ஆலன் சுகர்
ஆலன் மைக்கல் சுகர், பரோன் சுகர் (ஆங்கிலம்:Alan Michael Sugar, Baron Sugar) (பிறப்பு 24 மார்ச் 1947) என்பவர் பிரித்தானிய தொழிலதிபர், ஊடகப் பிரபலம், அரசியல்வாதி மற்றும் அரசியல் ஆலோசகராவார்.[4][5] 2015 இல் சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் நூறு கோடிக்கு மேல் சொத்துள்ளவர்கள் பட்டியலில் சுகர் இடம்பெற்றார். 2016 இல் £1.15 பில்லியன் மதிப்புடன் ஐக்கிய இராஜ்யத்தில் 95வது பணக்கார நபராக இடம்பிடித்தார்.[1] தனது ஆம்ஸ்டர்ட் என்ற வாடிக்கையாளர் மின்னணு சாதன நிறுவனத்தை 2007 இல் பெரும் விலைக்கு விற்றார்.[6]
தி ரைட் ஹானரெபில் தி லாட் சுகர் | |
---|---|
63வது பிரிடிஷ் அகாதெமி திரைப்பட விழாவில் | |
பிறப்பு | ஆலன் மைக்கல் சுகர் 24 மார்ச்சு 1947 கிழக்கு லண்டன், இங்கிலாந்து |
இருப்பிடம் | சிக்வெல், எஸ்ஸெக்ஸ் |
தேசியம் | பிரித்தானியர் |
பணி | தொழிற்முனைவோர், பிரபலம், எழுத்தாளார், அரசியல்வாதி |
சொத்து மதிப்பு | £1.15 பில்லியன் (2016)[1] |
அரசியல் கட்சி | சுயேட்சை (2015-) தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்)[2] (1997–2015)[3] |
வாழ்க்கைத் துணை | அன் சுகர், லெடி சுகர் (née Simons) (தி. 1968) |
பிள்ளைகள் | சிம்மன் சுகர் டேனியல் சுகர் லூசீ சுகர் |
உறவினர்கள் | ரீட்டா சிமன்ஸ் |
அரசு தொழில்துறை ஆலோசகர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 25 மே 2016 | |
பிரதமர் | டேவிட் கேமரன் |
பிரபுக்கள் அவை உறுப்பினர் பிரபுகள் டெம்பொரல் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 ஜூலை 2009 | |
டோடேன்ஹம் ஹாட்ஸ்பூர் கால்பந்து குழுவின் தலைவராக 1991 முதல் 2001 வரை இருந்தார். டோனால்ட் டிரம்ப் நடித்து மார்க் பார்னெட் உருவாக்கிய நிகழ்ச்சி போல பிபிசி தொலைக்காட்சியில் அப்ரண்டீஸ் என்ற தொடரில் சுகர் பங்கேற்றார்.[7]
இளமைக் காலம்
தொகுகிழக்கு லண்டன் ஹக்கினியில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார்.[8] கிழக்கு முனையில் இவரது தந்தை நாதன் ஆடை நிறுவனத்தில் தையல்காரராக வேலைபார்த்தார்.[9] இவரது தாய்வழி தாத்தா உருசியா நாட்டிலும், தந்தைவழி தாத்தா போலந்து நாட்டிலும் பிறந்தவர்கள் ஆவர். தந்தைவழி பாட்டி சாரா சுகர் லண்டனில் போலாந்து தம்பதியினருக்குப் பிறந்தவராவார்.
குடும்ப வாழ்க்கை
தொகுயூத பண்பாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் சுகர் ஒரு இறைமறுப்பு கொள்கை கொண்டவர்.[10] ஆலன் சுகரும் இவரின் மனைவி அன் சுகரும் 1968 ஏப்பிரல் 28 இல் லண்டன், கிரேட் போர்ட்லேண்ட் வீதியில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் எஸ்ஸெக்ஸ் சிக்வெலில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சிம்மன் சுகர் மற்றும் டேனியல் சுகர் என்ற இரு மகன்களும், லூசீ சுகர் என்ற ஒரு மகளும் ஏழு பேரக் குழந்தைகளும் உள்ளனர்.[11] நடிகை ரீட்டா சிமன்ஸ் என்பவர் அன் சுகரின் தந்தைவழி அத்தையாவார்.[12]
சிரஸ் எஸ்.ஆர்.22 என்ற நான்கு இருக்கை விமானத்தை வைத்திருந்தார். 2008 ஜூலை 5 இல் மான்செஸ்டர் நகர விமானநிலையத்தில் ஈரப்பதமான தரையால் தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது.[13] இருந்தபோதும் எவ்விதக் காயங்களும் இன்றி உயிர்பிழைத்தார்.
அரசியல் தலையீடு
தொகு2012 ஆம் ஆண்டுக்கான லண்டன் மேயர் தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளராக போட்டியிட முயன்றதாக 2009 பிப்ரவரியில் ஈவினிங் ஸ்டாண்டர்ட் பத்திரிகையாளர் ஆண்ட்ரூ கில்கன் குறிப்பிட்டுள்ளார். உடனே தி கார்டியன் இதழ் செவ்வியில் சுகர் இதனைப் பகடி செய்தார். ஆனால் 2009 ஜூன் 5 ஆம் நாள் பிரித்தானிய பிரதமர் கார்டன் பிரவுன் தனது அமைச்சரவையை மாற்றிய போது சுகர் அரசின் தொழிற்துறை ஆலோசகரானார். தான் அரசியல் சார்பற்று தொழில் வளர்ச்சிக்கு உதவவே பணியமர்த்தவர் என்றார்.[14]
2014 ஆம் ஆண்டு நடந்த ஸ்காட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு தொடர்பாக ஸ்காட்லாந்து ஐக்கிய இராஜ்யத்துடன் இணைந்திருக்க விரும்பி தி கார்டியன் இதழுக்குக் கையெழுத்து இட்டு ஆதரவு தெரிவித்த 200 முக்கியப் பிரமுகர்களில் சுகரும் ஒருவராவார்.[15]
1997 முதல் 2015 வரை தொழிலாளர் கட்சியின் உறுப்பினராகவும் முதன்மை நன்கொடையாளராகவும் இருந்துள்ளார். 2015 மே 11 இல் பொதுத் தேர்தலுக்குப் பின் வணிக கொள்கை முரண்பாடுகளால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.[16]}}
ஆம்ஸ்டர்ட்
தொகு1968 இல் ஆம்ஸ்டர்ட் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தை நிறுவினார். விரைவில் அது வாடிக்கையாளர் மின்னணு சாதன நிறுவனமாக வளர்ந்தது. 1980 இல் இலண்டன் பங்குச் சந்தையில் ஆம்ஸ்டர்ட் பட்டியலனது, அதனுடன் வருமானமும் இரட்டிப்பானது.[17] 1984 இல் வீட்டுக் கணினிகளின் தேவை அதிகரிப்பதைத் தொடர்ந்து எட்டு பிட் இயந்திரமாக ஆம்ஸ்டர்ட் சிபிசி 464 கணினியை வெளியிட்டார். தொடர்ந்து பல மின்னணு சாதனங்கள் வெளியிட்டு வந்தாலும் இறுதியில் ஏற்பட்ட இழப்புகளால் £125 மில்லியனுக்கு 2007 ஜூலை 31 இல் விற்றார்.[6]
டோடேன்ஹம் ஹாட்ஸ்பூர்
தொகு1991 ஜூன் மாதம் டோடேன்ஹம் ஹாட்ஸ்பூர் என்ற கால்பந்து அணியை வாங்கினார். சுகரின் நிதி உதவி அணியின் பொருளாதாரச் சிக்கலுக்கு உதவியது, ஆனால் இவர் வியாபாரநோக்குடன் இதில் பணத்தைச் செலவு செய்தார் என்பதால் ரசிகர் விரக்தி அடைந்தனர். ஒன்பது ஆண்டுகள் தலைவராக இருந்து 1999 இல் கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை ஒன்றை மட்டுமே வெல்லமுடிந்தது.
References
தொகு- ↑ 1.0 1.1 "The Sunday Times - The Rich List". Archived from the original on 13 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 October 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Lord Sugar". Parliament of the United Kingdom. பார்க்கப்பட்ட நாள் 24 March 2014.
- ↑ Sugar, Alan (11 May 2015). "Resignation Statement". amshold.com. பார்க்கப்பட்ட நாள் 11 May 2015.
- ↑ "Let's do the business". The Jewish Chronicle. 14 May 2008. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
- ↑ "Sir Alan, you're hired as our rep". The Jewish Chronicle. 19 May 2008. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014.
- ↑ 6.0 6.1 "BSkyB agrees £125m Amstrad deal". BBC News. 31 July 2007 இம் மூலத்தில் இருந்து 15 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. http://news.bbc.co.uk/1/hi/business/6923517.stm. பார்த்த நாள்: 28 January 2009.
- ↑ Kranish, Michael (19 January 2017). "A fierce will to win pushed Donald Trump to the top". The Washington Post. https://www.washingtonpost.com/politics/a-fierce-will-to-win-pushed-donald-trump-to-the-top/2017/01/17/6b36c2ce-c628-11e6-8bee-54e800ef2a63_story.html.
- ↑ Beckford, Martin (9 May 2008). "Sir Alan Sugar fails to make top 100 Jews list". த டெயிலி டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் 3 June 2012.
- ↑ "The Lords think I'm a brusque, ignorant cockney" பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம், The Daily Telegraph
- ↑ "Sam Wollaston meets Sir Alan Sugar, star of The Apprentice". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
- ↑ Naughton, Philippe; Costello, Miles (26 March 2006). "In the line of fire". The Times (London). http://www.timesonline.co.uk/tol/life_and_style/article742101.ece. பார்த்த நாள்: 6 July 2008.
- ↑ Woodward, Clair (29 November 2015). "EastEnders' Rita Simons on playing a panto villain: It's weird and tiring but good fun" (in en). Daily Express. http://www.express.co.uk/entertainment/theatre/623421/EastEnders-actress-Rita-Simons-panto-villain.
- ↑ "Alan Sugar 'survives plane crash'". BBC. 7 July 2008. http://news.bbc.co.uk/newsbeat/hi/entertainment/newsid_7492000/7492620.stm. பார்த்த நாள்: 29 March 2012.
- ↑ Sugar: I'm not joining government BBC
- ↑ "Celebrities' open letter to Scotland – full text and list of signatories". The Guardian (London). 7 August 2014. https://www.theguardian.com/politics/2014/aug/07/celebrities-open-letter-scotland-independence-full-text. பார்த்த நாள்: 26 August 2014.
- ↑ Lord Sugar: 'Disillusioned' peer quits Labour Party dated 11 May 2015 at bbc.co.uk, accessed 11 May 2015
- ↑ Sean O'Grady (10 May 2006). "The Big Question: 'The Apprentice' is a hit – but how good a businessman is Sir Alan Sugar?". The Independent இம் மூலத்தில் இருந்து 11 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121111095908/http://www.independent.co.uk/news/business/analysis-and-features/the-big-question-the-apprentice-is-a-hit--but-how-good-a-businessman-is-sir-alan-sugar-477500.html. பார்த்த நாள்: 21 January 2011.