ஈரெத்தில் சல்பைடு
ஈரெத்தில் சல்பைடு (Diethyl sulphide) என்பது C4H10S என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எளிதில் தீப்பற்றக்கூடிய இச்சேர்மம் வெள்ளைப் பூண்டின் காரநெடியுடன் காணப்படுகிறது. ஐயுபிஏசி முறையில் ஈரெத்தில் சல்பைடு, 1,1, தயோபிசுயீத்தேன் என்று அழைக்கப்படுகிறது. C4H10S என்ற இதனுடைய வேதிவாய்ப்பாட்டை எளிமையாக (C2H5)2S அல்லது Et2S என்று எழுதுவதன் மூலம் ஈரெத்தில் சல்பைடின் கட்டமைப்பு தெளிவாகிறது. எத்தனாலுடன் அடர் கந்தக அமிலம் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் ஈரெத்தில் சல்பைடு தயாரிக்கப்படுகிறது. மேற்கண்ட வினையில் உருவாகும் புதிய கரைசல் முதலில் சோடியம் கார்பனேட்டுடன் சேர்க்கப்பட்டு நடுநிலையாக்கப்படுகிறது. இதனால் உருவாகும் சோடியம் எத்தில் சல்பேட்டு பொட்டாசியம் சல்பைடுடன் சேர்க்கப்பட்டு காய்ச்சி வடிக்கப்படுகிறது[1] .
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,1-தயோபிசுயீத்தேன்
| |
வேறு பெயர்கள்
டையெத்தில் தயோயீத்தர், எத்தில் சல்பைடு, தயோ எத்தில் ஈதர்
| |
இனங்காட்டிகள் | |
352-93-2 | |
ChEBI | CHEBI:27710 |
ChEMBL | ChEMBL117181 |
ChemSpider | 9233 |
EC number | 206-526-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14706 |
பப்கெம் | 6163 |
வே.ந.வி.ப எண் | LC7200000 |
| |
பண்புகள் | |
C4H10S | |
வாய்ப்பாட்டு எடை | 90.19 |
தோற்றம் | தெளிவான நீர்மம் |
அடர்த்தி | 0.837 கி/செ.மீ3 |
உருகுநிலை | −103.8 °C (−154.8 °F; 169.3 K) |
கொதிநிலை | 92 °C (198 °F; 365 K) |
கரையாது | |
எத்தனால்-இல் கரைதிறன் | முழுமையாக கலக்கும் |
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | முழுமையாக கலக்கும் |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.44233 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தோல் மற்றும் கண்களில் எரிச்சல். திரவமும் ஆவியும் எளிதில் தீப்பிடிக்கும் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
R-சொற்றொடர்கள் | R11 R65 |
S-சொற்றொடர்கள் | (S2) S9 S16 S51 S62 |
தீப்பற்றும் வெப்பநிலை | −10 °C (14 °F; 263 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினா அடிப்படையிலான ஒரு வினையூக்கி முன்னிலையில் எத்திலீனுடன் ஐதரசன் சல்பைடு சேர்த்து ஈத்தேன்தயால் தயாரிக்கும்போது உடன்விளை பொருளாகவும் ஈரெத்தில் சல்பைடு உருவாகிறது. இவ்வினையே வணிகமுறையில் ஈத்தேன்யால் தயாரிக்கும் முறையாகும். வினைபடு பொருள்களான ஐதரசன் சல்பைடு மற்றும் எத்திலீன் ஆகியவற்றின் விகிதங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் ஈரெத்தில் சல்பைடின் உற்பத்தியை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்.
தோற்றம்
தொகுமுள்நாறி பழங்களின் நெடியில் ஒரு பகுதிப் பொருளாகவும் [2], உருளைக் கிழங்கில் இருந்து கிடைக்கும் எளிதில் ஆவியாகிற திரவங்களின் ஒரு பகுதிப்பொருளாகவும் இது இயற்கையில் காணப்படுகிறது [3].
பயன்கள்
தொகுநீரற்ற கனிமங்களைக் கரைக்க உதவும் ஒரு கரைப்பானாகவும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியனவற்றின் மின்முலாம் பூச்சுக்கும் ஈரெத்தில் சல்பைடு பயன்படுகிறது [1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Merck index of Chemicals and Drugs, 9th ed., monograph 3801
- ↑ Baldry, Jane; J. Dougan; G. E. Howard (1972). "Volatile Flavouring Constituents of Durian". Phytochemistry 11: 2081–2084. doi:10.1016/s0031-9422(00)90176-6. https://archive.org/details/sim_phytochemistry_1972_11/page/2081.
- ↑ Gumbmann, M. R.; H. K. Burr (1964). "Volatile Sulfur Compounds in Potatoes". Journal of Food and Agricultural Chemistry 12: 404–408. doi:10.1021/jf60135a004.