கரைசல்
வேதியியலில், கரைசல் (ஒலிப்பு (உதவி·தகவல்)) (solution) என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்த ஒரு படித்தான கலவை ஆகும். ஒரு கரைசல் என்பது கரைபொருள் மற்றும் கரைப்பான் எனப்படும் பதார்த்தத்தால் ஆன ஒருபடித்தான கலவையாகும்.

கரைசல்களை வகைப்படுத்துதல் தொகு
துகள்களின் அளவைப் பொருத்து தொகு
பொருள்களில் உள்ள துகள்களின் அளவைப் பொறுத்து, கரைசல்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை
உண்மைக் கரைசல் தொகு
இது ஒரு ஒருபடித்தான கலவை ஆகும். இதில் கரைபொருளின் துகள்கள் கரைப்பானில் நன்கு கரைந்திருக்கும். (எ.கா) சர்கரை கரைசல்.
கூழ்மக் கரைசல் தொகு
இது பிரிகை நிலைமை மற்றும் பிரிகை ஊடகம் என்ற இரண்டு பகுதிகளாலான ஒரு வித கலவையாகும்.
தொங்கல் கரைசல் தொகு
கரைப்பானில் கரையாமல் இருக்கும் சிறு துகள்களின் பலபடித்தான கலவையே தொங்கல்கள் அல்லது தொங்கல் கரைசல் எனப்படும். (எ.கா) சுண்ணாம்பு நீரின் கலவை.
கரைப்பானின் இயல்பைப் பொறுத்து தொகு
- நீர்ம நீர்மக் கரைசல்
எ.கா: மதுசாரக் கரைசல்
- நீர்ம வளிக் கரைசல்
எ.கா: சோடாநீர்
- திண்ம திண்மக் கரைசல்
எ.கா:உருக்கு (எஃகு)
- திண்ம நீர்மக் கரைசல்
எ.கா: சீனிக்கரைசல்
- வளி வளிக் கரைசல்
எ.கா: வளிமண்டல வளி