பை நாள்
பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).
பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் ( யின் பரவலாக அறிந்த அண்ணளவு ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.
நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது[1]. லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார்.[2]
பை நாள் கொண்டாடப்படும் நாட்கள்
தொகு- பெப்ரவரி 27 - ஆண்டு தொடக்க நாளில் இருந்து பூமி தனது ஒழுக்கை 1 ரேடியன் அளவு சுற்றிவரும் நாள்.
- மார்ச் 14 - 3.14
- ஜூலை 22: 22/7
- நவம்பர் 10: ஆண்டின் 314வது நாள் (நெட்டாண்டுகளில் நவம்பர் 9)
- டிசம்பர் 21, பிப 1:13: ஆண்டின் 355வது நாள், 1:13 மணிக்கு (இது சீன அண்ணளவாகும் (355/113)
உசாத்துணை
தொகு- ↑ Adrian Apollo (மார்ச் 10, 2007). "A place where learning pi is a piece of cake". The Fresno Bee. http://www.fresnobee.com/283/story/34436.html. பார்த்த நாள்: 2007-03-21.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ COMMENTS & CURIOSITIES: Infinitely irrational Pi Day Accessed on 2007-03-29.