டட்லி - செல்வா ஒப்பந்தம், 1965

(டட்லி சேனநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1965 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டட்லி - செல்வா ஒப்பந்தம், 1965 அப்போதைய இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கும் தமிழர் தரப்பு தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்குமிடையே 1965, மார்ச் 24 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும், வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழிபேசுவோருக்கே முன்னுரிமை வழங்குவதும் இவ் ஒப்பந்தத்தின் சாராம்சங்கள் ஆகும்.

வரலாறு தொகு

1965 மார்ச் 22 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி 66 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 41 ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களையும் கைப்பற்றின. 151 ஆசனங்களில் 76 ஆசனங்கள் இருந்தால்தான் அரசாங்கத்தை நடத்த முடியும். மிகுதி ஆசனங்களுக்கு மற்றக் கட்சிகளின் ஆதரவைத்தேட வேண்டியிருந்தது. ஐ.தே.கட்சிக்கு அரசமைக்கும் பங்காளியாக தமிழரசுக் கட்சி முன்வந்தது. அதைத் தொடர்ந்து டட்லி- செல்வா ஒப்பந்தம் எழுதப்பட்டது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் தொகு

  • வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியே நிர்வாக மொழியாகவும் ஆவணங்கள் பதிவு செய்யும் மொழியாகவும் ஏற்கப்பட்டது.
  • வடக்கு - கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் மொழி பாவிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் தரப்பட்டது.
  • பிரதேச ஆட்சிமுறை மன்றங்கள் தாபிக்கப்பட வேண்டும் என்று ஏற்கப்பட்டது. அவற்றிற்கடங்கலான விடயங்கள் இரு தலைவர்களாலும் பின்னர் நிர்ணயிக்கப்படவிருந்தது.
  • காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிப்பங்கீடு சம்பந்தமாகப் பின்வரும் விடயங்கள் முக்கியமாகக் கருத்துக்கெடுக்க உடன்பாடு ஏற்பட்டது.
    • வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இருக்கும் அரசாங்க நிலங்கள் முதற்கண் அப்பிரதேசக் காணியில்லா குடியானவர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும்.
    • இரண்டாவதாக அவ்வாறு காணிபெற ஏற்றவர்கள் இல்லாத பட்சத்தில் வடக்கு - கிழக்கு வாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
    • மூன்றாவதாக நாட்டின் மற்றைய குடிமக்களுக்கு ஒதுக்கப்படலாம். ஆனால், முன்னுரித்து நாட்டில் வாழ் தமிழ் பேசும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.

வெளி இணைப்புகள் தொகு