கே. எஸ். ஆனந்தன்
ஈழத்து எழுத்தாளர்
கே. எஸ். ஆனந்தன் (கார்த்திகேசு சச்சிதானந்தம், மார்ச் 30, 1940 – நவம்பர் 18, 2021) ஈழத்து எழுத்தாளர். பல சிறுகதைகள், புதினங்களைப் படைத்தவர். நாடகத்துறையிலும் ஈடுபட்டவர்.
கே. எஸ். ஆனந்தன் | |
---|---|
பிறப்பு | கார்த்திகேசு சச்சிதானந்தம் 30 மார்ச்சு 1940 கோண்டாவில், யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | நவம்பர் 18, 2021 இணுவில், யாழ்ப்பாணம் | (அகவை 81)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | இணுவில் சைவ மகாஜனா வித்தியாலயம், நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி |
பணி | விவசாயி, எழுத்தாளர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | கார்த்திகேசு |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுயாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட கே. எஸ். ஆனந்தன் இணுவில் சைவ மகாசனா வித்தியாலயம், நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று, பட்டப்படிப்பை வெளிவாரியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றார்.[1]
இவரது ஆக்கங்கள்
தொகுஇருபத்து நான்கு நாவல்களை எழுதியுள்ளார். ஒன்பது நாடகங்களை மேடையேற்றியுள்ளார். கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம், மற்றும் பல ஈழத்து இதழ்களிலும் பத்திரிகைகளிலும் இவரது சிறுகதைகளும் புதினங்களும் வெளிவந்துள்ளன. இவரின் பத்து புதினங்கள் நூல்களாக வெளிவந்தன.[1]
- உறவும் பிரிவும் (1964)
- தீக்குள் விரலை வைத்தால் (1972)
- மர்மப்பெண் (1974)
- கர்ப்பக் கிருகம் (1974)
- காகித ஓடம் (1974)
- சொர்க்கமும் நரகமும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)
- கனலும் புனலும் (மாணிக்கம் இதழ்த் தொடர்)
- அமராபுரி இளவரசனின் அற்புத சாகசங்கள் (சிறுவர் புதினம், 2011)
விருதுகளும் சிறப்புகளும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "எழுத்தாளர் கே. எஸ். ஆனந்தன்". Archived from the original on 2015-06-08. பார்க்கப்பட்ட நாள் 2014-04-27.