மார்ச்சு 24
நாள்
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 24 (March 24) கிரிகோரியன் ஆண்டின் 83 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 84 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 282 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1401 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார்.
- 1550 – பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
- 1603 – முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார்.
- 1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த உதவி செய்தமைக்காக கரொலைனா மாகாணக் குடியேற்றம் எட்டு பிரபுக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
- 1720 – முதலாம் பிரெடெரிக் சுவீடனின் மன்னராக முடிசூடினார்.
- 1765 – பெரிய பிரித்தானியா 13 குடியேற்றங்களிலும் தமது படையினரை நிறுத்த சட்டமூலம் நிறைவேற்றியது.
- 1829 – கத்தோலிக்கர் நாடாளுமன்றத்தில் பணியாற்ற அனுமதித்து பிரித்தானிய நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது.
- 1832 – அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில், மோர்மொன் தலைவர் இரண்டாம் யோசப்பு இசுமித்து கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்டார்.
- 1837 – கனடாசில் ஆப்பிரிக்கக் கனடியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1854 – வெனிசுவேலாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
- 1878 – பிரித்தானியக் கப்பல் யூரிடைஸ் மூழ்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
- 1882 – காச நோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.
- 1896 – வரலாற்றில் முதன் முதலாக வானொலி சமிக்கையை உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உருவாக்கினார்.
- 1921 – முதலாவது பன்னாட்டு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி மான்டே கார்லோவில் இடம்பெற்றது.
- 1934 – பிலிப்பீன்சு தன்னாட்சியுள்ள பொதுநலவாய நாடாக அனுமதிக்கும் சட்டமூலம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.
- 1944 – நாட்சி செருமனியப் படைகள் உரோமை நகரில் 335 இத்தாலியப் பொதுமக்களைக் கொன்ரனர்,
- 1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் சகான் என்ற இடத்தில் செருமனிய சிறையில் இருந்து 76 நேசப் படையின் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர். இந்நிகழ்வு பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
- 1946 – பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியை இந்தியத் தலைமையிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தது.
- 1947 – மவுண்ட்பேட்டன் பிரபு பிரித்தானிய இந்தியாவின் ஆளுநரானார்.
- 1961 – பிரெஞ்சு மொழிக்கான கியுபெக் வாரியம் அமைக்கப்பட்டது.
- 1965 – இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- 1965 – நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிக்கு அனுப்பியது.
- 1976 – அர்கெந்தீனாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது. இசபெல் பெரோனின் ஆட்சி பறிக்கப்பட்டது.
- 1977 – இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினரல்லாத முதலாவது பிரதமராக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1980 – எல் சால்வடோர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோ சான் சல்வதோரில் படுகொலை செய்யப்பட்டார்.
- 1993 – சூமேக்கர்-லேவி வால்வெள்ளி கண்டுபிடிக்கப்பட்டது.
- 1998 – இந்தியாவில் டண்டான் பகுதியில் இடம்பெற்ற சுழற்காற்றினால் 250 பேர் உயிரிழந்து, 3000க்கு மேல் காயமடைந்தனர்.
- 1999 – கொசோவோ போர்: நேட்டோ படைகள் யூகொசுலாவியாவில் வான் தாக்குதலை நடத்தின.
- 1999 – பெல்ஜியத்தில் மோண்ட் பிளாங்க் சுரங்கத்தில் சுமையுந்து ஓன்றில் தீப் பிடித்ததில் 38 பேர் உயிரிழந்தனர்.
- 2003 – ஈராக்கில் இருந்து அமெரிக்க, பிரித்தானியப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு 21–1 என ஆதரவாக வாக்களித்தது.
- 2008 – பூட்டான் அதிகாரபூர்வமாக மக்களாட்சிக்கு மாறியது. முதலாவது பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
- 2015 – செருமன்விங்ஸ் விமானம் 9525 விமானம் பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மோதியதில் அதில் பயணம் செய்த னைத்து 150 பேரும் உயிரிழந்தனர்.
- 2020 – இந்தியாவில் கொரோனாவைரசு பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பிறப்புகள்
- 1494 – அகிரிகோலா சார்சியஸ், செருமானிய கனிமவியலாளர் (இ. 1555)
- 1607 – மைக்கெல் டி ருய்ட்டர், இடச்சுத் தளபதி (இ. 1667)
- 1693 – யோன் அரிசன், கடற் காலமானியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (இ. 1776)
- 1733 – சோசப்பு பிரீசிட்லி, ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1804)
- 1775 – முத்துசுவாமி தீட்சிதர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1835)
- 1834 – வில்லியம் மோரிஸ், ஆங்கிலேய ஆடை வடிவமைப்பாளர், கவிஞர் (இ. 1896)
- 1874 – ஆரி உடீனி, அங்கேரிய-அமெரிக்க வித்தைக்காரர், நடிகர் (இ. 1926)
- 1884 – பீட்டர் டெபாய், நோபல் பரிசு பெற்ற இடச்சு-அமெரிக்க இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1966)
- 1893 – வால்டேர் பாடே, செருமானிய வானியலாளர் (இ. 1960)
- 1903 – அடால்ஃப் புடேனண்ட்ட், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1995)
- 1903 – மால்கம் மக்கரிச், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 1990)
- 1905 – பி. எஸ். இராமையா, தமிழக எழுத்தாளர் (இ. 1983)
- 1922 – டி. எம். சௌந்தரராஜன், தமிழகப் பின்னணிப் பாடகர்
- 1930 – நீர்வை பொன்னையன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2020)
- 1932 – கே. ஏ. கிருஷ்ணசாமி, தமிழக அரசியல்வாதி (இ. 2010)
- 1936 – டேவிட் சசூக்கி, கனேடிய அறிவியலாளர்
- 1943 – ரகுநாத் மகபத்ர, இந்திய சிற்ப, கட்டடக் கலைஞர்
- 1947 – ஆலன் சுகர், ஆங்கிலேயத் தொழிலதிபர்
- 1949 – ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் 13வது பிரதமர்
- 1956 – இசுட்டீவ் பால்மர், அமெரிக்கத் தொழிலதிபர்
- 1961 – டீன் ஜோன்ஸ், ஆத்திரேலியத் துடுப்பாளர் (இ. 2020)
- 1965 – தி அண்டர்டேக்கர், அமெரிக்க மற்போர் வீரர், நடிகர்
- 1973 – ஜிம் பார்சன்ஸ், அமெரிக்க நடிகர்
- 1974 – அலிசன் ஹன்னிகன், அமெரிக்க நடிகை
- 1978 – கிஷோர், தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் (இ. 2015)
- 1979 – இம்ரான் ஹாஷ்மி, இந்திய நடிகர்
- 1979 – லேக் பெல், யூத-அமெரிக்கநடிகை, இயக்குநர்
இறப்புகள்
- 1603 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (பி. 1533)
- 1776 – யோன் அரிசன், கடற் காலமானியைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. 1693)
- 1849 – ஜோகன் தோபரீனர், செருமானிய வேதியியலாளர் (பி. 1780)
- 1882 – ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ, அமெரிக்கக் கவிஞர் (பி. 1807)
- 1905 – ழூல் வேர்ண், பிரான்சிய புதின எழுத்தாளர், கவிஞர் (பி. 1828)
- 1915 – மார்கரெட் இலிண்டுசே அகின்சு, ஆங்கிலேய-ஐரிய வானியலாளர் (பி. 1848)
- 1964 – யோக சுவாமிகள், யாழ்ப்பாணச் சித்தர் (பி. 1872)
- 1976 – பெர்னார்ட் மோண்ட்கோமரி, ஆங்கிலேய இராணுவ அதிகாரி (பி. 1887)
- 1980 – ஆஸ்கார் ரொமெரோ, சல்வதோர் பேராயர் (பி. 1917)
- 1988 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், தமிழக கருநாடக, திரையிசைப் பாடகர் (பி. 1933)