இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு

இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (ஜேம்சு சார்லசு இசுடூவர்ட்டு, James Charles Stuart; சூன் 19, 1566 – மார்ச்சு 27, 1625) இசுக்காட்லாந்தின் ஆறாம் ஜேம்சாகவும் (James VI) சூலை 24, 1567 முதல் முடிசூட்டிக் கொண்டவர். இங்கிலாந்து அரசாட்சியும் அயர்லாந்து மன்னராட்சியும் மார்ச்சு 24, 1603 முதல் இணைந்து முடியாட்சிகளின் ஒன்றியம் (union of the Scottish and English crowns) என அழைக்கப்பட்டது; இந்த ஒன்றியத்தின் முதலாம் மன்னராக தனது இறப்பு வரை (1625) அரசாட்சி புரிந்தார். இசுக்காட்லாந்தும் இங்கிலாந்தும் தனித்தனி இறைமையுள்ள நாடுகளாக இருந்தன; இரண்டும் தங்களுக்கான தனியான நாடாளுமன்றங்கள், நீதிமன்றங்கள், சட்டங்களைக் கொண்டிருந்தன. இவை இரண்டுக்கும் ஜேம்சு மன்னராக இருந்தபோதும் விரும்பிய ஒன்றிணைப்பாக தனித்தன்மையை நிலைநாட்டிக் கொண்டன.

இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு
JamesIEngland.jpg
1605 வாக்கில் ஜான் டி கிரிட்சால் வரையப்பட்டதாக கூறப்படும் ஓவியம்
இங்கிலாந்து அரசரும் அயர்லாந்தின் மன்னரும்
ஆட்சிக்காலம்மார்ச்சு 24, 1603 – மார்ச்சு 27, 1625
முடிசூட்டுதல்சூலை 25, 1603
முன்னையவர்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்
பின்னையவர்சார்லசு I
இசுக்காட்லாந்து மன்னர்
ஆட்சிக்காலம்சூலை 24, 1567 – மார்ச்சு 27, 1625
முடிசூட்டுதல்சூலை 29, 1567
முன்னையவர்மேரி
பின்னையவர்சார்லசு I
அரசர்கள்
 • ஜேம்சு இசுடூவர்ட்டு, மோரே பிரபு
  (1567–1570)
 • மாத்யூ இசுடூவர்ட்டு, லென்னாக்சு பிரபு
  (1570–1571)
 • ஜான் எர்சுகைன், மார் பிரபு
  (1571–1572)
 • ஜேம்சு டக்ளசு, மோர்டன் பிரபு
  (1572–1581)
பிறப்புசூன் 19, 1566
எடின்பர்கு கோட்டை, இசுக்காட்லாந்து
இறப்புமார்ச்சு 27, 1625 (அகவை 58)
(புதிய முறை நாள்காட்டியில்: ஏப்ரல் 6, 1625)
தியோபால்ட்சு குடும்பம், இங்கிலாந்து
புதைத்த இடம்மே 7, 1625
Spouseடென்மார்க்கின் ஆன்
குடும்பம்
Detail
என்றி பிரெடெரிக், வேல்சு இளவரசர்
எலிசபெத் இசுடூவர்ட்டு, பொகிமியா
மார்கெட்
இங்கிலாந்தின் முதலாம் சார்லசு
இராபர்ட்டு
மேரி
சோபியா
மரபுஇசுடூவர்ட்டின் குடும்பம்
தந்தைஎன்றி இசுடூவர்ட்டு, டாம்லி பிரபு
தாய்ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி
கையொப்பம்இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு's signature