பப்கெம் (Pubchem) என்பது வேதியியல் பொருட்களுக்கான ஒரு தரவுக்களம். இத்தரவுக் களத்தையும் முறைகளையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நாடளாவிய உயிரியதொழில்நுட்பத் தகவல்கள் மையம் (National Center for Biotechnology Information, (NCBI) என்னும் நிறுவனம் பராமரிக்கின்றது[1]. இந்நிறுவனம் தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா நிறுவனத்தின் (National Institutes of Health) கீழ் இயங்கும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் என்னும் நிறுவத்தின் ஓர் உறுப்பாகும். பப்கெம் தரவுக்களத்தில் இருந்து மில்லியன் கணக்கான வேதியியல் பொருள்களைப் பற்றியத் தரவுகளை இலவசமாக இணையவழி பெற இயலும். பப்கெம் (PubChem) தரவுத்தளத்தில் 1000 அணுக்களுக்கு குறைவாக உள்ள மூலக்கூறுகளும், 1000 வேதியியல் பிணைப்புகளுக்கும் குறைவாக உள்ள வேதியியல் பொருள்களைப் பற்றிய உள்ளன. தற்பொழுது 80 வேதியியல் நிறுவனங்கள் பப்கெம்முக்குத் தரவுகளை நல்குகின்றது. 15.7 மில்லியன் வேதியியல் சேர்மங்களைப் பற்றிய செய்துகள் தற்பொழுது உள்ளன. துல்லியமான எண்னை இணைய வழி [1] பார்க்கலாம்]. பலவகையான முறைகளில் தேவையான வேதியியல் பொருளைத் தேடும் வசதியும் உள்ளது[2].

PubChem logo

மேற்கோள்கள்

தொகு
  1. "Chemicals & Bioassays". National Center for Biotechnology Information, U.S. National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "PubChem Open Chemistry Database". National Center for Biotechnology Information, U.S. National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்கெம்&oldid=2985895" இலிருந்து மீள்விக்கப்பட்டது