இம்ரான் ஹாஷ்மி

இந்திய நடிகர்

சையத் இம்ரான் அன்வர் ஹாஷ்மி (Syed Emraan Anwar Hashmi: பிறப்பு 24 மார்ச் 1979) பாலிவுட்டில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இயக்குநர் மகேசு பட் குடும்பத்தில் பிறந்த இவர், ராஸ் (2002) என்ற திகில் திரைப்பத்தில் உதவி இயக்குனராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] குற்றத் திரைப்படமான புட்பாத் (2003) மூலம் அறிமுகமான இவர், மர்டர் (2004) படத்தில் நடித்ததன் மூலம் தனது திருப்புமுனையை அடைந்தார்.

இம்ரான் ஹாஷ்மி
Emraan Hashmi
2012 இல் இம்ரான் ஹாஸ்மி
பிறப்புசையத் இம்ரான் அன்வர் ஹாஷ்
24 மார்ச்சு 1979 (1979-03-24) (அகவை 45)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பர்வீன் சகானி
(தி. 2006)
பிள்ளைகள்1
உறவினர்கள்பூஜா பட், மகேசு பட்

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை மற்றும் ஷாங்காய் படங்களுக்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டார்.[2][3]

இளமை வாழ்க்கை

தொகு

இம்ரான் ஹாஷ்மி 24 மார்ச் 1979 அன்று மகாராட்டிடிராவின் மும்பையில் பிறந்தார்.[4] இவரது தந்தை சையத் அன்வர் ஹாஷ்மி ஒரு தொழிலதிபர். அவர் மர்மத் திரைப்படமான பஹரோன் கி மஞ்சில் (1968) என்ற இந்தித் படத்தில் நடித்தவர். இவரது தாயார் மகேரா ஹாஷ்மி இல்லத்தரசி ஆவார். இவரது பாட்டி மெர்பானோ முகமது அலி (பூர்ணிமா என்ற தனது திரைப் பெயரால் அறியப்பட்டவர்) ஒரு நடிகையாவார்.[5][6] இவர் மும்பையிலுள்ள மும்பை பல்கலைக்கழகத்தின் சைடென்ஹாம் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்றார். நடிகையாக இருந்து இயக்குநராக மாறிய பூஜா பட், இயக்குநர் மோகித் சூரி மற்றும் நடிகை இசுமைலி சூரி (கல்யூக்) மற்றும் ராம்செக் பாலுக் (நசீம் இசுமாயில்) ஆகியோர் இவரது உறவினர்கள். இயக்குநரும், எழுத்தாளரும், தயாரிப்பாளருமான மகேசு பட் மற்றும் தயாரிப்பாளர் முகேஷ் பட் ஆகியோர் இவரது மாமன்கள் ஆவர்.

சொந்த வாழ்க்கை

தொகு
 
2013 இல் தனது மனைவி பர்வீன் சகானியுடன் ஹாஷ்மி

2006 டிசம்பரில் இசுலாமிய திருமண முறைப்படி பர்வீன் ஷாஹனியை இம்ரான் ஹாஷ்மி மணந்தார். இந்த தம்பதியினருக்கு 2010 பிப்ரவரி 3 அன்று பிறந்த அயான் ஹாஷ்மி என்ற மகன் உள்ளார்.[7][8][9]

திரைப்படத் தொழில் வாழ்க்கை

தொகு

இம்ரான் ஹாஷ்மி தனது அறிமுகத்தை புட்பாத் திரைப்படத்தில் தொடங்கினார். அத்திரைப்படம் விமர்சன ரீதியாக மற்றும் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. ஆனால் அதன் இசை பாராட்டப்பட்டது. 2004 இல் இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. முதல் படமான மர்டர், இவரை நடிகராக நிலைநாட்டியது, மற்றொன்றான துஸ்மா நஹின் தேக்ஹா தோல்வியடைந்தது. 2006 இல் கங்கனா ரனாத்துடன் நடித்த கேங்க்ஸ்டர் தவிர பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் அது ஒரு ஏமாற்றமான ஆண்டானது.

இம்ரானின் 2007 ஆம் ஆண்டின் முதல் வெளியீடான குட் பாய் பேட் பாய் தோல்வியடைந்தது, அதே போன்று [த ட்ரெயின்: சம் லைன்ஸ் சுட் நெவர் பி கிராஸ்டு திரைப்படமும் தோல்வியடைந்தது. 2008 இல் வெளியான ஜான்னத் விமர்சன மற்றும் வணிக ரீதியில் வெற்றிபெற்றது. மேலும் 2009 இல் கங்கனா ரனவத் உடன் நடித்து வெளியான ராஸ் - த மிஸ்டரி கன்டினியூஸ் மிகப்பெரிய வெற்றித் திரைப்படம் ஆகும். டம் மைல், ரஃப்தார் 24x7 மற்றும் ஒன்ஸ் அப்ஆன் எ டைம் இன் மும்பை ஆகியவை 2009 இல் வெளிவந்தத் திரைப்படங்கள் ஆகும்.

சர்ச்சைகள்

தொகு

2009 ஜூலை மாதத்தில், ஹாஷ்மி மும்பையிலுள்ள பாலி ஹில் என்ற இடத்திலுள்ள வசதியானவர்கள் உள்ள வீட்டுவசதி சங்கம் தான் ஒரு முஸ்லிம் என்பதால் வீடு வாங்க அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறினார். வீட்டுவசதி சங்கமானமீது புகாரளித்தது.[10] ஹாஷ்மியின் மீதான குற்றச்சாட்டுகளை மற்ற இந்திய முஸ்லிம் நடிகர்கள், குறிப்பாக சல்மான் கான் மற்றும் ஷாருக் கான்[11] ஆகியோர் கண்டித்தனர். அவ்வேளையில் இந்திய இசுலாமிய கலாச்சார மையம் ஹாஷ்மி இந்தியாவில் சமூக உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டியது.[12]

ஆகஸ்ட் 10, 2009 இல் ஹாஷ்மி, தனது குற்றச்சாட்டிலிருந்து பின்வாங்கினார். மேலும் அந்த வீட்டுவசதி சங்கமானது தன்னிடம் பாரபட்சமாக நடக்கவில்லை என்றும் இந்த நிகழ்வுக்குக் காரணம் "தவறான தகவல்தொடர்பு" தான் என்றும் கூறினார்.[13]

மேற்கோள்கள்

தொகு
  1. "Emraan Hashmi's 'Raaz' connection revealed". Tellychakkar.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.
  2. "Raaz 3 - Movie - Box Office India". boxofficeindia.com. Archived from the original on 6 April 2018. பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
  3. "Emraan Hashmi's star rises in Bollywood". ராய்ட்டர்ஸ். சிஎன்என்-ஐபிஎன். 11 June 2012. Archived from the original on 4 November 2012. பார்க்கப்பட்ட நாள் 3 February 2013.
  4. "Emraan Hashmi". Hindustan Times. 23 July 2012. Archived from the original on 24 April 2013. பார்க்கப்பட்ட நாள் 3 February 2013.
  5. "Blogger". imprintsonindianfilmscreen.blogspot.in. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 June 2014.
  6. Gupta, Priya. "My wife and my audience, both took time to understand me: Emraan Hashmi – Times of India" இம் மூலத்தில் இருந்து 16 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140816131529/http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news-interviews/My-wife-and-my-audience-both-took-time-to-understand-me-Emraan-Hashmi/articleshow/20603710.cms. 
  7. "Stars, and their lesser known loves — Rediff.com Movies". Movies.rediff.com. 4 May 2009. Archived from the original on 23 October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 October 2013.
  8. "Emraan Hashmi with wife Udita Goswami Mohit Suri at Parveen Shahani's Wedding Ceremony". Koimoi.com. 30 January 2013. Archived from the original on 25 October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 October 2013.
  9. "Spotted! Celebs and their children". India Today இம் மூலத்தில் இருந்து 3 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103161951/http://indiatoday.intoday.in/gallery/celebrities-kids-children/30/5241.html#photo30. 
  10. "Muslims unwelcome? Yes, says Emraan Hashmi". IBN Live. 
  11. "Salman and Shahrukh slam Emraan Hashmi". 
  12. "Leading Muslims annoyed with Emraan Hashmi". 
  13. "Emraan Hashmi backtracks, blames 'miscommunication'". 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்ரான்_ஹாஷ்மி&oldid=4112743" இலிருந்து மீள்விக்கப்பட்டது