அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்

அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் (United States National Library of Medicine) அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற ஒரு நூலகமாகும். . இந்நூலகம், உலகத்தில் உள்ள மருத்துவ நூலகங்களிலேயே மிகவும் பெரியதாகும்[1]. மேரிலாந்தின் பெதசுதாவில் அமைந்துள்ள தேசிய மருத்துவ நூலகம் என்பது தேசிய சுகாதார நிறுவனத்திற்குள் இருக்கும் ஒரு நிறுவனமாகும். நூலகத்திலுள்ள தொகுப்புகளில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள், பத்திரிகைகள், தொழில்நுட்ப அறிக்கைகள், கையெழுத்துப் பிரதிகள், நுண்படச்சுருள்கள், புகைப்படங்கள் மற்றும் மருத்துவம் மற்றும் தொடர்புடைய அறிவியல் பற்றிய படங்கள், உலகின் பழமையான மற்றும் அரிதான படைப்புகள் போன்றவைகள் அடங்கும்.

நூலக நுழைவாயில்
முக்கிய படிக்கும் அறை
இலச்சினை
அலுவலக முத்திரை

1984 - ஆம் ஆண்டிலிருந்து தற்சமயம்வரை இந்நூலகத்தின் நிருவாகியாக இருப்பவர் பேட்ரீசியா பிளாட்லெ பிரென்னான் என்பவராவார்[2].

வெளியீடுகள் மற்றும் தகவல் வளங்கள்

தொகு

1879 ஆம் ஆண்டு முதல், தேசிய மருத்துவ நூலகம் னாதந்தோறும் மருத்துவ அட்டவனையை வெளியிட்டு வருகிறது. இது கட்டுரைகளுக்கான ஒரு மாதாந்திர வழிகாட்டியாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாயிரம் பத்திரிகைகளில், வெளிவந்த கட்டுரைகளுக்கான அட்டவணையாக அது இருந்தது. மருத்துவ அட்டவனையின் கடைசி வெளியீடு 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அச்சிடப்பட்டது, ஆனால் இந்த தகவல்கள் இலவசமாக அணுகக்கூடிய பப்மெட் என்ற தேடுபொறியில் வழங்கப்படுகின்றன, பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான மெட்லைன் பத்திரிகை கட்டுரை குறிப்புகள் மற்றும் சுருக்கங்கள் 1960 ஆம் ஆண்டிலிருந்தும் 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து 1.5 மில்லியன் குறிப்புகள் இவற்றில் அடங்கும் [3]. தேசிய மருத்துவ நூலகம் உயிரிநுட்பத் தகவலுக்கான தேசிய மையத்தை நடத்துகிறது, இதில் உயிரியல் தரவுத்தளங்கள் (இவற்றில் பப்மெட்டும் அடங்கும்) உள்ளன. அவை என்ட்ரெசு தேடுபொறி [4] மற்றும் உயிரி மருத்துவ தகவல் தொடர்புக்கான லிசுட்டர் இல் தேசிய மையம் [5] ஆகியனவற்றின் மூலம் இணையத்தில் இலவசமாக அணுகி அறிந்து கொள்ளலாம். அமெரிக்க ஐக்கிய நாடுகள் தேசிய வெளியீட்டு மையம் மருத்துவக் கலைச் சொற்களுக்கான குறியீடுகளையும் தரவுகளையும் உள்ளடக்கிய கலைகளஞ்சியத்தை அமெரிக்க தேசிய வெளியீட்டு அமைப்பு வெளியிடுகிறது. மனித தலையீடு மற்றும் அவதானிப்பு ஆய்வுகளுக்காக தேசிய மருத்துவ நூலகம் மருத்துவ சோதனைகளை நிர்வகிக்கும் ஒரு பதிவேட்டை பராமரிக்கிறது.

நச்சு மற்றும் சுற்றுச்சுழல்

தொகு

நச்சுயியல் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார திட்டம் 1967 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ நூலகத்தில் நிறுவப்பட்டது, மேலும் மருத்துவ இலக்கியங்களிலிருந்தும், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கோப்புகளிலிருந்தும் [6] தொகுக்கப்பட்ட கணினி தரவுத்தளங்களை இத்திட்டம் உருவாக்கியுள்ளது. நச்சுயியல் தரவு வலைதளம் , புவியியல் தகவல் திட்டம், அவசரகால பதிலளிப்பாளர்களுக்கான கம்பியிலா தகவல் தொடர்பு அமைப்பு, நச்சு இரகசியங்கள் மற்றும் வீட்டு தயாரிப்புகள் தரவுத்தளம் போன்ற இரசாயன அவசரகால பதில் மற்றும் பொதுக் கல்விக்கான பல தகவல் அமைப்புகளை இந்த திட்டம் செயல்படுத்தியுள்ளது. இந்த ஆதாரங்களை இணையத்தில் கட்டணம் இல்லாமல் அணுகலாம்.

கதிர்வீச்சு வெளிப்பாடு

தொகு

கதிர்வீச்சு அவசரநிலை மேலாண்மை அமைப்பையும் [7] அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் வழங்குகிறது:

கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசர காலங்களில் மருத்துவ நோயறிதல் மற்றும் கதிர்வீச்சு காயங்களுக்கு சிகிச்சை மற்றும் முதன்மையாக மருத்துவர்கள் வழிகாட்டுதல்,

முறையான கதிர்வீச்சு மருந்து தொடர்பான நிபுணத்துவம் இல்லாதவர்களுக்கு சிக்கல்களைப் புரிந்துகொள்ளப் போதுமான பின்னணி மற்றும் சூழலுடன் கூடிய சரியான நேரத்தில் உரிய ஆதாரங்களையும் அதை அடிப்படையாகக் கொண்ட பயன்படுத்தக்கூடிய பயனுள்ள தகவல்களை கொடுத்தல்,

இணையத்தை அணுக முடியாத அவசரகாலத்திலும் கிடைக்கும் வகையில் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்யக்கூடிய வலை அடிப்படையிலான தகவல்கள் வழங்கல் போன்றவை இத்திட்டத்தின் சிறப்புகளாகும்.

அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் அமைப்பு, தயார்நிலை மற்றும் செயலாற்றும் அலுவலகம், திட்டமிடல் மற்றும் அவசர நடவடிக்கைகளின் அலுவலகம், தேசிய மருத்துவ நூலகத்தின் ஒத்துழைப்புடன், சிறப்பு தகவல் சேவைகளின் பிரிவு, தேசிய புற்றுநோய் நிறுவனம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் பல அமெரிக்க மற்றும் சர்வதேச ஆலோசகர்களின் பொருள் வல்லுநர்கள் இணைந்து கதிர்வீச்சு அவசரநிலை மேலாண்மை அமைப்பை தயாரித்து அளிக்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. DeBakey ME (1991). "The National Library of Medicine. Evolution of a premier information center". JAMA 266 (9): 1252–8. doi:10.1001/jama.266.9.1252. பப்மெட்:1870251. 
  2. "National Library of Medicine Welcomes New Director Dr. Patricia Flatley Brennan".National Library of Medicine. August 15, 2016.
  3. "PubMed". United States National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் May 28, 2013.
  4. "NCBI Educational Resources". United States National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் May 28, 2013.
  5. "LHNCBC". பார்க்கப்பட்ட நாள் 1 August 2018.
  6. "Toxicology and Environmental Health Program". National Library of Medicine. Retrieved July 11, 2007.
  7. "Radiation Emergency Management System பரணிடப்பட்டது 2019-12-14 at the வந்தவழி இயந்திரம்". National Library of Medicine.

புற இணைப்புகள்

தொகு