இலங்கை சுதந்திரக் கட்சி
இலங்கை சுதந்திரக் கட்சி (Sri Lanka Freedom Party; ශ්රී ලංකා නිදහස් පක්ෂය) இலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். இது 1951 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வந்தது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது.
இலங்கை சுதந்திரக் கட்சி Sri Lanka Freedom Party | |
---|---|
ශ්රී ලංකා නිදහස් පක්ෂය | |
தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
செயலாளர் நாயகம் | தயசிரி ஜயசேகர[1] |
நிறுவனர் | எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா |
தொடக்கம் | 2 செப்டம்பர் 1951 |
முன்னர் | சிங்கள மகா சபை |
தலைமையகம் | 307, டி. பி. ஜயா மாவத்தை, கொழும்பு 10 |
செய்தி ஏடு | சிங்களே, தினகரா |
இளைஞர் அமைப்பு | இ.சு.க. இளைஞர் குன்னணி |
கொள்கை | சமூக மக்களாட்சி[2][3][4] சிங்கள பௌத்த தேசியம் |
அரசியல் நிலைப்பாடு | நடுநிலை-இடதுசாரி |
தேசியக் கூட்டணி | மகாஜன எக்சத் பெரமுன (1956 - 1959) மக்கள் கூட்டணி (1994 – 2004) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (2004 – 2019) சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு (2019 - இன்று) |
நிறங்கள் | நீலம் |
நாடாளுமன்றம் | 15 / 225 |
மாகாணசபைகள் | 269 / 417 |
உள்ளாட்சி சபைகள் | 9 / 340 |
தேர்தல் சின்னம் | |
கை | |
இணையதளம் | |
www | |
இலங்கை அரசியல் |
ஏப்ரல் 2 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6% வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் இலங்கை சனாதிபதி தேர்தல், 2005 இல் இ.சு.க. வேட்பாளர் மகிந்த ராஜபக்ச 50.3% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
ஆரம்பம்
தொகுஇ.சு.க. 1937 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மகா சபையின் வளர்சியில் தோன்றிய கட்சியாகும். சிங்கள மகா சபையானது 1945 பொதுத் தேர்தல் வரை ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) ஆதரித்து வந்தது. ஐ.தே.க. ஆட்சியில் பண்டாரநாயக்காவுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை. என்ற காரணமும் சிங்கள மகா சபைக்கு காணப்பட்டது. டி. எஸ். சேனநாயக்கா தனது ஆஸ்த்ரேலியா சுற்றுப் பயணத்தின் போது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு அக்கட்சியில் பிரதமர் பதவியை கொடுக்க மறுத்ததை காரணம் காட்டி 1951 இல் ஐ.தே.க.வுக்கான தனது ஆதரவை விலக்கி கொண்டு பண்டார நாயக்கா வெளியேறினார். பின்பு 1951இல் பண்டாரநாயக்கா சிங்கள மகா சபையை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றியமைத்தார். அவர் அமைத்த புதிய கட்சிக்கு இலங்கை சுதந்திர கட்சி என்று பெயர் இட்டார். அதன் கொள்கை சோசியலிசம் சமூக சனநாயகம் என்று சமூக வழி கொள்கை என்றாலும் அதன் அடிப்படை சித்தாந்தம் அக்கட்சியின் தலைவர் பண்டார நாயக்கா ஆரம்ப காலத்தில் சிங்கள மகா சபையின் தீவிர சிங்கள தேசியவாதமும், புத்த மதவாதத்தையுமே சார்ந்து இருந்தது. இக்கொள்கை சட்டமானதால் சிங்கள பிரஜைகளுக்கு சாதகமாகவும், சலுகையாகவும் இருந்தாலும். இலங்கை வாழ் தமிழ் பிரஜைகளுக்கு இடையே இன்று வரை தீராத இனவாத பிரச்சனையாக மாறியது.
தேர்தல் வரலாறு
தொகுநாடாளுமன்றத் தேர்தல்கள்
தொகுதேர்தல் ஆண்டு | வாக்குகள் | வாக்கு % | வென்ற இருக்கைகள் | +/– | கட்சி முடிவுகள் |
---|---|---|---|---|---|
1952 | 361,250 | 15.52% | 9 / 95
|
9 | எதிரணி |
1956 | 1,046,277 | 39.52% | 51 / 95
|
42 | அரசு |
1960 (மார்ச்) | 647,175 | 21.28% | 46 / 151
|
▼ 5 | எதிரணி |
1960 (சூலை) | 1,022,171 | 33.22% | 75 / 151
|
29 | அரசு |
1965 | 1,221,437 | 30.18% | 41 / 151
|
▼ 34 | எதிரணி |
1970 | 1,839,979 | 36.86% | 91 / 151
|
50 | அரசு |
1977 | 1,855,331 | 29.72% | 8 / 168
|
▼ 83 | எதிரணி |
1989 | 1,780,599 | 31.8% | 67 / 225
|
59 | எதிரணி |
1994 | 3,887,823 | 48.94% | 105 / 225
|
38 | அரசு [a] |
2000 | 3,900,901 | 45.11% | 107 / 225
|
2 | அரசு [b] |
2001 | 3,330,815 | 37.19% | 77 / 225
|
▼ 30 | எதிரணி |
2004 | 4,223,970 | 45.60% | 105 / 225
|
28 | அரசு [c] |
2010 | 4,846,388 | 60.33% | 144 / 225
|
39 | அரசு[d] 2010-2015 |
எதிரணி 2015[5] | |||||
2015 | 4,732,664 | 42.38% | 95 / 225
|
▼ 49 | அரசு/எதிரணி [e] 2015-2018 |
எதிரணி 2018-[6] |
அரசுத்தலைவர் தேர்தல்கள்
தொகுதேர்தல் ஆண்டு | வேட்பாளர் | வாக்குகள் | வாக்கு % | முடிவு |
---|---|---|---|---|
1982 | எக்டர் கொப்பேகடுவ | 2,548,438 | 39.07% | தோல்வி |
1988 | சிறிமாவோ பண்டாரநாயக்கா | 2,289,860 | 44.95% | தோல்வி |
1994 | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | 4,709,205 | 62.28% | வெற்றி [f] |
1999 | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | 4,312,157 | 51.12% | வெற்றி [g] |
2005 | மகிந்த ராசபக்ச | 4,887,152 | 50.29% | வெற்றி [h] |
2010 | மகிந்த ராசபக்ச | 6,015,934 | 57.88% | வெற்றி [i] |
2015 | மகிந்த ராசபக்ச | 5,768,090 | 47.58% | தோல்வி [j] [k] |
குறிப்புகள்
தொகு- ↑ மக்கள் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி
- ↑ மக்கள் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி
- ↑ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து ஆட்சி
- ↑ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து ஆட்சி
- ↑ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடனும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இணைப்பாட்சியுடனும்
- ↑ மக்கள் கூட்டணியுடன் இணைந்து
- ↑ மக்கள் கூட்டணியுடன் இணைந்து
- ↑ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து
- ↑ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து
- ↑ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து
- ↑ மகிந்த ராசபக்ச இத்தேர்தலில் தோற்றாலும், இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, சுதந்திரக் கட்சியின் தலைவரானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dayasiri Jayasekara appointed as the SLFP General Secretary - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst. 3 January 2019.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2003-09-21. பார்க்கப்பட்ட நாள் 2020-09-05.
- ↑ "BUSINESS TODAY -I Believe in the SLFP". businesstoday.lk. Archived from the original on 2018-12-28. பார்க்கப்பட்ட நாள் 2020-09-05.
- ↑ Wilson, A. Jeyaratnam (6 January 2016). "Politics in Sri Lanka, the Republic of Ceylon: A Study in the Making of a New Nation". Springer – via Google Books.
- ↑ "Nimal Siripala de Silva appointed as the new Opposition Leader". Sri Lanka News - Newsfirst. 16 January 2015.
- ↑ "UPFA to sit in the Opposition". Sunday Observer. 15 December 2018.