கலவை (வேதியியல்)
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பதார்த்தங்கள் ஒன்றோடொன்று பௌதீக ரீதியில் கலந்து காணப்படுதல் கலவை ஆகும். இங்கு பதார்த்தங்கள் இரசாயன தாக்கத்தில் ஈடுபடாது.
கலவைகளை வகைப்படுத்துதல்தொகு
ஏகவினக் கலவைதொகு
கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன ஒத்த தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது ஏகவினக் கலவை அல்லது கரைசல் எனப்படும்.
எ.கா: உப்புக் கரைசல்
- சீனிக்கரைசல்
பல்லினக் கலவைதொகு
கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன பல்லினத் தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது பல்லினக் கலவை எனப்படும்.
எ.கா: அரிசியில் மண் கலந்திருத்தல்.
- சீமெந்துச் சாந்து