டை எத்தில் ஈதர்
டைஎத்தில் ஈதர் (Diethyl ether), அல்லது ஈதாக்சிஈத்தேன் (ethoxyethane), எத்தில் ஈதர் (ethyl ether), சல்பூரிக் ஈதர் (sulfuric ether), அல்லது பொதுவாக ஈதர் என்பது மூலக்கூறு வாய்பாடு (C
2H
5)
2O ஐக் கொண்ட ஓர் ஈதர் வகைக் கரிமச் சேர்வை ஆகும். இது நிறமற்றதும் மிகவும் கொந்தளிப்பாக எரியக்கூடிய திரவமுமாகும். பொதுவாக இத்திரவம் கரைப்பானாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது. போதைப் பண்புகள் கொண்டிருக்கும் டைஎத்தில் ஈதர் தற்காலிக மூளைப் பிறழ்வுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. சில நேரங்களில் இந்நோய் ஈதர் நாட்டக் கோளாறு (etheromania) என்றும் குறிப்பிடப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈதாக்சி ஈத்தேன்
| |
வேறு பெயர்கள்
டையெத்தில் ஈதர்; எத்தில் ஈதர்; எத்தில் ஆக்சைடு; 3-ஆக்சாபென்டேன்; ஈதாக்சியீத்தேன்
| |
இனங்காட்டிகள் | |
60-29-7 | |
ATC code | N01AA01 |
ChEBI | CHEBI:35702 |
ChEMBL | ChEMBL16264 |
ChemSpider | 3168 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D01772 |
பப்கெம் | 3283 |
வே.ந.வி.ப எண் | KI5775000 |
| |
UNII | 0F5N573A2Y |
பண்புகள் | |
C4H10O | |
வாய்ப்பாட்டு எடை | 74.12 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 0.7134 கி/செ.மீ3, நீர்மம் |
உருகுநிலை | −116.3 °C, 156.9 K, −177.3 °F |
கொதிநிலை | 34.6 °C, 307.8 K, 94.3 °F |
69 கி/லி (20 °செல்சியசு) | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.353 (20 °C) |
பிசுக்குமை | 0.224 cP (25 °செல்சியசு) |
கட்டமைப்பு | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.15 D (வாயு) |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-271.2 ± 1.9 கிலோயூல்/மோல் |
Std enthalpy of combustion ΔcH |
-2732.1 ± 1.9 கிலோயூல்/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
253.5 யூல்/மோல்·கெல்வின் |
வெப்பக் கொண்மை, C | 172.5 யூல்/மோல்·கெல்வின் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பிடிக்கும், தோலுக்கு தீங்கிழைக்கும் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
R-சொற்றொடர்கள் | R12 R19 R20/22 R66 R67 |
S-சொற்றொடர்கள் | S9 S16 S29 S33 |
தீப்பற்றும் வெப்பநிலை | −45 °C[1] |
வெடிபொருள் வரம்புகள் | 1.9-48.0% [2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஈதர்கள் தொடர்புடையவை |
இருமெத்தில் ஈதர் மெத்தாக்சிபுரோப்பேன் |
தொடர்புடைய சேர்மங்கள் | ஈரெத்தில் சல்பைடு பியூட்டனால்கள் (சமபகுதியம்) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வரலாறு
தொகுஇச்சேர்மம் 8ஆம் நூற்றாண்டில் சபீர் இபின் அய்யான்[3] என்பவராலோ அல்லது 1275 ஆம் ஆண்டில் இரேமுண்டஸ் லுல்லஸ் [3][4] என்பவராலோ உருவாக்கப்பட்டதாக அறியப்பட்டாலும் இதற்கு சமகாலச் சான்றுகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இச்சேர்மம் 1540 ஆம் ஆண்டில் வலேரியஸ் கார்டஸ் என்பவரால் தொகுக்கப்பட்டது. இவர் இதற்கு ” விட்ரியாலின் இனிப்பு எண்ணெய் “ என்று பெயரிட்டு இதனுடைய சில மருத்துவப் பண்புகளையும் [3] கண்டறிந்தார். விட்ரியால் என்று அழைக்கப்பட்ட எத்தனால் மற்றும் கந்தகக் காடி கலந்த கலவையை காய்ச்சி வடித்தல் மூலமாக டை எத்தில் ஈதர் பெறலாம் என்ற உண்மையை இப்பெயர் பிரதிபலிப்பதாக உள்ளது. இதே நேரத்தில் பராசெல்சஸ் என்பவர் ஈதரின் வலி நிவாரணப் பண்புகள் [3] சிலவற்றைக் கண்டறிந்தார். 1729 ஆம் ஆண்டில்தான் ஆகஸ்டு சிக்மண்ட் புரோபினியாஸ் இச்சேர்மத்திற்கு ஈதர் எனப் பெயரிட்டார் [5].
பயன்பாடுகள்
தொகுடை எத்தில் ஈதர் குறிப்பாக செல்லுலோஸ் அசெட்டேட் என்றழைக்கப்படும் செல்லுலோஸ் நெகிழிகள் தயாரிப்பதில் கரைப்பானாக முக்கியத்துவம் வகித்தது[6]
எரிபொருளாக
தொகுடை எத்தில் ஈதர் உயர் எரிதல் தரநிலை சிடேன் எண் மதிப்பு 85-96 கொண்ட ஒரு திரவமாகும். குறைவான தீப்பற்று நிலை மற்றும் அதிக ஆவியாகும் தன்மை கொண்டிருக்கும் இது, பெட்ரோல் மற்றும் டீசல் எந்திரங்களுக்குத் [7] தேவையான பெட்ரோலிய வடிநீர்மங்களுடன் இணைக்கப்பட்டு ஆரம்ப எரியூட்டு திரவமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதே காரணத்திற்காகவே மாதிரி அழுத்த எந்திரங்களுக்கான பற்றவைக்கும் எரி கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆய்வக கரைப்பானாக
தொகுடை எத்தில் ஈதர் பொதுவாக ஆய்வகங்களில்கரைப்பானாகப் பயன்படுகிறது. இது நீரில் 6.05 கிராம்/100 மி.லி [8] அளவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கரைதிறன் கொண்டுள்ளது, மற்றும் 1.5 கிராம் / 100 மி.லி [9] கரைக்கும் திறனும் கொண்டுள்ளது. எனவே இது பொதுவாக திரவ - திரவ வடித்துப் பிரித்தலில் பயனாகிறது. நீர்த்த கரைசல்களுடன் இணைத்து இதனைப் பயன்படுத்தும்போது, தண்ணீரைக் காட்டிலும் குறைவான அடர்த்தியுடன் இருப்பதால் இக்கரிமத் திரவம் மேல் அடுக்காக மிதக்கிறது. மேலும் கிரின்யார் வினைகளில் கரைப்பானாகவும் கூடுதலாக கரிம உலோக வினைகளிலும் டை எத்தில் ஈதர் பயன்படுத்தப்படுகிறது. சில சட்டவிரோத பொருட்களின் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பதால் ஐக்கிய நாடுகள் அவை இதை போதை மருந்துகள், மனோவசியப் பொருட்களின் முன்னோடியாக அட்டவணை 2ல் பட்டியலிட்டுள்ளது [10].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Ethyl Ether MSDS". J.T. Baker. Archived from the original on 2012-03-28. பார்க்கப்பட்ட நாள் 2010-06-24.
- ↑ Carl L. Yaws, Chemical Properties Handbook, McGraw-Hill, New York, 1999, page 567
- ↑ 3.0 3.1 3.2 3.3 Toski, Judith A; Bacon, Douglas R; Calverley, Rod K (2001). The history of Anesthesiology (4 ed.). Lippincott Williams & Wilkins. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7817-2268-1.
{{cite book}}
:|work=
ignored (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Hademenos, George J.; Murphree, Shaun; Zahler, Kathy; Warner, Jennifer M. (2008-11-12). McGraw-Hill's PCAT. McGraw-Hill. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-160045-3. பார்க்கப்பட்ட நாள் 2011-05-25.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Dr. Frobenius (1729) "An account of a spiritus vini æthereus, together with several experiments tried therewith,"[தொடர்பிழந்த இணைப்பு] Philosophical Transactions of the Royal Society (London), 36 : 283-289.
- ↑ "Ethers, by Lawrence Karas and W. J. Piel". Kirk‑Othmer Encyclopedia of Chemical Technology. (2004). John Wiley & Sons, Inc.
- ↑ "Extra Strength Starting Fluid: How it Works". Valvovine. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-09-05.
- ↑ The Merck Index, 10th Edition, Martha Windholz, editor, Merck & Co., Inc, Rahway, NJ, 1983, page 551
- ↑ H. H. Rowley, Wm. R. Reed (1951). "Solubility of Water in Diethyl Ether at 25 °". J. Am. Chem. Soc. 73 (6): 2960–2960. doi:10.1021/ja01150a531. http://pubs.acs.org/doi/abs/10.1021/ja01150a531.
- ↑ "Microsoft Word - RedListE2007.doc" (PDF). Archived from the original (PDF) on 2008-02-27. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.