 56.
  7. Steinberg, 2011, p. 89.
  8. Steinberg, 2011, p. 86.
  9. Steinberg, 2011, pp. 87–88.
  10. Pflanze 1971, ப. 64.
  11. Taylor 1955, ப. 124.
  12. Taylor 1955, ப. 10.
  13. Crankshaw 1981, ப. 149 Cited from Bismarck: Die gesammelten Werke, edited by H. von Petersdorff, et al. (Berlin, 1923), Volume XIV, p. 568. Letter to Malwine von Arnim, 14 March 1861
  14. Norman Davies, God's Playground, a History of Poland: 1795 to the present (1982) p. 124 online
  15. Crankshaw 1981, ப. 149. Cited from Bismarck: Die gesammelten Werke, edited by H. von Petersdorff, et al. (Berlin, 1923), Volume III, pp. 289–90. Letter to Albrecht von Bernstorff, 13 November 1861
  16. Crankshaw 1981, ப. 404.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டோ_ஃபொன்_பிஸ்மார்க்&oldid=2713368" இலிருந்து மீள்விக்கப்பட்டது