1613
1613 (MDCXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1613 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1613 MDCXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1644 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2366 |
அர்மீனிய நாட்காட்டி | 1062 ԹՎ ՌԿԲ |
சீன நாட்காட்டி | 4309-4310 |
எபிரேய நாட்காட்டி | 5372-5373 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1668-1669 1535-1536 4714-4715 |
இரானிய நாட்காட்டி | 991-992 |
இசுலாமிய நாட்காட்டி | 1021 – 1022 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 18 (慶長18年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1863 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3946 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 11 - பிரான்சின் டோஃபினே என்ற இடத்தில் 30-அடி உயர மனித உடலெச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ரோமானிய அரசன் டியூட்டோபோக்கசு என்பவனின் உடல் என நம்பப்படுகிறது.
- பெப்ரவரி 7 - உருசியப் பேரரசு மிக்கைல் ரொமானோவ் என்பவரை உருசியாவின் பேரரசனாகத் தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் அங்கு ரொமானொவ் வம்சம் ஆட்சியைப் பிடித்தது.
- மார்ச் 27 - கனடாவில் முதலாவது ஆங்கிலேயக் குழந்தை பிறந்தது.
- சூன் - ஜேம்சுடவுன்: வர்ஜீனியாவில் விளைந்த முதலாவது தொகுதி மேற்கிந்தியப் புகையிலை இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது.
- சூன் 29 -- இலண்டனில் பிரபலமான குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது.
- குவைத் பிரதேசம் அமைக்கப்பட்டது.
- ஜேம்சுடவுனிற்கு அருகே சர் தோமசு டேல் "பெர்முடா நகரம்" என்ற குடியேற்றப் பகுதியை அமைத்தார்.
- வரகுணப் பாண்டியனின் ஆட்சிக்காலம் ஆரம்பம்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- சூலை 20 - டோனா கத்தரீனா, கண்டி இராச்சியத்தின் அரசி[1]
- செப்டம்பர் 8 - கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1566)
மேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2