மேரி அன்னிங்
மேரி அன்னிங் (Mary Anning) (1799 மே 21 - 1847 மார்ச்சு 21) என்பவர் பிரித்தானிய ஆய்வாளரும் தொல்பொருள் ஆய்வாளரும் ஆவார். இவர் பல புதைபடிவங்களைச் சேகரித்துள்ளார். புவியின் வரலாற்றைப் பற்றியும், முற்கால வரலாறு பற்றியும் நிறைய தெரிவித்துள்ளார்.
மேரி அன்னிங் | |
---|---|
சுட்டி கவிகை மூடி, பெருங்கல் சுத்தியல், நீண்ட ஆடை, மற்றும் தங்க பாகையுடன் மேரி அன்னிங்கின் தூரிகைப் படிமம். | |
பிறப்பு | லைம் ரெஜிஸ், டோர்செட், இங்கிலாந்து | 21 மே 1799
இறப்பு | 9 மார்ச்சு 1847 லைம் ரெஜிஸ் | (அகவை 47)
இறப்பிற்கான காரணம் | மார்பக புற்றுநோய் |
கல்லறை | St. Michael's Church, Lyme Regis 50°43′32″N 2°55′54″W / 50.725471°N 2.931701°W |
பணி | தொல்லுயிர் எச்சம்சேகரிப்பவர் |
சமயம் | தேவாலயம்; ஆங்கிலிகானிசம் மாற்றப்பட்டவர் |
பெற்றோர் | ரிச்சர்ட் அன்னிங் (c. 1766–1810) மேரி மூர் (c. 1764–1842) [1] |
உறவினர்கள் | ஜோசப் அன்னிங் (சகோதரர்; 1796–1849) [1] |
இவர் பெண்ணாக இருந்தமையினாலும், வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலும், இவரால் ஆய்வுகளில் வெகுவாகப் பங்கேற்க முடியவில்லை. பின்னர், இவரது ஆய்வுகளின் மூலம், பிரித்தானியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஆய்வாளர்கள் புதைபடிவங்க்ள் பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்தனர். இவரது இறப்பிற்கு 163 ஆண்டுகளுக்குப் பின்னர், பிரித்தானியாவில் அறிவியல் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பத்து பெண்களின் பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sharpe & McCartney 1998, ப. 150