காமினி பொன்சேகா
காமினி பொன்சேகா (Don Shelton Gamini Fonseka, மார்ச் 21, 1936 - செப்டம்பர் 30, 2004) சிங்களத் திரைப்பட நடிகர். இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக, இயக்குனராக, பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் மொழியிலும் பேசி நடித்துள்ளார்.[1] பின்னாட்களில் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். வட-கிழக்கு மாகாண ஆளுநராகப் பணியாற்றினார்.
காமினி பொன்சேகா | |
---|---|
பிறப்பு | 1936, மார்ச் 21 தெகிவளை, இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 30, 2004 | (அகவை 68)
பணி | நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகு1936 ம் ஆண்டு மார்ச் 21ம் திகதி இலங்கையில் கொழும்பு மாவட்டம், தெகிவளையில் வில்லியம்- டோலி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தெகிவளை பிரெஸ்பிட்டேரியன் மகளிர் வித்தியாலயத்தில் கல்வியை ஆரம்பித்த காமினி, பின்பு கல்கிசை புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார்.[1]
சினிமா வாழ்க்கை
தொகு1950களின் பிற்பகுதியில் சினிமாத்துறையினில் நுழைந்தார். திரைப்படத்துறையில் இணையும் வாய்ப்பை பிரேம்நாத் மொராயஸ் என்பவரே பெற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பணிபுரியும் வாய்ப்பே காமினிக்கு கிடைத்தது. அதற்கமைய லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் ‘ரேகாவ’ என்ற திரைப்படத்தின் புகைப்படப்பிடிப்பு பிரிவில் பணியாற்றும் வாய்ப்பை பெற்ற காமினி அதனூடாகவே நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.[1]
சோமசேகரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பிரிமியெக் நிசா’ என்ற திரைப்படமே இவர் முக்கிய பாத்திரமேற்று நடித்த முதல் திரைப்படம். சிறந்த இயக்குனரான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசின் பல திரைபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இந்தியாவிற்கும் 1970 இல் இங்கிலாந்துக்கும் சென்று திரைப்படத்துறை பற்றி கற்றுக் கொண்டார். தனது சிறப்பான நடிப்பாற்றலால் மக்கள் பலரையும் கவர்ந்தார். இறக்கும் வரை 110 படங்களில் நடித்துள்ளார், நங்கூரம், நீலக்கடல் ஓரத்தில் ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். "சருங்கலய" என்ற சிங்களத் திரைப்படத்திலே நடராஜா என்ற பாத்திரத்தில் தமிழராகவே நடித்தார். இந்தப் படத்தில் இவர் சம்பந்தப்பட்ட பல முக்கியமான காட்சிகள், வடமாகாணத்தில் கரவெட்டி என்ற கிராமத்தில் படமாக்கப்பட்டது.[1]
நடித்த வேடங்கள்
தொகு- சருங்கலய - யாழ்ப்பாணத் தமிழராக
- நொமியன மினிசும் - இராணுவ அதிகாரி
இயக்கிய திரைப்படம்
தொகு- "பரசதுமல்" (பாரிஜாத மலர் என்று பொருள்படும்) - இவரது இயக்கத்தில், இவர் பிரதான பாத்திரத்திலும், மற்றும் ரொனி றணசிங்க, புண்யா ஹீந்தெனிய, அனுலா கருணாதிலக போன்றோர் நடித்தது.
அரசியல் வாழ்க்கை
தொகு1985 இல் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார். துணைசபாநாயகராகவும் பணியாற்றினார். 1995 - 1998 வரையான காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண ஆளுனராகவும் பதவி வகித்தார். 1998 அக்டோபர் 20 இல் இவர் தனது ஆளுநர் பதவியைத் துறந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புக்கள்
தொகு- Gamini Fonseka பரணிடப்பட்டது 2006-06-28 at the வந்தவழி இயந்திரம்
- gamini The Emperor of the Silver Screen as exemplary politician- daily news பரணிடப்பட்டது 2005-09-23 at the வந்தவழி இயந்திரம்