பிலிப்பீன்சு பொதுநலவாயம்

பிலிப்பீன்சுப் பொதுநலவாயம் (Commonwealth of the Philippines)[1] என்பது 1935 முதல் 1946 வரை பிலிப்பீன்சு நாட்டை ஆட்சி செய்த ஒரு அரசு ஆகும். 1942 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியரின் ஆதிக்கத்தில் இவ்வரசு நாடு-கடந்த நிலையில் இயங்கியது. ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிக்குட்பட்ட அரசுக்குப் பதிலாக பொதுநலவாயம் உருவாக்கப்பட்டது. பிலிப்பீன்சு முழுமையான விடுதலையை அடைவதற்குத் தயாராகும் பொருட்டு பொதுநலவாயம் வடிவமைக்கப்பட்டது.[9]

பிலிப்பீன்சு பொதுநலவாயம்
Commonwealth of the Philippines
Komonwelt ng Pilipinas (பிலிப்பீனோ)[1]
1935–1946
கொடி of பிலிப்பீன்சு பொதுநலவாயத்தின்
கொடி
சின்னம் of பிலிப்பீன்சு பொதுநலவாயத்தின்
சின்னம்
நாட்டுப்பண்: லூப்பாங் இனிராங்
(நாட்டுப்பண், 1938 செப்டம்பர் 5 முதல்)
தென்கிழக்காசியாவில் பிலிப்பீன்சு
நிலைஐக்கிய அமெரிக்காவின் காப்பரசு
தலைநகரம்மணிலாa
பேசப்படும் மொழிகள்
அரசாங்கம்பல-கட்சிக் குடியரசு
அரசுத்தலைவர் 
• 1935–44
மனுவேல் எல். குவிசோன்
• 1944–46
சேர்ஜியோ ஒசுமேனா
• 1946
மனுவேல் ஏ. ரொக்சாசு
பிரதித் தலைவர் 
• 1935–44
சேர்ஜியோ ஒசுமேனா
• 1946
எல்பீடியோ கிரீனோ
சட்டமன்றம்
 • தேசியப் பேரவை (1935–41)
 • காங்கிரசு (1945–46)
வரலாற்று சகாப்தம்உள்போர், இரண்டாம் உலகப் போர்
• டைடிங்சு-மெக்டஃபி சட்டம்
15 நவம்பர்[5][6][7][8] 1935
• விடுதலை
4 சூலை 1946
• மணிலா ஒப்பந்தம்
22 அக்டோபர் 1946
பரப்பு
1939300,000 km2 (120,000 sq mi)
மக்கள் தொகை
• 1939
16000303
நாணயம்பெசோ
முந்தையது
பின்னையது
தனியரசு
இரண்டாம் பிலிப்பீனியக் குடியரசு
இரண்டாம் பிலிப்பீனியக் குடியரசு
பிலிப்பீன்சு வரலாறு (1946–1965)
தற்போதைய பகுதிகள் பிலிப்பீன்சு
 1. தலைநகர் மணிலா 1941 டிசம்பர் 24 முதல் 1945 பெப்ரவரி 27 வரை எதிரிப் படைகளின் வசம் இருந்தது. தற்காலிக தலைநகர்கள்:
  • கொரெஜிடோர் தீவு 24 டிசம்பர் 1941 முதல்;
  • இலோய்லோ நகர் 22 பெப்ரவரி 1942 முதல்;
  • பாக்கலோட் 26 பெப்ரவரி முதல்;
  • புவனெசு ஐரசு 27 பெப்ரவரி முதல்;
  • ஒரொக்கீட்டா 19 மார்ச் முதல்;
  • புக்கிட்னொன் 23 மார்ச் முதல்;
  • ஆத்திரேலியா, மெல்பேர்ண், ஏப்ரலில் நாடு-கடந்த நிலையில்;
  • வாசிங்டன், டி. சி., மே 1942 முதல் அக்டோபர் 1944 வரை நாடு-கடந்த நிலையில்;
  • டாக்லோபான் 20 அக்டோபர் 1944 முதல்.
  • சப்பானிய ஆக்கிரமிப்பின் போது பொதுநலவாய அரசு ஐக்கிய அமெரிக்காவில் நாடு-கடந்த நிலையில் இயங்கியது, பின்னர் இரண்டாம் குடியரசாக. உண்மையில், அங்கு இரண்டு பிலிப்பீனிய அரசுகள் இயங்கின.

பொதுநலவாய அரசு ஒரு வலிமை வாய்ந்த செயலகத்தையும், ஒரு உச்சநீதிமன்றத்தையும் கொண்டு 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டது. தேசியவாதக் கட்சியை முக்கிய கட்சியாகக் கொண்டு இதன் அரசியலமைப்பு ஆரம்பத்தில் ஓரவையாகவும், பின்னர் ஈரவை ஆகவும் செயல்பட்டது. 1937 இல், அரசு தகலாகு மொழியை மணிலாவிலும், அதன் சுற்றுவட்டத்திலும் தேசிய மொழியாக அறிவித்தது, ஆனாலும், இம்மொழி பல ஆண்டுகளுக்குப் பின்னரேயே பொதுப் பயன்பாட்டுக்கு வந்தது. பெண்கள் வாக்குரிமை சட்டபூர்வமாக்கப்பட்டது. 1942 இல் சப்பான் கைப்பற்றுவதற்கு முன்னரேயே இதன் பொருளாதாரம் பெரும் பொருளியல் வீழ்ச்சிக்கு முன்னரான கட்டத்தை எட்டியிருந்தது.

1942 முதல் 1945 வரை பொதுநலவாய அரசு நாடு-கடந்த நிலையில் இயங்கியது. 1946 இல், பொதுநலவாயம் முடிவுக்கு வந்து, பிலிப்பீன்சு முழுமையான விடுதலை அடைந்தது.[10]

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 "Constitutional Law". Philconsa Yearbook (Philippine Constitution Association). 1965. http://books.google.com/books?id=QfaNAAAAMAAJ&q=%22Komonwelt+ng+Pilipinas%22. பார்த்த நாள்: 26 September 2014. 
  "Balangkas at Layunin ng Pamahalaang Komonwelt". Bureau of Elementry Education. Department of Education. 2010. Archived from the original on 16 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 2. 2.0 2.1 Mair, Christian (2003). The politics of English as a world language: new horizons in postcolonial cultural studies. NL: Rodopi. பக். 479–82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-420-0876-2. http://books.google.com/books?id=xyYkxBmiA7AC&lpg=PA480&dq=%22official%20language%22%20philippine%20commonwealth%20english. பார்த்த நாள்: 17 February 2011.  497 pp.
 3. Rappa, Antonio L; Wee, Lionel (2006). Language policy and modernity in Southeast Asia: Malaysia, the Philippines, Singapore, and Thailand. SG: Springer. பக். 64–68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-4510-3. http://books.google.com/books?id=KXQTIl2eox4C&pg=PA65&lpg=PA65&dq=%22official+language%22+philippine+commonwealth. பார்த்த நாள்: 17 February 2011.  159 pp.
 4. Morton, Louis (1953). The Fall of the Philippines. Washington, DC: ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை. பக். 6 இம் மூலத்தில் இருந்து 9 ஆகஸ்ட் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200809150311/https://history.army.mil/books/wwii/5-2/5-2_1.htm. பார்த்த நாள்: 17 February 2011. 
 5. Timeline 1930–1939, PH: St. Scholastica's College, archived from the original on 2009-04-05, பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
 6. Gin Ooi 2004, ப. 387.
 7. Zaide 1994, ப. 319.
 8. Roosevelt, Franklin D (November 14, 1935), "Proclamation 2148 on the Establishment of the Commonwealth of the Philippines", The American Presidency Project, Santa Barbara: University of California, This Proclamation shall be effective upon its promulgation at Manila, Philippine Islands, on November 15, 1935, by the Secretary of War of the United States of America, who is hereby designated as my representative for that purpose.
 9. Castro, Christi-Anne, Associate Professor University of Michigan (7 April 2011). Musical Renderings of the Philippine Nation. US: Oxford University Press. பக். 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-974640-8. http://books.google.com/books?id=uaZnkbiJbbYC&pg=PA204. பார்த்த நாள்: 3 July 2013. 
 10. "1935 Constitution of the Republic of the Philippines". Chan Robles Law Library. May 14, 1935. பார்க்கப்பட்ட நாள் 10 February 2007.

வெளி இணைப்புகள் தொகு