1610
1610 (MDCX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1610 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1610 MDCX |
திருவள்ளுவர் ஆண்டு | 1641 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2363 |
அர்மீனிய நாட்காட்டி | 1059 ԹՎ ՌԾԹ |
சீன நாட்காட்டி | 4306-4307 |
எபிரேய நாட்காட்டி | 5369-5370 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1665-1666 1532-1533 4711-4712 |
இரானிய நாட்காட்டி | 988-989 |
இசுலாமிய நாட்காட்டி | 1018 – 1019 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 15 (慶長15年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1860 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3943 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 7 - இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி, வியாழனின் நான்கு இயற்கைச் செய்மதிகளைக் கண்டறிந்தார்.
- மார்ச் 12 – ஜேக்கப் டி லா கார்டி தலைமையில் சுவீடன் படைகள் மாஸ்கோவைக் கைப்பற்றின.
- மே 14 – பிரான்ஸ் மன்னன் நான்காம் ஹென்றி ரவைலாக் என்பவனால் படுகொலை செய்யப்பட்டான்.
- மே 27 - நான்காம் ஹென்றியைக் கொன்ற ரவைலாக் குதிரைகளில் இரு பக்கங்களிலும் கைகள் கட்டி இழுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.
- ஜூலை 5 - ஜோன் கை தலைமையில் 39 பிரித்தானியக் குடியேறிகள் கனடாவின் நியூபவுன்லாந்து செல்ல பிறிஸ்டலில் இருந்து புறப்பட்டனர்.